Thirumahan Everaa

Thirumahan Everaa Member of Legislative Assembly ( MLA )
General Secretary - Tamilnadu Congress Committee
AICC MEMBER

Member of Legislative Assembly - Erode East
General Secretary
Ex-Chairman

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களின் மறைவையொட்டி, அவரது மனைவி திருமதி. வரலஷ்...
18/12/2024

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களின் மறைவையொட்டி, அவரது மனைவி திருமதி. வரலஷ்மி இளங்கோவன் அவர்களுக்கு நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்கள் அனுப்பிய இரங்கல் கடிதம்

பெண்ணுரிமைப் பெரியார் மாண்புமிகுதமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் பேர...
18/12/2024

பெண்ணுரிமைப் பெரியார் மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர்
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்

தந்தை பெரியார் அவர்களின் பேரன்
காங்கிரஸ் பேரியக்கத்தின்
மூத்தத் தலைவர்.
முன்னாள்
மத்திய அமைச்சர். முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்,
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர், தன்மானத் தலைவர்
மானமிகு தெய்வத்திரு
EVKS.இளங்கோவன் அவர்கள்
மறைவுக்கு

அரசு மரியாதை செய்தார்கள்

அதனைத் தொடர்ந்து

தன்மானத் தலைவர் EVKS.இளங்கோவன்
அவர்கள்
இளைய மகன்

தந்தை பெரியார் குடும்பத்தின் சார்பில்
அவரது தாயார் வரலட்சுமி இளங்கோவன் அவர்கள் சார்பில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை 18/12/2024 நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த போது

என்றும் அன்புடன்
E.சஞ்சய் சம்பத்

தந்தை பெரியார் பேரன், சொல்லின் செல்வர் ஈ.வெ.கி. சம்பத் அவர்களின் தலைமகன், தமிழக காங்கிரஸ் தொண்டர்களால் தன்மானத் தலைவர் எ...
16/12/2024

தந்தை பெரியார் பேரன், சொல்லின் செல்வர் ஈ.வெ.கி. சம்பத் அவர்களின் தலைமகன், தமிழக காங்கிரஸ் தொண்டர்களால் தன்மானத் தலைவர் என்று அன்போடு அழைக்கப்பட்ட எனது தந்தை திரு. EVKS இளங்கோவன் அவர்கள் உடல் நலம் குன்றி மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 14-12-2024 சனிக்கிழமை காலை நம்மை விட்டு பிரிந்தார்.

மத்திய அமைச்சர், மூன்று முறை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் என்று பல்வேறு பொறுப்புகளில் தனித்துவத்தோடு செயல்பட்டு, மக்களின் பிரச்னைகளை தனக்கே உரிய பாணியில் பளிச்சென எடுத்துரைத்த அவரது அரசியல் பயணத்தை தமிழகம் நன்கு அறியும்.

எனது தந்தையார் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்தவுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மருத்துவமனைக்கே அமைச்சர் பெருமக்களுடன் நேரில் வந்து அவரது உடல்நிலையை அக்கறையுடன் கேட்டறிந்து, தொடர்ந்து மருத்துவர்களிடம் ஆலோசனை செய்து மேற்கொண்டதோடு,
அவர் இயற்கை எய்திய சில மணி நேரத்திலேயே எங்கள் இல்லத்திற்கு வருகை தந்து எங்களுக்கு ஆறுதல் வழங்கினார். இறுதி சடங்கு நடைபெற்ற மறுநாளும் எங்கள் இல்லத்திற்கு வருகை தந்து ஆறுதல் கூறியதோடு இறுதி சடங்கு ஏற்பாடுகளை எங்கள் குடும்பத்தின் மூத்த அண்ணனாய் கேட்டறிந்து, எனது தந்தையின் உடல், முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்ற அரசு உத்தரவையும் பிறப்பித்து எனது தந்தைக்கு பெருமை சேர்த்தார்.
திராவிட பாரம்பர்யமும், தேசிய சிந்தனையும் கொண்ட எங்கள் குடும்பம் அதே வழியில் என்றும் பயணிக்கும்.
துயரமான இந்த வேளையில் எங்களுக்கு துணை நின்ற தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப் பெருந்தகை அவர்களுக்கும், அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே அவர்களுக்கும், தொலைபேசி வாயிலாக எங்களுக்கு ஆறுதல் கூறிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கும் மூத்த காங்கிரஸ் தலைவர்களுக்கும், கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும், திமுக, காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கும், மற்றும் அனைத்து கட்சி தலைவர்கள், தொண்டர்கள், பொது மக்களுக்கும், காவல்துறை மற்றும் பத்திரிக்கை நண்பர்களுக்கும் எங்களுக்கு நேரிலும், அலைபேசி வாயிலாகவும் ஆறுதல் வழங்கி, இறுதி அஞ்சலி நிகழ்வில் எங்களோடு தோள் நின்ற அனைவருக்கும் என் தாயார் வரலட்சுமி இளங்கோவன் அவர்கள் சார்பிலும், தந்தை பெரியார் குடும்பம் சார்பிலும் எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்றும் அன்புடன்

