UGS Catering

UGS Catering ✅✅

03/11/2022

உதவிக்காக...

04/04/2020

e-Pass :
திருமணம்,மருத்துவம்,துக்க நிகழ்வு செல்ல

8099914914 என்ற கைபேசி எண்ணிற்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் மின்நுழைவுச் சீட்டிற்கான சம்பந்தப்பட்ட இணைப்பு உங்கள் அழைபேசி எண்ணிற்கு குறுந்தகவலாக வரும் அல்லது நீங்கள் நேரடியாக
https://epasskki.in/
என்ற இணைப்பிற்கு செல்லலாம்.

1 . இணைப்பினை கிளிக் செய்து கைபேசி எண்ணை உள்ளிடவும்.
2 . உங்கள் கைபேசியில் வரப்பெறும் ஒருமுறை ரகசிய குறியீட்டு எண்ணை ( OTP ) உள்ளீடு செய்யவும் .

3 . மின்நுழைவுச் சீட்டிற்கான ( e - Pass ) விண்ணப்ப படிவம் தோன்றும்.

4 . விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்யவும் .

5 . பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தினை சமர்ப்பிக்கவும்.

மேற்கண்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவம் சம்பந்தப்பட்ட அலுவலரால் ஆய்வு செய்யப்பட்டு , ஒப்புதல் அளிக்கப்பட்ட பின் உங்கள் கைபேசி எண்ணிற்கு வரப்பெறும் இணைப்பினை கிளிக் செய்து மின் நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

01/10/2019

..🐯🦁🐵🦍🐫🦘🐘
...🍀🌵🌲🌊🍄🐚

25/03/2019
வரும் முன் காப்போம்!  #டெங்கு காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கை...
04/10/2017

வரும் முன் காப்போம்!
#டெங்கு காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கை...

06/05/2017

பள்ளிப் பருவம் முடிந்து

துள்ளித் திரிந்த நாங்கள்

ஜூன் மாத பூக்களாய்

கல்லூரி என்ற நந்தவனத்தில்

நுழைந்தோம்!!!

எங்களின் மூன்று ஆண்டுகள்

ஆயிரம் கனவுகளுடன்

மூடாத கதவுகளாய் திறந்திருந்தன!!!

எங்களின் கால்சுவடுகளை

ஏற்க மறுக்காத படிகளும்!!!

வாசனைப் பூக்களை வருகையாய்

கொண்ட பசும்பலகையும்!!!

நண்பனின் முகம் பார்க்க

காத்திருக்கும் தூண்களும்!!!

HOD-யின் அதிர்வு கேட்டே

அசையாத மரங்களும்!!!

ஆசானும் அன்னையாய்

தெரிந்த வகுப்பறையும்!!!

கல்லூரியின் நுலகத்தையே

எட்டிப் பார்க்காத நாட்களும்!!!

எட்டிப் பார்த்து எழுதியும்

தேர்வில் தேறாத மதிப்பெண்களும்!!!

தேர்வு முடிவிலும்

மனம் தளராத நெஞ்சமும்!!!

நண்பனின் சட்டையை

மாற்றித் திரிந்த நாட்களும்!!!

அழகி என்று பொய் சொன்னாலும்

அழகாய் ரசிக்க தோன்றிய நாட்களும்!!!

உணவினை ஊட்டி

அன்பினை பரிமாறிய

எங்கள் கல்லூரி கேண்டினும்!!!

படிப்பில் நடிப்பின்றி

நடிப்பையே படிப்பாக்கிய

எங்களின் நாடக மேடையும்!!!

கல்லூரி சுற்றுலாவில்

சுழன்று வந்த மேகத்தை

சுட்டு விரலால் தொட்டு வந்த நாட்களும்!!!

சண்டைகள் மட்டுமன்றி

எங்களின் சந்தோஷங்களும்

கதை கதையாய் சொல்லும் மரங்களும்!!!

வெள்ளை காகிதமாய் இருந்த எங்களை

வண்ண கோலமாய்;

வானவில்லின் ஒரு அங்கமாய்

வரைந்தது எங்கள் கல்லூரியின்

வாசல்தான்....



கனவுகள் கலைந்தாலும்

எங்களின் கண்களில்

கல்லூரி காலங்கள் கலைவதில்லை................



இதையே இறைவன் கல்லூரிக்கு

கொடுத்த வரமோ.........


Ugs

15/06/2016

படித்ததில் உறைத்தது.

