SFI Dindigul District

SFI Dindigul District இந்திய மாணவர் சங்கம்,
திண்டுக்கல் மாவட்டம்.

20/08/2026
20/08/2026

ஆத்தூர் கூட்டுறவு கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினரின் காணொளி...

கட்டண உயர்வை குறைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களை மிரட்டும் கல்லூரி முதல்வர் மீது துறை ரீதியான நடவடிக்கை வேண்டும்.

SFI Athoor Co-operative College Unit R.Sachithanantham_M.P.,

மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்கும் சுற்றறிக்கை!  போராட்ட அறைகூவலை தொடர்ந்து பின்னங்கால் பிடனியில் அடிக்க திரும்ப பெற்றது ...
19/08/2026

மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்கும் சுற்றறிக்கை!

போராட்ட அறைகூவலை தொடர்ந்து பின்னங்கால் பிடனியில் அடிக்க திரும்ப பெற்றது விஜய் அரசு...

போராட்டங்களை ஒடுக்க நினைத்தால், போராட்டங்களால் அரசை திணறடிக்க செய்வோம்...
Chief Minister of Tamil Nadu

Let's Fight For the Better India ✊🏽 இந்தியாவின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பள்ளி...
15/08/2026

Let's Fight For the Better India ✊🏽

இந்தியாவின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளில் சார்பில் இனிப்புகளும், சுதந்திர தின கொடியும் வழங்கி கொண்டாடப்பட்டது.

இடையகோட்டை நேருஜி பள்ளியில் மாவட்ட தலைவர் J.தீபக்ராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் குணசீலன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஸ்ரீதரன், ஆசிம், ஒட்டன்சத்திரம் பெண்கள் பள்ளியில் மாவட்ட செயலாளர் M.E.நிரூபன், செயற்குழு உறுப்பினர் காளீஸ்வரி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் அகிலன், கலைவாணி, திண்டுக்கல் காந்திஜி பள்ளியில் மாவட்ட து.தலைவர் துர்கா, மாவட்டக்குழு உறுப்பினர் ஸ்வேதா, கோபால்பட்டி பெண்கள் பள்ளியில் மாவட்ட இ.செயலாளர் சிவதர்ஷினி, து.தலைவர் வஜ்ரன், மஞ்சநாயக்கன்பட்டி பள்ளியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துமாணிக்கம், புனித மரியன்னை பள்ளியில் நிர்வாகி ஈழா ஆகியோர் பங்கேற்றனர்.

பள்ளி கிளை தோழர்கள் மோனிகா, ஆனந்த், பூபதி, மைத்ரேயி, அமர்நாத் ஆகியோரும் பங்கேற்றனர்.

Happy Independece day🇮🇳✊🏻The Fight for Better India will be Continued, with legacy of Bhagath Singh 💥
15/08/2026

Happy Independece day🇮🇳✊🏻
The Fight for Better India will be Continued, with legacy of Bhagath Singh 💥

ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உயர்த்தப்பட்ட கல்விக் கட்டணத்தை குறைத்திடுக!2022–23ல் ₹1,415 ஆக இருந்...
12/08/2026

ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உயர்த்தப்பட்ட கல்விக் கட்டணத்தை குறைத்திடுக!

2022–23ல் ₹1,415 ஆக இருந்த கல்விக் கட்டணம், 2025-26ல் ₹5,415 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது 2026-27 5 ₹10,415 / ₹10,060 / ₹11,960 , உயர்த்தப்பட்டுள்ளது. இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கல்லூரியின் முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் நிரந்தரமாக நியமிக்கப்படாத நிலையும் தொடர்கிறது.

எனவே,

1. உயர்த்தப்பட்ட கட்டணத்தை ரத்து செய்து, அரசு கல்லூரிகளுக்கு இணையான கட்டணம் வசூலிக்க வேண்டும்!

2. கல்லூரியை உயர்கல்வித் துறையின் கீழ் அரசு உதவி பெறும் கல்லூரியாக மாற்ற வேண்டும்!

3. கல்லூரியின் 14 துறைகளுக்கும் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்!

மாணவர் நலனைக் காக்க SFI தொடர்ந்து போராடும்!

#மாணவர்உரிமைகள்

போராடும் மாணவர்களை பழிவாங்கும் டெல்லி காவல்துறை!  அகில இந்திய இணை செயலாளர் தோழர் ஆயிஷி கோஷ் அவர்களை கைது செய்ய முயன்று அ...
28/07/2026

போராடும் மாணவர்களை பழிவாங்கும் டெல்லி காவல்துறை!

அகில இந்திய இணை செயலாளர் தோழர் ஆயிஷி கோஷ் அவர்களை கைது செய்ய முயன்று அராஜகம்...

வன்மையான கண்டனங்கள்!

டெல்லி ஜந்தர் மந்தரில் துவங்கி இந்திய நாடு முழுவதும் நடைபெற்ற  மாணவர்கள் இளைஞர்களின் போராட்டத்தின் வெற்றி பேரணி திண்டுக்...
27/07/2026

டெல்லி ஜந்தர் மந்தரில் துவங்கி இந்திய நாடு முழுவதும் நடைபெற்ற மாணவர்கள் இளைஞர்களின் போராட்டத்தின் வெற்றி பேரணி திண்டுக்கல்லில் நடைபெற்றது!

Address

LGB Compound
Dindigul

Alerts

Be the first to know and let us send you an email when SFI Dindigul District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to SFI Dindigul District:

Shortcuts

Share