இ. சஞ்சய் சம்பத்

https://m.facebook.com/story.php?story_fbid=903156521254904&id=100046816943196&mibextid=Nif5oz
04/01/2024

https://m.facebook.com/story.php?story_fbid=903156521254904&id=100046816943196&mibextid=Nif5oz

தமிழ்நாடு காங்கிரஸ் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமுக ஊடகத்துறை முன்னாள் தலைவரும், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் பொதுச்செயலாளரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான திரு. திருமகன் ஈ.வெ.ரா அவர்களின் நினைவு தினமான இன்று அவருக்கு எங்களது நினைவஞ்சலி.

28/02/2023
சென்று வா எங்கள் அண்ணனே எங்கள் நண்பனே அயராது துயரத்தில்  தவிக்க விட்டு நீ விடைபெறுகிறாய்... நீ செல்லும் உலகத்திலும் உனது...
05/01/2023

சென்று வா எங்கள் அண்ணனே எங்கள் நண்பனே அயராது துயரத்தில் தவிக்க விட்டு நீ விடைபெறுகிறாய்... நீ செல்லும் உலகத்திலும் உனது அன்பு சாம்ராஜ்ஜியம் தொடரட்டும்

இரண்டு சூரியன் மறைந்த நாள்
04/01/2023

இரண்டு சூரியன் மறைந்த நாள்

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்Wish you a very happy new year 2023                                 ...
31/12/2022

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Wish you a very happy new year 2023

சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை துறைமுகத்தில் உள்ள அவரது சிலைக்கு கீழே வைக்கப்பட்...
06/12/2022

சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை துறைமுகத்தில் உள்ள அவரது சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கு முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் E.V.K.S இளங்கோவன், கே. வி தங்கபாலு, கிருஷ்ணசாமி, சு.திருநாவுக்கரசர் MP, காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் செல்வப் பெருந்தகை ஆகியோர், மாவட்ட தலைவர்கள், மற்றும் முன்னணி காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்

05/12/2022 அன்று தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் மாண்புமிகு சு.முத்துசாமி அவர்களும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் E....
06/12/2022

05/12/2022 அன்று தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் மாண்புமிகு சு.முத்துசாமி அவர்களும்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் E.திருமகன் ஈவெரா MLA அவர்களும் ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட RKV சாலையில் 29 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நவீன காய்கறி சந்தை வளாகத்தை பார்வையிட்டு காய்கறி சரக்கு வாகன போக்குவரத்துக்கும். காய்கறி வியாபாரிகள் எவ்வித தடையும் இன்றி
வியாபாரம் செய்வதற்கும் ஏற்ப கட்டிட அமைப்புகளை ஏற்படுத்திட ஆலோசனைகள் வழங்கினர்.மேலும் ஏற்கனவே இங்கு பல ஆண்டுகளாக வியாபாரம் செய்த வியாபாரிகளுக்கே கடைகளை ஒதுக்கீடு செய்து உதவிட வேண்டுமென மாண்புமிகு அமைச்சர் மற்றும் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரிடம் வியாபாரிகள் சங்கம் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.இந்த ஆய்வின் போது ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் T.திருச்செல்வம்,மாவட்ட துணை தலைவர் ராஜேஷ் ராஜப்பா, இரண்டாம் மண்டல காங்கிரஸ் கமிட்டி தலைவர் விஜயபாஸ்கர்,ஈரோடு மாநகர திமுக செயலாளர் சுப்ரமணியம் அவர்களும் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பிரகாஷ்,ஈரோடு மாநகராட்சி ஆணையர் அவர்களும் மற்றும் திமுக காங்கிரஸ் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Address

161-Katcheri Street
Erode
638001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thirumahan Everaa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Thirumahan Everaa:

Share