Karur news

Karur news Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Karur news, Political organisation, Karur.

காலஞ்சென்ற சி. என். அண்ணாதுரையின் மறைவுக்குப்பின் மு. கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும் ஆனார். அக்காலத்தில் கட்சியின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர். கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆரால் 1972ல் தொடங்கப்பட்ட இயக்கமே அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். இக்கட்சி பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

13/05/2024

13.05.2024
பாசிச காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தேசிய தலைவர் #சாம்_பிட்ரோடோ நம் நாட்டு மக்களின் தோல் நிறம் பற்றி மிகவும் இழிவாக இனவெறியை தூண்டும் அளவிற்கு பேசியதை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் திரு. ெந்தில்நாதன் அவர்களுடன் நிர்வாகிகளும் கைதாகி திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்கள்

K.Annamalai Bharatiya Janata Party (BJP) BJP Tamilnadu J.P.Nadda

மக்கள் வெள்ளத்தில் நமது மாநில தலைவர் திரு. K.Annamalai அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தார். கோவை பாராளுமன்ற தொகுதி தமிழக...
27/03/2024

மக்கள் வெள்ளத்தில் நமது மாநில தலைவர் திரு.
K.Annamalai அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தார். கோவை பாராளுமன்ற தொகுதி தமிழக பாரதிய ஜனதா கட்சியின் கோட்டை அதன் அரியாசணத்தை அலங்கரிக்க போகும் எங்கள் மாநில தலைவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்...



