மக்கா பள்ளிவாசல் கம்பம் INTJ

  • Home
  • India
  • Kambam
  • மக்கா பள்ளிவாசல் கம்பம் INTJ

மக்கா பள்ளிவாசல் கம்பம் INTJ நன்மையை விதைப்போம் நன்மையை மட்டுமே செய்வோம்..

மனித நேயத்தை விதைப்போம் மனித நேய பணிகளை மட்டும் செய்வோம்.
💚🖤

04/09/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு,,,

இன்றைய ஜுமுஆ உரை,
சகோதரர்,,, வாசிம் அக்ரம்

தலைப்பு :
நாவும் நரகமும்

இடம் :மக்கா பள்ளிவாசல்
கம்பம்.....

கம்பம் மக்கா பள்ளிவாசலில் இந்த வார ஜும்ஆ இன்ஷா அல்லாஹ்..
03/09/2026

கம்பம் மக்கா பள்ளிவாசலில் இந்த வார ஜும்ஆ இன்ஷா அல்லாஹ்..

02/09/2026

கம்பம் மக்கா பள்ளிவாசல் நடத்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு கட்டுரை போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சி தொகுப்பு..

கம்பம் மக்கா பள்ளிவாசல் கட்டுமான பணிகளுக்கு பொருட்களாக கொடுத்து உதவி செய்யுங்கள்.பதிவு நாள்: 01.09.2026 செவ்வாய் கிழமை.....
01/09/2026

கம்பம் மக்கா பள்ளிவாசல் கட்டுமான பணிகளுக்கு பொருட்களாக கொடுத்து உதவி செய்யுங்கள்.

பதிவு நாள்: 01.09.2026 செவ்வாய் கிழமை..

தேனி மாவட்டம் கம்பம் மக்கா பள்ளிவாசல் கட்டுமான பணிகள் பொருளாதார நெருக்கடியின் காரணமாக தற்போது நின்று உள்ளது.

தற்போது வேலை துவங்க

23,000 செங்கல்கள்

600 மூடை சிமெண்ட்

9 டிப்பர் மணல் தேவை படுகிறது.

உங்கள் பொருளாதார உதவிகளை செய்து இறைவன் இடத்தில் கிடைக்கும் நிரந்தர நன்மையை பெறுங்கள்.

வங்கி கணக்கு விபரம்.
ACOUNT NAME:
INDIAN BANK
AL MATHARSADUS SALIHEEN
ACCOUNT NUMBER:
7409156998
IFSC CODE: IDIB000C131
CUMBUM BRANCH.

Contact
+919025381996
+919087172781

இப்படிக்கு
கம்பம் மக்கா பள்ளிவாசல்.
60 அடி ரோடு எத்திம்கானா எதிரில்
கம்பம் மெட்டு சாலை
கம்பம் தேனி மாவட்டம்.

கட்டுரை போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத சகோதரர்கள் சகோதரிகளுக்கு இன்று பரிசுகள் சான்றிதழ் வழங்கப்பட...
01/09/2026

கட்டுரை போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத சகோதரர்கள் சகோதரிகளுக்கு இன்று பரிசுகள் சான்றிதழ் வழங்கப்பட்டது.

டாக்டர் சையத் அபுதாகிர் அவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது

சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு கட்டுரை போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சி கம்பத்தில் இறைவன் அருளால் மிக சிறப்பாக நடைபெற்றது...
31/08/2026

சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு கட்டுரை போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சி கம்பத்தில் இறைவன் அருளால் மிக சிறப்பாக நடைபெற்றது.

சுதந்திர போராட்ட வீரர்கள் பேரன்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கம்பத்தின் ஆளுமைகள் கலந்து கொண்டு உரையாற்றி பரிசுகள் வழங்கினார்கள்..

தேனி மாவட்டம் கம்பம் நகரம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கம்பம் மக்கா பள்ளிவாசல் நடத்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு கட்டுரை போட்டி கடந்த ஒரு மாதமாக நடைபெற்றது.

இதில் 300 க்கும் அதிகமாக சகோதரர்கள் சகோதரிகள் மாணவர்கள் மாணவிகள் என கட்டுரை எழுதினார்கள்.

