25/02/2026
*அரசு மேல்நிலைப்பள்ளி வே முத்தம்பட்டி*🌺🎍🌴 *அனைவருக்கும் வணக்கம்*🌴🙏🏼🌴🙏🏼
நமது பள்ளியில் இன்று நடைபெற்ற சமபந்தி சமபோஜன விழாவில், அனைத்து (ஏறத்தாழ 1000)மாணவ - மாணவிகளுக்கும் பாகுபாடின்றி அன்போடு வடை மற்றும் பாயாசத்துடன் கூடிய மதிய உணவைச் சிறப்பான முறையில் வழங்கியமைக்காக எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மனமார்ந்த நன்றிகள்:
*சத்துணவு அமைப்பாளர் மற்றும் அனைத்து உதவியாளர் அவர்களுக்கு*👏🏼👏🏼🌳🌳:
மாணவர்களின் நலன் கருதி, மிகுந்த அக்கறையுடனும், சுவையுடனும் உணவு தயாரித்து வழங்கிய உங்களது அர்ப்பணிப்பு போற்றுதலுக்குரியது. உங்கள் கனிவான சேவைக்கு எங்களது மனமார்ந்த பாராட்டுக்கள்.🙏🏼🙏🏼🌳
*ஆசிரியப் பெருமக்களுக்கு*🌹🌳🙏🏼:
இந்த நிகழ்வை முன்னின்று வழிநடத்தி, மாணவர்களிடையே சமத்துவத்தையும், ஒற்றுமையையும் விதைக்க உறுதுணையாக இருந்த *அனைத்து ஆசிரியர்களுக்கும்* எங்களது நன்றிகள்🙏🏼🌸🍇🌳🌴.
*உதவி செய்த மாணவர்களுக்கு*:
உணவு பரிமாறுவதிலும், மற்ற பணிகளிலும் ஒருவருக்கொருவர் உதவி செய்து, 'ஒற்றுமையே பலம்' என்பதை நிரூபித்த மாணவச் செல்வங்களுக்கும் எங்களது வாழ்த்துக்கள்.
"உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தாரே"
என்பதற்கு இணங்க, இந்த சமபந்தி விருந்து மாணவர்களின் மனதில் சமத்துவத்தையும், மகிழ்ச்சியையும் ஒருசேர விதைத்துள்ளது.
பள்ளியின் சார்பாக விருந்து சிறப்பாக நடைபெற உதவிய பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பல்வேறு வகைகளில் விருந்திற்கு அன்பளித்த அனைத்து வகை ஆசிரியர்கள் அனைவருக்கும் சிறப்பான முறையில் மாணவர்கள் அமர்ந்து சாப்பிட டென்ட் நாற்காலி மற்றும் மேசைகள் வழங்கி உதவி புரிந்த உள்ளூர் பொறுப்பாளர்களுக்கும் மீண்டும் மனமார்ந்த நன்றிகள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்🙏🏼🙏🏼🙏🏼🌳🌴