10/11/2021

பாஜக தமிழக தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள் சென்னையில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளைப் பார்வையிடச் சென்ற போது போட்டோ - வீடியோ எடுத்ததை சினிமா சூட்டிங் என்று ஆளாளுக்கு விமர்சித்து மிகப் பெரிய கொடுமையை தவறைச் செய்து விட்டது போல சித்தரிப்பது விந்தையாக உள்ளது.
திரு.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பிரசாந்த் கிஷோர் மூலம் தமிழகம் முழுவதும் 3 ஆண்டுகள் முற்றும் துறந்த நடிகராக வலம் வந்ததை நாடே பார்த்தது. ஆட்சிக்கு வந்தும்
இன்று வரையிலும் நடிப்பிலிருந்து விடுபட முடியாமல் தொடர்ந்து நடித்துக்கொண்டே இருக்கிறார்.
பஸ்ஸில் பரிசோதனை, காவல் நிலைய கண்டுபிடிப்புகள், இருளர் கதைக்காக குடிசை வீடுகளில் அதிர்ச்சி விசிட், கொரானா வார்டில் துணிச்சலாக செல்வது.கடும் மழையில் தண்ணீல் மூழ்கி நீச்சலடிப்பது, வெள்ளப் பெருக்கிடையே திருமணத்தை நடத்தி வைப்பது, வெள்ளம் பாதித்த பகுதிகளில் சோறு போடுவது, விஞ்ஞானியைப் போல், அறிவாளியைப் போல உலகில் தலை சிறந்த முதல்வர் என்று தம்பட்டம் அடிப்பது, நீட் தேர்வு தற்கொலைகளை ஊக்குவித்து இறந்த மாணவர்களின் உடல் மீது மகன் உதயநிதி மூலம் மலர் வைத்து கண்ணீர் விடுவது இன்னும் பட்டியல் வடிவேல் பாணியில் பெருசா போய்க்கிட்டே இருக்கு.
இது எல்லாமே ஸ்டாலின் உதயநிதி சபரீசன் அன்கோவின் அப்பட்டமான அரசியல் நாடகம்.
இதை மறந்து விட்டும், மறைத்து விட்டும் ஊடகங்கள் மொத்தமாக இந்தியாவின் நம்பர் ஒன் முதல்வர் என்று நற்சான்று வழங்கி " சே.... என்ன மா செயல்படறார் .... சான்ஸே இல்லை ஸ்டாலினின் செயல்பாடு வியப்பாக இருக்கு 24 மணி நேரத்தில் 23 1/2 மணி நேரமும் உழைக்கிறார்" என்று ஊடக விவாதங்களில் அரசியல் விமர்சகர்கள் , சில மூத்த பத்திரிக்கையாளர்கள் புகழ்ந்து தள்ளுகிறார்கள். வடிவேல் படக் காமெடி மாதிரி " வாங்குன காசுக்கு என்ன மா கூவறான்டா கொய்யாலா?" என்ற வார்த்தையை நிஜமாக்கி வருகிறார்கள்
அதிமுக ஆட்சி முடியும் வரை எடப்பாடி மிகப்பெரிய ஆளுமை என்று ஆளாளுக்கு புகழ்ந்து தள்ளிய அதே அரசியல் விமர்சர்கள், பத்திரிக்கையாளர்கள் இன்று " மிகப் பெரிய ஊழல், கொலை, கொள்ளையை செய்து விட்டார் எடப்பாடி என்று அப்படியே விசுவாசத்தை ஸ்டாலினுக்கு காட்டி தங்களின் தரமற்ற , அறமற்ற பிழைப்புக்கு மண்டியிடத் தொடங்கி விட்டார்கள்.
உலகத்திலேயே தங்கள் அசையும், அசையா சொத்துகள், கார், பங்களா, வீடு, வாசல், தாலி தங்கம், நகை, நட்டு எல்லாவற்றை விற்று தமிழகத்திற்கு சேவை செய்து ஒரு வேளை சோற்றுக்கே வழியில்லாமல் உண்டியல் குலுக்கி ஸ்டாலின், உதயநிதி, சபரீசன், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பாவம் வாழ்ந்து கொண்டு தவியாய் தவிப்பது போலவும் .எடப்பாடியார் உள்ளிட்ட அதிமுகவினர் மட்டுமே கோடி கோடியாய் கொள்ளையடித்து, ஊழல் செய்து, உல்லாசமாக வாழ்வது போல காட்சிகளை மாற்றுகிறார்கள். இப்படி பேசினால் தான் ஊடகத்திலும் அனுமதிக்கப்படுகிறது.ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்ற வலிமையான ஆயுதமான ஊடகங்கள் இதுவரை ஒரு சிறுதுளி கூட குற்றமற்ற ஆட்சியை ஸ்டாலின் நடத்துவதாகக் கூறி மொத்த ஊடகங்களும் மெளனம் காத்து ஆதரிப்பதோடு, பாஜக அதிமுகவை தங்கள் இஷ்டத்துக்கு வெளுத்து வாங்குகிறது. ஊடகங்கள் / ஊடகவியலாளர்கள் / நெறியாளர்கள் சிலர் நடுநிலையின்றி நடந்து கொள்வதாக மக்கள் கடுமையாக விமர்சிப்பதை அறியாமல் ஆட்சிக்கும், ஸ்டாலினுக்கும் வென்சாமரம் வீசி விசுவாசத்தை காட்டுகிறார்கள். ஊழல், லஞ்சம் 100% ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் 200 % உறுதியாக இருப்பவன் நான்.ஊழல் என்றால் திமுக - அதிமுக இரண்டும் ஒரே தராசில் சமமாக பார்க்க வேண்டும். திமுகவை மிக நேர்மையாளராகக் காட்டி விட்டு மற்றவர்களை மெளனியாக கடந்து செல்லும் நாடக அரசியல் கட்சிகளிடம் மட்டுமல்ல ஊடகங்களிடமும் தொற்றிக் கொண்டு விட்டது என்பதே வேதனையான ஒன்று. ஊடகங்களும் விமர்சனங்களுக்கு உட்பட்டதே.

பொங்கலூர் மணிகண்டன்

Address

Karur
639001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Karur news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Karur news:

Shortcuts

Share