Wimவிமன் இந்தியா மூவ்மெண்ட் தாராபுரம் தொகுதி

  • Home
  • India
  • Dharapuram
  • Wimவிமன் இந்தியா மூவ்மெண்ட் தாராபுரம் தொகுதி

Wimவிமன் இந்தியா மூவ்மெண்ட் தாராபுரம் தொகுதி விமன் இந்தியா மூவ்மெண்ட் தாராபுரம் தொகுதி

14/06/2026

சமையல் எரிவாயு விலை உயர்வு: ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தின் மீது மேலும் ஒரு தாக்குதல்! - SDPI மகளிரணி கடும் கண்டனம்...

இதுதொடர்பாக SDPI கட்சி மகளிரணி மாநில தலைவர் K. பாத்திமா கனி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசு வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் விலையை மீண்டும் ₹29 உயர்த்தியிருப்பதை SDPI கட்சி மகளிரணி விமன் இந்தியா மூவ்மெண்ட் கடுமையாக கண்டிக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் இது இரண்டாவது விலை உயர்வாகும். ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு, போக்குவரத்து செலவு உயர்வு போன்ற காரணங்களால் மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், இந்த விலை உயர்வு மக்களின் தலையில் மேலும் ஒரு சுமையை ஏற்றியுள்ளது.

குறிப்பாக குடும்பப் பொருளாதாரத்தை சுமந்து செல்லும் பெண்கள், இல்லத்தரசிகள், தினசரி சமையல் செலவுகளை சமாளிக்க பெரும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தையே பாதிக்கும் இந்த முடிவு முற்றிலும் மக்கள் விரோதமானதாகும்.

சர்வதேச சந்தை நிலவரங்களை காரணம் காட்டி மக்களின் மீது தொடர்ந்து சுமைகளை திணிப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும். மக்களின் நலனை முன்னிறுத்தி உடனடியாக இந்த விலை உயர்வை திரும்பப் பெறுவதோடு, சமையல் எரிவாயுவிற்கு போதுமான மானியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என SDPI கட்சி மகளிரணி சார்பாக உறுதியாக வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளார்.

19/04/2026



#வெல்வோம்இருநூறு



#திராவிடமுன்னேற்றக்கழகத்தின்
#மதச்சார்பற்றமுற்போக்குகூட்டணியின்
#தாராபுரம்

பசியிலிருந்து விடுதலை ! பயத்திலிருந்து விடுதலை !💚❤️ 🫂 🖤❤️ (17/04/2026)அன்று  மாலை  #திராவிடமுன்னேற்றக்கழகத்தின் தலைமையில...
18/04/2026

பசியிலிருந்து விடுதலை !
பயத்திலிருந்து விடுதலை !

💚❤️ 🫂 🖤❤️

(17/04/2026)அன்று மாலை #திராவிடமுன்னேற்றக்கழகத்தின் தலைமையிலான #மதச்சார்பற்றமுற்போக்குகூட்டணியின் #தாராபுரம் சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் டாக்டர். இந்திராணி MBBS,DCH. அவர்களுக்கு SDPI கட்சியின் சார்பாக வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சி 5,6,12,14 ஆகிய வார்டுகளில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் மகளிர் அணியான விமன் இந்தியா மூவ்மெண்டின் தொகுதி நிர்வாகிகள் செயல்வீரர்கள் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.



#வெல்வோம்இருநூறு






03/04/2026
03/04/2026

இன்று(03-04-2026) நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதி தலைமை தேர்தல் பணிமனை திறப்பு விழாவில்
தாராபுரம் SDPI கட்சியின் மாவட்ட தொகுதி நகர கிளை நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர்


்சி_திருப்பூர்_தெற்கு_மாவட்டம்




ாராபுரம்
ொளத்துப்பாளையம்_பேரூர்

03/04/2026
09/03/2026

*SDPI கட்சி* மகளிர் அணி *(விமன் இந்தியா மூவ்மென்ட்)* *கோவை மத்திய மாவட்டம்* சார்பாக

🌹*மௌனம் கலைப்போம்! போராடுவோம்!🌹 🌹பெண்களுக்கான நீதியை வென்றெடுப்போம்!*🌹 என்ற முழக்கத்துடன்

*8/03/2026 மகளிர் தினத்தை முன்னிட்டு*
*SDPI* கட்சி மகளிர் அணியின் *(விமன் இந்தியா மூவ்மென்ட்)* *கோவை மத்திய மாவட்டம் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது*

*“பெண்களின் திறன், துணிவு, சேவை – சமூக வளர்ச்சியின் அடித்தளம் என்று பாராட்டும் விதமாக மகளிர் தினத்தை போற்றப்பட்டது*...

