மனிதநேய ஜனநாயக கட்சி ஈரோடு மேற்கு

  • Home
  • India
  • Erode
  • மனிதநேய ஜனநாயக கட்சி ஈரோடு மேற்கு

மனிதநேய ஜனநாயக கட்சி ஈரோடு மேற்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஈரோடு மேற்கு மாவட்ட முகநூல் பக்கம்

 #தீவிரவாதம்_ஒழியட்டும்! #நமது_ராணுவத்திற்கு_துணை_நிற்போம் ! ைவர்_மு_தமிமுன்_அன்சாரி_அறிக்கை!இந்தியாவுக்கு எதிராக எல்லை ...
08/05/2025

#தீவிரவாதம்_ஒழியட்டும்!

#நமது_ராணுவத்திற்கு_துணை_நிற்போம் !

ைவர்_மு_தமிமுன்_அன்சாரி_அறிக்கை!

இந்தியாவுக்கு எதிராக எல்லை தாண்டி செயல்படும் தீவிரவாத முகாம்களின் மீது 'ஆப்ரேஷன் சிந்துர் ' என்ற பெயரில் நமது ராணுவம் எடுத்த நடவடிக்கை பாராட்டுக்குரியது.

தீவிரவாதம் முற்றிலுமாக ஒழியும் வரை இந்த நடவடிக்கைகள் தொடர வேண்டும்.

இத்தாக்குதலை தலைமையேற்று நடத்திய கர்ணல் சோபியா குரேஷி, விங் கமெண்டர் வியோமிகா சிங் உள்ளிட்ட வீரப் பெண்மணிகளை நினைத்து நாடு பெருமிதம் கொள்கிறது.

இதில் சோபியா குரேஷி ராணுவ குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவரது தந்தை ஒரு இமாம் (மத போதகர்) என்பதும் ஊடகங்களால் கொண்டாடப்படுகிறது.

இத்தகைய சிறப்புமிகு ராணுவ வீரர் மற்றும் வீராங்கனைகளின் உணர்வுகளோடு நாட்டு மக்கள் இரண்டற கலந்து நிற்கின்றனர்.

பொது மக்களுக்கு பாதிப்பின்றி, தீவிரவாதிகளை மட்டுமே குறி வைத்து தாக்கும் நடவடிக்கை என்பது ஒரு சிறந்த ராணுவ அணுகுமுறை என்பதில் ஐயமில்லை.

நமது நாட்டின் எல்லையையும், மக்களையும் காக்கும் போராட்டத்தில் நமது ராணுவத்திற்கு துணை நிற்போம் என மனிதநேய ஜனநாயக கட்சி சூளுரைக்கிறது.

இவண்,

மு. தமிமுன் அன்சாரி
தலைவர்
மனிதநேய ஜனநாயக கட்சி
07.05.2025

01/05/2025
 #காஷ்மீரில்_சுற்றுலா_பயணிகள்_மீது_தாக்குதல்! #இது_காட்டுமிராண்டித்தனமானது! #கோழைத்தனமானது! ைவர்_மு_தமிமுன்_அன்சாரி_கடும...
23/04/2025

#காஷ்மீரில்_சுற்றுலா_பயணிகள்_மீது_தாக்குதல்!

#இது_காட்டுமிராண்டித்தனமானது! #கோழைத்தனமானது!

ைவர்_மு_தமிமுன்_அன்சாரி_கடும்_கண்டனம்!

காஷ்மீரின் பஹல்காம் என்ற இடத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

மகிழ்ச்சி மற்றும் பொழுது போக்குக்காக வந்த அப்பாவிகள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் கோழைத்தனமானது.

அப்பாவிகளின் உயிர்களையும், ஊர் சுற்றிப் பார்ப்பவர்களின் உரிமைகளையும் பறிப்பது என்பது காட்டுமிராண்டித்தனமானது.

இத்தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித நேய ஜனநாயகக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி,
தலைவர்,
மனிதநேய ஜனநாயக கட்சி
23.04.2025

 ுண்டறிக்கை_பரப்புரை! ஏப்ரல்.21.,புதிய வக்புச் சட்டத்துக்கு எதிராக, நாட்டில் கடும் எதிர்ப்புகள் நிலவி வருகிறது. எல்லா மா...
22/04/2025

ுண்டறிக்கை_பரப்புரை!

ஏப்ரல்.21.,

புதிய வக்புச் சட்டத்துக்கு எதிராக, நாட்டில் கடும் எதிர்ப்புகள் நிலவி வருகிறது. எல்லா மாநிலங்களிலும் மக்கள் போராட்டங்களை தொடங்கியுள்ளனர்.

கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி முதல், தமிழ்நாட்டில் மனிதநேய ஜனநாயக கட்சி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

இதுவரை மஜக தமிழ்நாடெங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்களை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதன் ஒரு பகுதியாக இச்சட்டத்தின் அவலங்களை விளக்கி, ஒரு கோடி மக்களை சந்திக்கும் வகையில், ஏப்ரல் 10 முதல் மே 10 வரை ஒரு மாத காலத்திற்கு, துண்டறிக்கை பரப்புரை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தொடர்ச்சியாக இன்று ஈரோடு மேற்கு மாவட்டத்தில் சத்தியமங்கலத்தில் முக்கிய ஜமாத் பிரமுகர்கள், பொது மக்கள் ஆகியோரை சந்தித்து துண்டறிக்கை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கட்சியின் மாநில இணை பொதுச்செயலாளர் கேப்டன் சையது அஹமது பாரூக், மேற்கு மாவட்ட துணை செயலாளர், பாபுலால், நகர செயலாளர் சலீம், நகர அவைத்தலைவர் அமானுல்லா, மாணவர் இந்தியா நகர செயலாளர் ரிஹான், இர்பான் , இர்பான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல் :
்_தொழில்நுட்ப_அணி

# ஈரோடு மேற்கு_மாவட்டம்
21.04.2025

 #ஈரோட்டில்... #வக்பு_சட்ட_எதிர்ப்பு_பொதுக்கூட்டம்... ாவட்ட_செயலாளர்_கவுந்தி_சாகுல்_அமீது_பங்கேற்று_கண்டன_உரையாற்றினார்....
14/04/2025

#ஈரோட்டில்...

#வக்பு_சட்ட_எதிர்ப்பு_பொதுக்கூட்டம்...

ாவட்ட_செயலாளர்_கவுந்தி_சாகுல்_அமீது_பங்கேற்று_கண்டன_உரையாற்றினார்..!

ஏப்ரல்.14.,

ஒன்றிய ஃபாசிச பாஜக அரசு கொண்டு வந்துள்ள வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக நாடெங்கிலும் ஜனநாயக வழியிலான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் ஜமாத்துல் உலமா சபை சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பேச்சாளர்கள் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

அதன் ஒரு நிகழ்வாக ஈரோடு மாவட்ட ஜமாத்துல் உலமா சபை சார்பில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் கவுந்தி சாகுல் அமீது, பங்கேற்று ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன உரையாற்றினர்.

இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் அந்தியூர் ஷாநவாஸ்,
ஈரோடு கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் முஹம்மது ஹாரிஸ், ஈரோடு மேற்கு மாவட்ட துணை செயலாளர் ஷபி, மற்றும் பகுதி, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட திரளான மனிதநேய சொந்தங்கள் பங்கேற்றனர்.

தகவல்;
்_தொழில்நுட்ப_அணி


#ஈரோடு_மேற்கு_மாவட்டம்
13.04.2025

 #சத்தியமங்கலத்தில் ... #புதிய_வக்பு_சட்டத்தை_எதிர்த்து!! #சத்தியமங்கலம்_ஜமாத்_சார்பில்_ஆர்பாட்டம்!!! ை_பொதுச்செயலாளர்_க...
11/04/2025

#சத்தியமங்கலத்தில் ...

#புதிய_வக்பு_சட்டத்தை_எதிர்த்து!!

#சத்தியமங்கலம்_ஜமாத்_சார்பில்_ஆர்பாட்டம்!!!

ை_பொதுச்செயலாளர்_கேப்டன்_பாருக்_கண்டன_உரை...

ஏப்ரல்:11,.

சர்வாதிகார போக்குடன், கடும் எதிர்ப்புகளையும் மீறி, ஒன்றிய பாஜக கூட்டணி அரசு வக்பு திருத்த சட்டத்தை நிறைவேற்றி உள்ளது.

நாடு முழுக்க ஜனநாயக சக்திகள் தங்களின் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

இதன் ஒரு பகுதியாக ஈரோடு மேற்கு மாவட்டம் சத்தியமங்கலம் பெரிய பள்ளிவாசல் முன்பு ஜமாத் சார்பாக கறுப்பு பேட்ச் அணிந்து இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் இணை பொதுச்செயலாளர் சையது அஹமது பரூக் கண்டன உரை நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் மற்றும் ஜமாஅத்தார்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு ஆவேசத்துடன் ஒன்றிய பாசிச அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

தகவல்:
்_தொழில்நுட்ப_அணி

#ஈரோடு_மேற்கு_மாவட்டம்
11.04.2025.

06/04/2025

#பெரும்பான்மை_என்பது_சர்வாதிகாரமல்ல...

