மக்கள் சிந்தனைப் பேரவை - காரமடை மேற்கு

  • Home
  • India
  • Karamadai
  • மக்கள் சிந்தனைப் பேரவை - காரமடை மேற்கு

மக்கள் சிந்தனைப் பேரவை - காரமடை மேற்கு Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from மக்கள் சிந்தனைப் பேரவை - காரமடை மேற்கு, Social service, காரமடை மேற்கு, Karamadai.

மக்கள் சேவையே மகேசன் சேவை என்று நமது காரமடை மேற்கு பகுதியில் உள்ள தன்னார்வலர்களால் இணைந்து துவக்கப்பட்டது இந்த குழு. சந்தா எதுவும் இல்லை உங்கள் நேரம் மட்டும் போதும்

இணைய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்
9843399399 - ரமேஷ் மாதவன்
விஜயநகரம்

25/10/2025
24/09/2025
ஜூலை 20 ஆம் தேதி நமது தேக்கம்பட்டி கிராமத்தில் நமது குழுவின் முதல் நிகழ்வு நடத்தப்பட்டது.இதை முப்பெரும் விழாவாக நடத்த தி...
27/07/2025

ஜூலை 20 ஆம் தேதி நமது தேக்கம்பட்டி கிராமத்தில் நமது குழுவின் முதல் நிகழ்வு நடத்தப்பட்டது.

இதை முப்பெரும் விழாவாக நடத்த திட்டமிடப்பட்டது, கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் விழா, பசுமை கிராமம் மரம் நடும் விழா மற்றும் நெகிழி இல்லா கிராமம் என்ற வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், குழந்தைகளுக்கு இதை பற்றிய ஆர்வத்தை தூண்டும் வகையில் பல விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், வள்ளி கும்மி போன்றவை நடத்தப்பட்டன. பரிசுகள் வழங்கி அனைவரையும் ஊக்கப்படுத்தும் விதமாக பலர் இந்த நிகழ்வில் உரையாற்றினார்கள்.

இந்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக பத்மஶ்ரீ விருது பெற்ற திரு பத்திரப்பன் அவர்கள் வந்திருந்து சிறப்புரை வழங்கினார். இந்த நிகழ்வுக்கு தலைமை தாங்கி நடத்திய திரு பழனிசாமி (முன்னாள் தலைமை ஆசிரியர் - வெள்ளியங்காடு மேல் நிலைப் பள்ளி) தலைவர் - மக்கள் சிந்தனைப் பேரவை, காரமடை மேற்கு தலைமையுரை வழங்கினார். மேலும் பல ஆளுமைகள் இந்த நிகழ்வில் பங்கேற்று உரை நிகழ்த்தினார்கள்.

நிகழ்ச்சியை திரு ரவிச்சந்திரன், திருமதி மாலதி மற்றும் திருமதி கீதா நாகலட்சுமி தேக்கம்பட்டி ஊர் கவுடர்கள் மற்றும் கிராம மக்கள் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடுகளை கவனித்து நடத்தி கொடுத்தனர்.

இது ஒரு‌ துவக்கம் என்பதில் எந்த ஐயமும் இல்லை, இது போல் ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு கிராமத்தை தேர்வு செய்து அங்கு மக்கள் சேவைகள் செய்யவுள்ளோம்.

இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அதிக அளவில் பங்களித்து இன்னும் பல புதிய செயல் செய்யவிருக்கிறோம்

27/07/2025

அனைவருக்கும் வணக்கம்,

*மக்கள் சிந்தனைப் பேரவை* பற்றி ஒரு சிறு முன்னுரை

மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற கூற்றின் அடிப்படையில் நமது காரமடை மேற்கு பகுதியில் உள்ள தன்னார்வலர்களால் இணைந்து துவக்கப்பட்டது இந்த குழு. இந்த குழு எந்த ஒரு சாதி, மத, மொழி, அரசியல் வேறுபாடின்றி நமது சமூக வளர்ச்சி, சமுதாய மேம்பாடு, தூய்மையான சுற்றுப்புறம், மாசற்ற சுற்றுச்சூழல் மற்றும் சமுதாய மாற்றத்திற்கான ஒரு முன்னெடுப்பாக இதை துவங்கியுள்ளோம்.

சமூக சேவை செய்ய விருப்பம் உள்ள இளைஞர்கள், மாதம் ஒரு நாள் இந்த சமுதாயத்திற்கு கொடுக்க முடியும் என்று நினைக்கும் தன்னார்வலர்கள் இதில் இணைந்து பயணம் செய்யலாம். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த சிறிய செயலை செய்வதால் நமது அடுத்த தலைமுறைக்கு நல்ல ஒரு சூழலை உருவாக்க முடியும்.

இதில் பணம் செலவு செய்ய வேண்டும் சந்தா சேர்க்க வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் இல்லை, நமது நேரத்தை இந்த சேவைக்கு கொடுத்தால் போதும்.

விருப்பம் உள்ளவர்கள் இணைய விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு ஒரு வாட்ஸ்அப் செய்தி உங்கள் பெயர், ஊர், என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள் என்கிற விபரத்தை கொடுக்கவும்

9843399399 - ரமேஷ் மாதவன்
விஜயநகரம்

Address

காரமடை மேற்கு
Karamadai
641113

Website

Alerts

Be the first to know and let us send you an email when மக்கள் சிந்தனைப் பேரவை - காரமடை மேற்கு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category