03/08/2026
தீரன் சின்னமலையுடன் இணைந்து போராடிய சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் கொங்கு மு. குணாளன் நாடார் 221-ம் நினைவு தினம் – ஆடி 18
கொங்கு நாட்டின் ஆரம்பகால சுதந்திரப் போராட்ட வரலாற்றில் குறிப்பிடத்தக்க வீரர்களில் ஒருவராக நினைவுகூரப்படுபவர் மாவீரன் கொங்கு மு. குணாளன் நாடார். திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகிலுள்ள நத்தக்காடையூரில் 1757-ஆம் ஆண்டு பிறந்த இவர், தனது அசைக்க முடியாத வீரத்தாலும், தடியை திறம்பட கையாளும் போர்திறமையாலும் "கட்டுத்தடிக்காரன்" என்ற பெயரால் அழைக்கப்பட்டார்.
தீரன் சின்னமலையின் நெருங்கிய நண்பராகவும், நம்பிக்கைக்குரிய தளபதியாகவும் விளங்கிய கொங்கு மு. குணாளன் நாடார், ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக வீரத்துடன் போராடினார். நாட்டின் விடுதலைக்காக தனது வாழ்நாளையே அர்ப்பணித்த அவர், திருமணம் கூட செய்து கொள்ளாமல் இறுதி மூச்சுவரை தாய்நாட்டிற்கும் தனது இலட்சியத்திற்கும் உண்மையுடன் வாழ்ந்து வீரமரணம் அடைந்தார்.
ஆடி 18 நினைவு நாளில், அவரது தியாகத்தையும் வீரத்தையும் தமிழகம் என்றும் போற்ற வேண்டும். அவரின் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில், தமிழக அரசு ஆண்டுதோறும் அரசு விழாவாக நினைவு நாள் அனுசரிக்கவும், அவரது பெயரில் மணி மண்டபம் மற்றும் முழு உருவச்சிலை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துகிறோம்.
"நாட்டிற்காக வாழ்ந்தோர் பலர்;
நாட்டிற்காக உயிர் துறந்தோர் சிலர்.
அந்த சிலரில் என்றும் நினைவில் நிற்பவர்
மாவீரன் கொங்கு மு. குணாளன் நாடார்."
ஆடி 18 – மாவீரன் கொங்கு மு. குணாளன் நாடாருக்கு வீர வணக்கம்! 🌺
#கொங்கு #குணாளன்நாடார் #கருப்பசேர்வை #சென்னிமலைநாடார் #செவத்தையாநாடார் #தீரன்சின்னமலை #சங்ககிரி #ஆடி18 #தமிழர்வரலாறு #வீரவணக்கம்