#வக்பு_சட்டத்தை_நிறைவேற்றிய_ஒன்றிய_அரசுக்கு_எதிராக_போராட்டங்கள்_அறிவிப்பு!

#இது_மாபெரும்_மக்கள்_எழுச்சியின்_தொடக்கம்!

ைவர்_மு_தமிமுன்_அன்சாரி_அறிக்கை!

இந்தியாவின் ஜனநாயகம் மதவெறியர்களால் பலமுறை படுகாய படுத்தப்பட்டிருக்கிறது.

1948-ஆம் ஆண்டு தீவிரவாதி கோட்சேயால் காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்டபோதும், 1992-ஆம் ஆண்டு டிசம்பர் ஆறாம் நாள் மதவெறி குண்டர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டப்போதும் இந்த நாட்டின் ஜனநாயகம் வலியால் துடித்தது.

தற்போது அதிகார பலம் இருக்கிறது என்ற ஆணவத்தில், சட்டத்தின் பெயரால் நாடாளுமன்றத்திலேயே ஒரு ஜனநாயக படுகொலையை செய்திருக்கிறார்கள்.

வக்பு சட்டத்தை நிறைவேற்றியதன் மூலமாக கோட்சேவின் கொள்கை வாரிசுகள் தங்களின் மற்றொரு ஃபாசிச முகத்தை வெளிக்காட்டியிருக்கிறார்கள்.

முஸ்லிம் சமுதாயம் ரமலான் பண்டிகையை கொண்டாடி, 24 மணி நேரம் கழிவதற்கு உள்ளாகவே, அவர்களை நெருக்கடியில் ஆழ்த்தியிருக்கிறார்கள்.

ஃபாசிஸ்டுகளின் இத்தகைய கொடூர மனநிலையை என்னவென்பது?

மக்களவையிலும், பிறகு மாநிலங்களவையிலும் வக்பு திருத்த சட்டத்தை முறையான விவாதங்களுடன் நடத்தி வெற்றி கண்டதாக ஒன்றிய பாஜக கூட்டணி அரசு இறுமாப்புடன் சிரிக்கிறது.

'பெரும்பான்மை பலம் என்பது சர்வாதிகாரம் அல்ல' என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்திய மண்ணின் செல்வங்களான 22 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்களின் இதயங்களை நொறுக்கிவிட்டு; அவர்களை துயரத்தில் ஆழ்த்தி விட்டு ஒரு சட்டத்தை நிறைவேற்றி இருப்பதை அவர்கள் வெற்றியாக கருதலாம்.

பல நூறு ஆயுதங்களை வைத்திருக்கும் ஒரு பலசாலி, எந்த ஆயுதங்களுமற்ற ஒரு எளியவனை வீழ்த்துவதை வெற்றியாகவோ, பெருமையாகவோ கருத முடியாது என்பதை ஃபாசிஸ்டுகள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு சமூகத்தை வலியால் துடிக்க வைத்து விட்டு; அவர்களின் மீது நெருப்பை அள்ளி கொட்டி விட்டு; அந்த சமூகத்தின் நலனுக்காகத்தான் எல்லாவற்றையும் செய்கிறோம் என்று; உண்மைக்கு மாறாக பேச கோட்சேவின் வாரிசுகளால் மட்டும் தான் முடியும்.

இத்தருணத்தில் ஜனநாயகத்தை காக்கும் அறப்போரில், இந்த சட்டத்துக்கு எதிராக மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிர்த்து வாக்களித்த இந்தியா கூட்டணி கட்சிகளுக்கும், இதர கட்சிகளுக்கும், அவர்களின் மக்கள் பிரதிநிதிகளுக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

குறிப்பாக இச்சட்டத்திற்கான மசோதாவின் ஆரம்ப நிலையிலிருந்தே; வலிமையான கொள்கை பலத்துடனும்; உரிய புள்ளி விவரங்களுடன் தங்களின் பிரதி நிதிகளை செயலாற்றிட செய்த திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், அக்கட்சியின் தலைவர் மாண்புமிகு முதல்வர் அண்ணன் தளபதி திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் கூடுதல் நன்றிகளை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கின்றோம்.

சிறுபான்மை முஸ்லிம் சமுதாய மக்கள் மிகுந்த தைரியத்தோடு இருக்க வேண்டிய நேரம் இது.

அவர்கள் நம்பிக்கை இழக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஏனெனில் நாட்டில் வாழும் பெரும்பான்மை இந்து பெருங்குடி மக்கள், முஸ்லிம்களின் இந்த வேதனையை உணர்ந்து கொண்டு; தங்களுடைய ஆறுதலையும், வருத்தங்களையும் தெரிவிக்கிறார்கள்.