ஒரு பணக்காரன் ஒரு கிராமத்திற்கு வந்து சொன்னான்... வெளிநாடுகளுக்கு அனுப்ப ஏராளம் பாம்புகள் தேவைபடுகிறது. நீங்கள் ஒரு பாம்பை பிடித்து தந்தால், 10 ரூபாய் தருகிறேன் என்றான். உடனே கிராம மக்கள் ஊரில் உள்ள பாம்புக்களை எல்லாம் பிடித்து கொடுத்து 10 ரூபாய் வீதம் வாங்கி கொண்டார்கள். ஊரில் உள்ள எல்லாப் பாம்புகளையும் பிடித்துவிட்டதால் அதன் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது.

அதனால் மக்களுக்கு அதில் இருந்த ஆர்வம் குறைந்து போய்விட்டது. உடனே அந்த பணக்காரர், இனி
பாம்பை பிடித்து கொடுப்பவர்களுக்கு 25 ரூபாய் தருவதாக சொன்னார். அவர்கள் மீண்டும் உற்சாகமாகி தேடி தேடிபாம்பை பிடித்து கொடுத்தார்கள் .ஊரில் ஒன்று கூட மிச்சம்வைக்காமல்
எல்லாப் பாம்புகளையும் பிடித்துவிட்டதால் அதன் எண்ணிக்கை மிக மிக மிக குறைய ஆரம்பித்து பாம்பை பார்ப்பதே அரிதாகி விட்டதால் அதில் இருந்த ஆர்வம் குறைந்துபோய்விட்டது.

அந்த பணக்காரர் விடவில்லை. இப்போது 50
ரூபாய் தருவதாக அறிவித்தார். உடனே ஊரில் உள்ள மக்கள் அருகில் இருந்த காடு மலை சென்று ஒன்று விடாமல் பிடித்துகொடுத்தார்கள். இப்போது பாம்பே இல்லாத நிலையாகிவிட்டது.

அவர் இப்போதும் விடவில்லை.எனக்கு இன்னும் அதிகபாம்புகள் தேவை. மேலும்பாம்பு கிடைப்பது அரிதாகிவிட்டதால் 200 ரூபாய் தருவதாக அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் தான் அவசரமாக இன்னொரு தொழில் விஷயமாகமற்றொரு ஊர் செல்ல வேண்டுமென்பதால் ஒரு வாரத்தில்
வந்து வாங்கி கொள்கிறேன். அதனால் உங்களால் முடிந்த அளவு பிடித்து கொண்டுவாருங்கள் என்று சொல்லி, நான் வரும்வரைக்கும் என் உதவியாளர் இங்கு இருப்பார் என்று சொல்லி சென்று விட்டார்.

அடுத்த நாள் அந்த உதவியாளர் ஊர் மக்களை கூப்பிட்டு..."மக்களே இங்கே பாருங்கள் நீங்கள் பிடித்து தந்த அனைத்து பாம்புகளும் இந்த கூண்டில் உள்ளது. நிச்சயமாக சொல்லுகிறேன் இந்த ஊரிலும் அதற்கு அருகில் எங்கேயும் பாம்புகளே இல்லை. அதனால் நான் ஒரு ஐடியா வைத்து இருக்கிறேன்.
இந்த பாம்புக்களை எல்லாம் நான் உங்களுக்கு 75 ரூபாய்க்கு விற்கிறேன். அதன்பின் முதலாளி வருவதற்கு முதல் நாள் நான் அவசர அவசரமாக வெளியூர் செல்ல வேண்டி இருக்கிறது என்று அவருக்கு போன் மூலம் சொல்லி சென்று விடுகிறேன். அவர் வந்ததும், இதே பாம்பை நீங்கள்
அவரிடம் 200 ரூபாய்க்கு விற்றுவிடுங்கள்" என்று சொன்னார்.

உடனே மக்கள் தங்கள் சேமிப்பில் இருந்த பணத்தையும் இருந்த நகைகளையும் விற்று அந்தபணத்தில் பாம்பை போட்டி போட்டுக்கொண்டு வாங்கிகுவித்தார்கள். எல்லாப் பாம்பையும் விற்ற அந்த உதவியாளர் முதலாளி நாளைவருகிறார் அதனால் நான் இன்று போய் விடுகிறேன் என்று சொல்லி கிளம்பி சென்று விட்டார். அந்த நாளில் இருந்து இந்த நாள் வரை அந்த ஊர் மக்கள் அந்த முதலாளியையும் பார்க்கவில்லை.. அந்த உதவியாளனையும் பார்க்கவில்லை....!

இப்போது அவர்களிடம் இருப்பது அந்த பாம்புகள் மட்டும்தான்....!

ஸ்டாக்மார்க்கெட் எப்படி செயல்படுகிறது என்பதற்கான விளக்கம் சரிதானா என்பதை தெரிந்தவர்கள் உறுதி படுத்தவும்...!

04/04/2016
15/08/2015
our's page visting..............
26/06/2015

our's page visting..............

Address

Karaikkudi
630102

Website

Alerts

Be the first to know and let us send you an email when UGS Catering posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share