திருப்பூர் தெற்கு மாவட்டம் மௌனம் கலைப்போம்! போராடுவோம்! பெண்களுக்கான நீதியை வென்றெடுப்போம் என்ற முழக்கத்தோடு SDPI  கட்சி...
09/03/2026

திருப்பூர் தெற்கு மாவட்டம்

மௌனம் கலைப்போம்!
போராடுவோம்!
பெண்களுக்கான நீதியை வென்றெடுப்போம்
என்ற முழக்கத்தோடு

SDPI கட்சியின் மகளிர் அணியின் சார்பாக
8/03/2026 இன்று
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு

தாராபுரம் தொகுதியின் சார்பாக
தாராபுரம் தொகுதி தலைவர் சபீனா அவர்கள் தலைமையில் முதியோர் இல்லத்திற்கு சென்று அவர்களுடன் கலந்து உரையாடிவிட்டு சிற்றுண்டி அவர்களுக்கு பரிமாறப்பட்டது

இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் உமைபா அவர்களும்

தொகுதி துணை தலைவர் நதீரா அவர்களும் தொகுதி நிர்வாகிகளும்

சகோதரிகளும் கலந்து கொண்டனர்

பசியிலிருந்து விடுதலை💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️பயத்தில் இருந்து விடுதலை 💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️ஈரான் நாட்டின் மீது தாக்குதல் நடத்திய ...
03/03/2026

பசியிலிருந்து விடுதலை
💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️
பயத்தில் இருந்து விடுதலை
💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️
ஈரான் நாட்டின் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை கண்டித்து கட்சி #தாராபுரம் தொகுதி சார்பாக இன்று (02/03/2026) மாலை 7.30 மணியளவில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில்

தலைமை
🌹🌹🌹🌹
M. மன்சூர் அலி
கட்சி தாராபுரம் தொகுதி தலைவர்

வரவேற்புரை
🌹🌹🌹🌹🌹🌹
M. முஹம்மது இஸ்மாயில்
தாராபுரம் தொகுதி செயற்குழு உறுப்பினர்

கண்டன கோஷம்
🌹🌹🌹🌹🌹🌹🌹
A. மன்சூர் அலி
ஜமால் புதூர் கிளை துணைத் தலைவர்

கண்டன உரை
🌹🌹🌹🌹🌹🌹
U.முகம்மதுஇர்ஃபா ன் இர்ஃபானி இமாம்
தாராபுரம் தொகுதி செயலாளர்

கண்டன கோஷம்
🌹🌹🌹🌹🌹🌹🌹
A. முகம்மது சுஹைல்

நன்றி உரை
🌹🌹🌹🌹🌹
R. சிக்கந்தர் பாதுஷா
தாராபுரம் தொகுதி செயற்குழு உறுப்பினர்

சிறப்புஅழைப்பாளர்கள்

J.சையது அபுதாஹிர்
#திருப்பூர் தெற்கு மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர்

H. முஹம்மது இலியாஸ்
#திருப்பூர் தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர்

உமைபா
விமன் இந்தியா மூவ்மெண்ட் #திருப்பூர் தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர்

M. சபீனா
விமன் இந்தியா மூவ்மெண்ட் #தாராபுரம் தொகுதி தலைவர்

மேலும் கட்சியின் தொகுதி நகர கிளை நிர்வாகிகள் செயல்வீரர்கள் விமன் இந்தியா மொமென்டின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Address

Periyakadaiveedhi
Dharapuram

Website

Alerts

Be the first to know and let us send you an email when Wimவிமன் இந்தியா மூவ்மெண்ட் தாராபுரம் தொகுதி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share