அவர்கள் ஃபாசிஸ்டுகளின் இந்த அநீதியை ஏற்கவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

நாட்டிலுள்ள ஜனநாயக ஆற்றல்களும், முதன்மையான தலைவர்களும் முஸ்லிம்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து வாதாடி வருகிறார்கள்.

இந்த நாட்டில் ஃபாசிஸ்டுகள், எவ்வளவுதான் மத வெறியை பற்ற வைத்தாலும்; அதை அணைப்பதற்கான தீயணைப்பு வாகனங்களாக அவர்கள் எல்லாம் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.

ஒன்றிய பாஜக கூட்டணி அரசு கொண்டு வந்திருக்கும் இந்த கருப்பு சட்டத்திற்கு எதிராக, மனிதநேய ஜனநாயக கட்சி அனைத்து ஜனநாயக ஆற்றல்களுடனும் இணைந்து தொடர்ந்து களமாடும்.

அது போல் சட்ட நடவடிக்கைகளிலும் சமரசம் இன்றி செயலாற்றும்.

உடனடி எதிர்வினையாக; ஒன்றிய அரசின் ஃபாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக; துறைமுகம், விமான நிலையம், ரயில் நிலையம், தபால் தந்தி அலுவலகம், BSNL அலுவலகம், அகில இந்திய வானொலி நிலையம், தூர்தர்ஷன் தொலைக்காட்சி உள்ளிட்ட ஒன்றிய அரசின் நிலையங்களின் முன்பாக ஆர்ப்பாட்டம் மற்றும் முற்றுகை போராட்டங்கள் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு தொடர்ந்து நடத்தப்படும் என்பதை அறிவிப்பு செய்கிறோம்.

இது ஒரு மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தின் துவக்கம் தான் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,

மு. தமிமுன் அன்சாரி,
தலைவர்,
மனிதநேய ஜனநாயக கட்சி
04.04.2025

 #ஈரோடு_மேற்கு ...  #சத்தியமங்கலத்தில் ...  #மஜகவினர்_ஆர்ப்பரிப்பு!!ஏப்ரல்:., 5சர்வாதிகார போக்குடன், கடும் எதிர்ப்புகளைய...
06/04/2025

#ஈரோடு_மேற்கு ...

#சத்தியமங்கலத்தில் ...

#மஜகவினர்_ஆர்ப்பரிப்பு!!

ஏப்ரல்:., 5

சர்வாதிகார போக்குடன், கடும் எதிர்ப்புகளையும் மீறி, ஒன்றிய பாஜக கூட்டணி அரசு வக்பு திருத்த சட்டத்தை நிறைவேற்றி உள்ளது.

நாடு முழுக்க ஜனநாயக சக்திகள் தங்களின் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

ஈரோடு மேற்கு மாவட்டம் சத்திய மங்கலம் பஸ்நிலையம் அருகில் மாநில _*இணை பொது செயலாளர் சையது அஹமது பாரூக்*_ தலைமையில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தோழமை கட்சிகள் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினர், மேலும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆவேசத்துடன் பதாகைகளை ஏந்தி, ஒன்றிய பாசிச அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

மாநில துணைச்செயலாளர் அந்தியூர் ஷானவாஸ், மாவட்ட செயலாளர் சாகுல் அமீது, பொருளாளர் அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள், ஜாஹிர் உசேன், பாபுலால், முகமது ஷபி நஜீர், மாவட்ட இனளஞரணி செயலாளர் முஜபர் கான், இளைஞரணி பொருளாளர் மெஸ் பாபு, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் முபாரக், மற்றும் நகர செயலாளர் சலீம் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் சத்தியமங்கலம் ஜமாத் தலைவர் ஹாஜி S.N. நதீமுல்லாகான்,
ஜானகி ராமசாமி நகர மன்ற தலைவர், திருப்பூர் குணா இந்திய கம்யூனிஸ்டு கட்சி, அப்துல்லா தமிழ் புலிகள் கட்சி, பொன்னுசாமி ஆதி தமிழர் பேரவை, காதர் பாஷா மனிதநேய மக்கள் கட்சி, ஆசிப் பல்சமய இயக்கம், S A ஜஹாங்கிர் காங்கிரஸ் சிறுபான்மை அணி மாவட்ட தலைவர், S.A.அஸ்கர் அலி , இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் , பொன் தம்பி ராஜா விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆகிய தோழமை கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.

தகவல்:

்_தொழில்நுட்ப_அணி

#ஈரோடு_மேற்கு
05.04.2025.

Address

ஈரோடு
Erode

Website

Alerts

Be the first to know and let us send you an email when மனிதநேய ஜனநாயக கட்சி ஈரோடு மேற்கு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share