24/11/2020
நிவர் புயல்: நிவாரண பணிகளுக்குத் தயார் நிலையில் தமுமுக!
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் (பொறுப்பு) முனைவர் ஜெ.ஹாஜா கனி வெளியிடும் அறிக்கை:
தமிழகத்தில் இயற்கைப் பேரிடர் ஏற்படும் வேளைகளில் கால் நூற்றாண்டு காலமாக துயரங்களை சந்திக்கும் மக்களுக்கு உதவிடும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்.
நிவர் புயலால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிடத் தயார் நிலையில் உள்ளது.
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் நிவர் புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு உதவிடுவதற்காக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் தயார் நிலையில் உள்ளார்கள்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அவசர உதவி ஊர்திகளும் மக்களுக்கு உதவிடுவதற்காக தயார் நிலையில் உள்ளது.
திருவள்ளுர் கிழக்கு, வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, கிழக்கு தென் சென்னை மேற்கு, செங்கல்பட்டு வடக்கு, செங்கல்பட்டு தெற்கு, விழுப்புரம், கடலூர் வடக்கு, கடலூர் தெற்கு, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு, புதுக்கோட்டை கிழக்கு, இராமநாதபுரம் கிழக்கு மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தமுமுக தொண்டர்களும் ஆம்புலன்சுகளும் தயார் நிலையில் உள்ளார்கள்.
புதுவை மாநிலம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் தமுமுக தொண்டர்கள் மக்களுக்கு உதவிட தயார் நிலையில் உள்ளார்கள்.
இறைவனிடம் பாதுகாப்புத் தேடியவர்களாக இந்தப் பேரிடரை எதிர்கொள்வோம்..
இப்படிக்கு..
ஜெ.ஹாஜா கனி
பொதுச் செயலாளர் (பொறுப்பு)
https://m.facebook.com/story.php?story_fbid=2224095121068383&id=243228229155092