Ammk perambur

Ammk perambur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ammk perambur, Political Party, Kodungaiyur.

06/07/2024

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்கள் வெட்டிப் படுகொலை - தமிழகத்தில் நாள்தோறும் அரங்கேறும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை வேடிக்கை பார்க்கும் திமுக அரசின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட்டு வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்கள், பெரம்பூரில் உள்ள அவரது இல்லம் முன்பாக கூலிப்படை கும்பலால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் மாநில தலைவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதை கண்காணிக்கத் தவறிய உளவுத்துறை முற்றிலுமாக செயலிழந்திருப்பதோடு, தமிழகத்தில் இது போன்று அடிக்கடி நடைபெறும் கொலைச் சம்பவங்கள் மக்கள் மத்தியில் பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் நடைபெறாத நாட்களே இல்லை என சொல்லும் அளவிற்கு அடுத்தடுத்து தொடர்ச்சியாக நடைபெறும் கொலைச் சம்பவங்கள் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் உச்சமடைந்திருப்பதை வெளிச்சம்போட்டு காட்டுகின்றன.

எனவே, காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், இனியாவது தன் கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழித்து தமிழகத்தில் அரங்கேறும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தி பொது மக்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி தரவேண்டும் என வலியுறுத்துகிறேன்.

05/07/2024
இரங்கல்செய்தி..வடசென்னை மத்திய மாவட்டம் பெரம்பூர் மேற்கு பகுதி கழக செயலாளர் அண்ணன்  திரு.  j kumar   அவர்களின் தாயார்  V...
05/07/2024

இரங்கல்செய்தி..

வடசென்னை மத்திய மாவட்டம்
பெரம்பூர் மேற்கு பகுதி கழக செயலாளர் அண்ணன்
திரு. j kumar அவர்களின் தாயார் V.யாசோதை அம்மாள் (வயது 77) 05/07/24 வெள்ளிக்கிழமை அதிகாலை
காலமானார் என்பதை வருத்ததுடன் தெரிவித்துகொள்கிறோம்.

01/07/2024

ஜெயா தொலைக்காட்சியின் மூத்த ஒளிப்பதிவாளர் திரு.T.அமல்ராஜ் அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது.

திரு.அமல்ராஜ் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும் சக ஊழியர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கழக பொதுச்செயலாளர்
திரு டிடிவி தினகரன் அவர்கள்

30/06/2024

29/06/2024

We are Champions🇮🇳

13/06/2024
21/05/2024

ஜப்பானில் நடைபெற்று வரும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

விடா முயற்சிக்கும் தன்னம்பிக்கைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்து தொடர் வெற்றிகளின் மூலம் தனது முத்திரைகளை பதித்துக் கொண்டிருக்கும் மாரியப்பன் தங்கவேலு அவர்கள், அடுத்தடுத்து நடைபெறும் போட்டிகளிலும் வெற்றிபெற்று விளையாட்டு உலகில் புதிய உச்சத்தை அடைய எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Address

Kodungaiyur
600118

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ammk perambur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share