அந்த கட்டுரையை தலைமை ஆசிரியர் ஜாபர் சித்திக் அவர்கள் தலைமையில் பேராசிரியர்கள் ஆசிரியர்கள் கொண்ட குழு தேர்வு செய்யும் பணி நடைபெறுகிறது.

அதை தொடர்ந்து 30.08.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு 24 மனை தெலுங்கு செட்டியார் மண்டபத்தில் கட்டுரை போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் யாசர் அராபத் தலைமையில் துவங்கிய நிகழ்ச்சியில்.

மாவட்ட தலைவர் ராஜா முஹம்மது மாவட்ட முன்னாள் தலைவர் ஜமால் முஹையதீன் மாவட்ட செயலாளர் முபாரக் அலி மாவட்ட பொருளாளர் சிட்டி சாகுல் ஹமீது.. மாவட்ட ஊடக பிரிவு செயலாளர் அஜ்மீர் காஜா..

மதரஸத்துஸ் ஸாலிஹீன் அரபி கல்லூரி முதல்வர் மெளலவி சாகுல் ஹமீது பாக்கவி அவர்கள் ஆசிரியர் பஷிர் மன்பஈ அவர்கள் கம்பம் மக்கா பள்ளிவாசல் தலைமை இமாம் மெளலவி முஹம்மது இஸ்ஹாக் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் பொருளாளர் முஸ்தாக் தேனி நிர்வாகிகள் பெரியகுளம் நிர்வாகிகள் தேவதானப்பட்டி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

கம்பம் நகர செயலாளர் சாகுல் நகர துணை தலைவர் காஜா நவாஸ் கான் , நகர துணை செயலாளர் சல்மான் பாரிஸ் ராஜா சையத் முஹைதீன் வர்த்தக அணி செயலாளர் உமர் பாருக் மாணவர் அணி செயலாளர் ராஜிக் ரகுமான் சகோதரர்கள் தவ்பிக், தாரிக் அஹமது சுஹைல், வாஹித், மற்றும் சகோதரர்கள் ஏற்பாடுகளை சிறப்பாக செய்து இருந்தனர்.

நிகழ்ச்சி ஆரம்பம் முதலே சகோதரர்கள் சகோதரிகள் கலந்து கொண்டனர் மக்ரிப் தொழுகை முடித்து அரங்கம் நிரம்பியது.

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக கம்பம் மதரஸத்துஸ் ஸாலிஹீன் மதரஸா மாணவிகள் சுதந்திர போராட்ட தியாகிகள் வரலாறு குறித்து உரையாற்றினார்கள்.

நிகழ்ச்சி குறித்தும் நிகழ்ச்சி வடிவமைப்பு குறித்தும் அடுத்த தலைமுறைக்கு வரலாறு கொண்டு சேர்த்த இந்த முயற்சி குறித்தும்.

கம்பம் வாவேர் பள்ளிவாசல் ஜமாஅத் கமிட்டி தலைவர் ஜெயினூலாபுதீன் அம்பா அவர்கள்

தேனி மாவட்டம் முன்னாள் இணை இயக்குநர் டாக்டர் சையத் சுல்தான் அவர்கள்

கம்பம் HAMEED CONSTRUCTION நிறுவனர் ஹாமிது அன்சாரி அவர்கள்

சுதந்திர போராட்ட வீரர்கள் கம்பம் பாவலர் பீர் முஹம்மது அவர்கள் பேரன் ஜமால் முஹம்மது கம்பம் வெள்ளையத்தா ராவுத்தர் பேரன் ரகுமத்துல்லாஹ்..

