MRK KINGS

MRK KINGS எ‌ளியாரை வ‌லியா‌ர் அடி‌த்தா‌ல், வ‌லியாரை‌த் தெ‌ய்வ‌ம் அடி‌க்கு‌ம்.

07/08/2022

கர்ணனை போல
நண்பனை தேர்ந்தெடு....
நீ வீழ்கின்ற நிலை வந்தாலும்
உணக்காக போராடுவான்...!
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

08/05/2022
28/04/2022
27/04/2022

மூத்த நாகரிகத்தின் மூத்த குடிமக்கள் நாம் என்பதில் பெருமைக்கொள்வோம்...

27/04/2022

#மூத்த_நாகரிகத்தின்_மூத்த_குடிமக்கள்_நாம் என்பதில் பெருமைக்கொள்வோம்...

மகாராஜகடை மலையில் பெருங்கற்கால வாழிடம் & மூன்று வகையான பாறை ஓவியங்கள் ஊடக நண்பர்களுடன் ஆய்வு
25/04/2022

மகாராஜகடை மலையில் பெருங்கற்கால வாழிடம் & மூன்று வகையான பாறை ஓவியங்கள் ஊடக நண்பர்களுடன் ஆய்வு

மகாராஜகடை மலையில் பூதிகுட்டை என்ற ஊரக்கருகில் உள்ள பகுதியில் பாறை ஓவியங்களை ஊடக நண்பர்களுடன்  ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
24/04/2022

மகாராஜகடை மலையில் பூதிகுட்டை என்ற ஊரக்கருகில் உள்ள பகுதியில் பாறை ஓவியங்களை ஊடக நண்பர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கிருஷ்ணகிரி அருங்காட்சியகமும் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணபடுத்தும் குழுவும் மகாராசகடை மருத்துவர் .லோகேஷ் மற்ற...
21/04/2022

கிருஷ்ணகிரி அருங்காட்சியகமும் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணபடுத்தும் குழுவும் மகாராசகடை மருத்துவர் .லோகேஷ் மற்றும் நண்பர்கள் அழைப்பின் பேரில் தலைவர் நாராயணமூர்த்தி தலைமையில் மகாராசகடை மலையின் பின்பக்கமுள்ள பூதிகுட்டை என்ற ஊரக்கருகில் உள்ள பகுதியில் ஆய்வு மேற்கொண்டது. அந்த பகுதியில் நூற்றுக்கனக்கான கல்திட்டைகள் அழிக்கப்பட்டு இருப்பதை ஆயவின் போது காணமுடிந்தது .
சிறிது சிதைந்த நிலையில் இருந்த மூன்று கற்திட்டைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது அது பற்றி அருங்காட்சியக காப்பாச்சியர் கோவிந்தராஜ் கூறுகையில்..
இந்த பாறை ஓவியங்கள் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை கற்திட்டையில் இந்த அளவுக்கு அதிக பாறை ஓவியங்கள் இருப்பது கிருஷ்ணகிரியில் இந்த இடத்தில் தான் . ஏற்கனவே இவ்வோவியங்களை துரைசாமி போன்ற ஆய்வாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். என்றாலும் எங்கள் ஆய்வின்போது 3 முக்கிய செய்திகளை கண்டறிந்தோம். முதலாவது இங்குள்ள கருஞ்சாந்து ஓவியங்கள்.
• கருஞ்சாந்தில் ஒரு விலங்கின் மீது இருவர் செல்வது போலவும் அதற்கு அருகிலேயே இரண்டு மனித உருவங்களும். 3 அடி அகலமுள்ள மயில்போன்ற உருவம் கருந்சாந்து புள்ளிகளால் வரையப்பட்டுள்ளது தேர்போன்ற அமைப்பு வெண்சாந்தும் கருஞ்சாந்தும் சேர்த்து வரையப்பட்டுள்ளது. இது இரண்டும் சமகாலத்தினை சேர்ந்தது என்பதை நமக்கு கூறுகிறது.
இரண்டாவது கை அச்சு.
• இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தய கை அச்சு (கையில் வெண்சாந்து தடவி இரண்டு இடங்களில் பதிக்கப்பட்டுள்ளது). கீழே கை கோட்டுருவத்தில் வரையப்பட்டுள்ளது.
மூன்றாவது உஜ்ஜைனி குறியீடு.
• இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வட இந்தியாவுடனான வணிகத்தொடர்பு இருந்ததை கூறும் வண்ணம் வெண்சாந்தில் உஜ்ஜெய்னி குறியீடு ஒரு கற்திட்டையில் தெளிவாக காட்டப்பட்டுள்ளது. இதே போன்ற ஒரு குறியீடு ஐகுந்தம் பகுதியில் கண்டறிந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இடத்திற்கான வாழ்விடப்பகுதியை கண்டறிந்து அகழவாய்வு செய்தால் இந்த இடந்திலிருந்த மக்களில் வாழ்வியலை அறியலாம் என கூறினார்

ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் கூறுகையில் இதற்கு முன் கொங்கனப்பள்ளியில் பாறையில் கருஞ்சாந்து ஓவியம் வரையப்பட்டு இருந்தது . அந்த இடத்தில் இருந்து இந்த இடம் 13 கிலோ மீட்டர் என்றாலும் இதே மலைத்தொடரில் வருவது குறிப்பிடதக்கது . கிருஷ்ணகிரியில் இரண்டாவதாக இந்த இடத்தில் அதிக அளவு கருஞசாந்து ஓவியம் கண்டறியப்பட்டது.
ஆய்வுப்பணியில் சதானந்த கிருஷ்ணகுமார், சரவணகுமார், பிரகாஷ் . அசோக் உள்ளுரைச்சேர்ந்த தேவராஜ் , சீனிவாசன் , முனிரத்தினம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

உலக சுற்றுச்சூழல் தினம்
05/06/2021

உலக சுற்றுச்சூழல் தினம்

23/04/2021

Address

MAHARAJAKADAI
Krishnagiri
635120

Telephone

+919597147029

Website

Alerts

Be the first to know and let us send you an email when MRK KINGS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category