30/11/2023
*_அரசு பொதுத் தேர்வு எழுதும் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ,மாணவியர்களுக்கு..!_*
நமது AGR கல்வி அறக்கட்டளை தொடர்ந்து 13 ஆண்டுகளாக 100% வெற்றியை பெற்று வந்துள்ளது. அந்த வகையில் இந்த கல்வியாண்டிற்கும் அதனை உறுதி செய்யும் வகையில் தொடர்ந்து சிறப்பு பயிற்சிகள், தொகுக்கப்பட்ட தேர்வுகள், சிறப்பு வகுப்புகள் ஆகியன நடத்தப்பட்டு, எந்த கல்வியாண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு மாணவச் செல்வங்களாகிய உங்களுக்கு பயிற்சிகளை வழங்கி வருகிறோம். அந்த வரிசையில் பொதுத் தேர்வினை திறம்பட எதிர் கொள்ள படிப்பது எவ்வளவு அவசியமோ , அதே அளவு பதற்றமில்லா, தெளிவான மன நிலையும் அவசியம். அதற்கென ஒவ்வொரு ஆண்டும் மன நல ஆலோசகர்கள் , தன்னம்பிக்கை பேச்சாளர்களை அழைத்து வந்து மாணவ,மாணவியர்களுக்கு மன நலம் பேணுதல் குறித்த பயிற்சியும் , தன்னம்பிக்கை சொற்பொழிவும் நடத்துவது வழக்கம்.
இந்த ஆண்டிற்கான தன்னம்பிக்கை மற்றும் மன நலம் பேணுதலுக்கான பயிற்சியினையும் , சிறப்புரையினையும் KSR பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியின் இயக்குனரும், தன்னம்பிக்கை பேச்சாளரும் , 11க்கும் மேற்பட்ட சர்வதேச கருத்தரங்கில் உரையாற்றியவருமான மதிப்பிற்குரிய முனைவர். R. நந்தகுமார் ஐயா அவர்களும், AJS அறக்கட்டளை தலைவரும் , சமூக செயற்பாட்டாளருமான மதிப்பிற்குரிய பொறியியல் வல்லுனர் உயர்திரு. A.J.சரவணன் ஐயா அவர்களும் வருகின்ற 02/12/2023 சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் நமது மாணவச் செல்வங்களிடையே உரையாற்றுவார்கள். வெற்றிக்கு முயற்சியும் , பயிற்சியும் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு மன வலிமையும் முக்கியம் என்பதுணர்ந்து பெற்றோர்களும், மாணவ,மாணவியர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு பயன் பெற அன்போடு அழைக்கின்றோம்.
இப்படிக்கு ,
AGR கல்வி அறக்கட்டளை நிர்வாகம், ஈரோடு.