22/08/2026
காரைக்கால் நகராட்சி – புகாரின் பேரில் உடனடி நடவடிக்கை
கீழகாசாகுடி, சிவன் கோவில் எதிரே உள்ள சிமெண்ட் சாலையில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாக பொதுமக்களிடமிருந்து புகார் பெறப்பட்டது.
புகார் தொடர்பாக காரைக்கால் நகராட்சி ஆணையர் அவர்கள் உடனடியாக நேரில் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட இடத்தை தூய்மைப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
அதன்படி, இன்று ஆணையர் அவர்களின் உத்தரவின்படி சிறப்பு மாஸ் கிளீனிங் பணி மேற்கொள்ளப்பட்டது. மருத்துவக் கழிவுகள் உள்ளிட்ட தேங்கியிருந்த கழிவுகள் அகற்றப்பட்டு, அப்பகுதி முழுமையாக தூய்மைப்படுத்தப்பட்டது.
பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பெறப்படும் புகார்கள் மீது காரைக்கால் நகராட்சி உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறது.