03/09/2026
Krishnagiri District
்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர் கைது. லாட்டரி சீட்டுகள் பறிமுதல்
****
கிருஷ்ணகிரி மாவட்டம்
03.09.2026
****
காவேரிப்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது கொசமேடு ரோடு , மேல் மக்கான் தெருவில் உள்ள பழனி என்பவரின் பில்டிங் மேல் மாடியில் உள்ள ரூமில்
லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று சோதனை செய்த போது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து 10 லாட்டரி சீட்டுகள்,₹1,500 /- ரூபாய் பணம் பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிந்து எதிரியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்