மஸ்ஜிதே இலாஹி பள்ளிவாசல் துணை தலைவர் சையத் ஹனபி அவர்கள் துணை செயலாளர் சலிம் அவர்கள்

வாவேர் பள்ளிவாசல் ஜமாஅத் கமிட்டி துணை தலைவர் அப்துல் சமது அவர்கள் துணை செயலாளர் அப்துல் காதர் அவர்கள் துணை செயலாளர் சர்புதீன் MC அவர்கள் உறுப்பினர் அஜ்மல் கான் அவர்கள்

பாத்திமா பைபர்ஸ் நிறுவனர் அஜ்மல் கான் அவர்கள் வின்னர் ஸ்போர்ட்ஸ் அலிம் அவர்கள் கம்பம் நகர் மன்ற உறுப்பினர் கம்பம் சாதிக் MC அவர்கள் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ரிஜ்வான் அவர்கள் ஆசிரியர் சபி அவர்கள்

கம்பம் அதாயி அரபி கல்லூரி முதல்வர் மெளலவி தாரிக் அஹமது பிலாலி அவர்கள்..

மருத்துவர் நவுப்ல் அவர்கள் மனித நேய மக்கள் முன்னேற்றக் கழகம் மாநில நிர்வாகி ராஜா முஹம்மது மாவட்ட தலைவர் பக்கீர் மைதீன் மற்றும் நிர்வாகிகள்.

மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அப்பாஸ் மந்திரி மாவட்ட தொண்டர் அணி செயலாளர் அக்கிம் பஷிர் மற்றும் நிர்வாகிகள்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது துணை தலைவர் பீர் ஜி மற்றும் நிர்வாகிகள்.

எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் அபுபக்கர் சித்தீக் மாவட்ட நிர்வாகிகள் சாதிக் அலி அப்பாஸ் மந்திரி மற்றும் நிர்வாகிகள்

ஜாக் நகர நிர்வாகி அபுதாகிர் மற்றும் நிர்வாகிகள்.

இஸ்லாமிய அழைப்பாளர்கள் முஹம்மது அமீருதீன் பரித் அஸ்லம் கூடலூர் ரபிக் வாசிம் அக்ரம் அஜ்மல் கான் மற்றும் பல்வேறு இயக்கங்கள் கட்சிகள் சகோதரர்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தி கட்டுரை போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

கலந்து கொண்ட சிறப்பு அழைப்பாளர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

கட்டுரை போட்டியில் முதல் பரிசு சகோதரி நஸ்ரின் பாத்திமா பெற்றார்.

இரண்டாம் பரிசு மைமுன் பர்ஹானா பெற்றார்

முன்றாம் பரிசு சகோதரர் சாய் சரண் பெற்றார்.

மற்றும் 7 சிறப்பு பரிசுகள் மற்றும் பாவலர் பீர் முஹம்மது அவர்கள் வரலாறு குறித்து 3 சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது..

பரிசுகளை மதரஸத்துஸ் ஸாலிஹீன் மதரஸா தலைமை ஆசிரியர் ஜெயிலானி ஆலிமா மற்றும் மாவட்ட நகர நிர்வாகிகள் சிறப்பு அழைப்பாளர்கள் வழங்கினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது வரலாறு பதிவு செய்யும் வகையில் அனைத்து கட்டுரைகளும் தொகுத்து புத்தகங்களாக வெளியிட பட இருக்கிறது.

இறைவனுக்கே புகழ் அனைத்தும்.

ிரிவு

கம்பம் நகர இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கம்பம் மக்கா பள்ளிவாசல் நடத்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு கட்டுரை போட...
30/08/2026

கம்பம் நகர இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கம்பம் மக்கா பள்ளிவாசல் நடத்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு கட்டுரை போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சி

இறைவன் அருளால் மிக சிறப்பாக நடைபெற்றது.

இறைவனுக்கே புகழ் அனைத்தும்..

30/08/2026
30/08/2026

இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு நிகழ்ச்சி இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கம்பம் நகரம் சார்பில் நடைபெற்று வருகிறது.

ிரிவு #

கம்பத்தில் இன்று நடைபெற உள்ள சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு கட்டுரை போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சி குறித்த பணிகள் மண்டப...
30/08/2026

கம்பத்தில் இன்று நடைபெற உள்ள சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு கட்டுரை போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சி குறித்த பணிகள் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.

Address

60ft Road And Behind Etheem Khana
Kambam
625516

Telephone

+919790120149

Website

Alerts

Be the first to know and let us send you an email when மக்கா பள்ளிவாசல் கம்பம் INTJ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category