நம்ம ஊரு கும்பகோணம் / Our Kumbakonam

நம்ம ஊரு கும்பகோணம் / Our Kumbakonam காவேரியும், அரசலாறும் கழுத்தில் மாலையாய் திகழ, கோயில்களை மணிகளாகக் கொண்ட, கலாச்சாரமும் ஆன்மிகமும் இதயமாய் வாழும் மாநகரம் “நம்ம ஊரு
கும்பகோணம்”
(1)

காவேரியும் அரசலாறும் கழுத்தில் மாலையாய் திகழ, கோயில்களை மணிகளாகக் கொண்ட, கலாச்சாரமும் ஆன்மிகமும் இதயமாய் வாழும் மாநகரம் “நம்ம ஊரு
கும்பகோணம்”

கும்பகோணம் சங்க காலம் முதல் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமாக விளங்குகிறது. சோழர்களின் ஆட்சிக் காலத்தில் இது முக்கிய தலைநகரங்களுள் ஒன்றாக இருந்தது. குறிப்பாக 9-ம் நூற்றாண்டு முதல் 13-ம் நூற்றாண்டு வரை சோழப் பேரரசின் கலாச்சார மற்றும் சமய வளர்ச்சியில் கும்பகோணம

் முக்கிய பங்கு வகித்தது. பின்னர் நாயக்கர் மற்றும் மராட்டியர் ஆட்சியிலும் மாநகரம் செழித்து வளர்ந்தது.

சோழர் காலத்து கட்டிடக்கலைக்கும், ஆன்மிக பாரம்பரியத்திற்கும் பெயர்பெற்ற இம்மாநகரம், 'கோவில்களின் மாநகரம்' (City of Temples) என்றும், தென்னகத்தின் கேம்பிரிட்ஜ் (Cambridge of South India) என்றும் அழைக்கப்படுகிறது.

கும்பகோணம் நவகிரகத் தலங்களுக்கான நுழைவாயிலாகவும் கருதப்படுகிறது. சூரியனார் கோயில், திருநாகேஸ்வரம், ஆலங்குடி, கஞ்சனூர் உள்ளிட்ட புகழ்பெற்ற நவகிரகத் தலங்கள் இதைச் சுற்றியே அமைந்துள்ளன.

கும்பகோணத்தின் மிகப் பெரிய அடையாளம் மகாமகம் ஆகும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த விழா, இந்தியாவின் மிக முக்கியமான புனித நீராடல் திருவிழாக்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மகாமகக் குளத்தில் இந்தியாவின் புனித நதிகள் அனைத்தும் சங்கமிக்கின்றன என்ற நம்பிக்கை உள்ளது. இந்த விழாவில் இலட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.

உலகின் உயரமான தேரான 110 அடி உயரம் கொண்ட சாரங்கபாணி கோவில் சித்திரை தேர் கும்பகோணத்தின் மற்றொரு மணி மகுடமாக திகழ்கிறது.

கும்பகோணம் ஆன்மிக மாநகரம் மட்டுமல்ல; வணிக ரீதியிலும் முக்கியத்துவம் வாய்ந்தது.

பிரபலமானவை:

கும்பகோணம் டிகிரி காபி
பட்டுப் புடவைகள்
வெற்றிலை வியாபாரம்
மங்கல இசைக் கருவியான நாதஸ்வரம் செய்யப்படுகிறது
பித்தளை மற்றும் வெண்கலப் பொருட்கள்
ஐம்பொன் (Panchaloha) சிலைகள் தயாரிப்பு
வலங்கைமான் நாட்டு வெடி
கோயில் உபயோக உலோகப் பொருட்கள்
பாரம்பரிய சிற்பக்கலை மற்றும் ஐகான் தயாரிப்பு

இத்தொழில்கள் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளன.

பழைமையும் புதுமையும், ஆன்மிகமும் அறிவியலும் (ராமானுஜன் வடிவில்) கைகோர்த்து நிற்கும் ஒரு உன்னதமான மாநகரம் கும்பகோணம். தமிழகத்தின் கலாச்சாரப் பெருமையை உலகிற்குப் பறைசாற்றும் உன்னதப் பெட்டகமாக இம்மாநகரம் இன்றும் திகழ்கிறது.

அனைவரும் பாராட்டும்படி மகாமகத் திருவிழா நடத்தப்படும் அறநிலையத்துறை அமைச்சர் அறிவிப்பு
31/08/2026

அனைவரும் பாராட்டும்படி மகாமகத் திருவிழா நடத்தப்படும் அறநிலையத்துறை அமைச்சர் அறிவிப்பு

Glimpse of Kumbakonam’s Timeless Elegance!
31/08/2026

Glimpse of Kumbakonam’s Timeless Elegance!

காவிரியின் வருகைக்காக காத்திருக்கும் கும்பகோணம்!
31/08/2026

காவிரியின் வருகைக்காக காத்திருக்கும் கும்பகோணம்!

திருவிடைமருதூர், கும்பகோணம்!
31/08/2026

திருவிடைமருதூர், கும்பகோணம்!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கும்பகோணம் பகுதிகளில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி தீவிரம்!
30/08/2026

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கும்பகோணம் பகுதிகளில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி தீவிரம்!

Kumbakonam Corporation 🔥🔥🔥
30/08/2026

Kumbakonam Corporation 🔥🔥🔥

Thirunageswaram - Good shed work is going on in fine phase!
30/08/2026

Thirunageswaram - Good shed work is going on in fine phase!

"Everest மற்றும் LG பெருங்காயத்திற்கு தடை!"
29/08/2026

"Everest மற்றும் LG பெருங்காயத்திற்கு தடை!"

29/08/2026

ஊர் சுற்றல்!

Address

Kumbakonam

Alerts

Be the first to know and let us send you an email when நம்ம ஊரு கும்பகோணம் / Our Kumbakonam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to நம்ம ஊரு கும்பகோணம் / Our Kumbakonam:

Shortcuts

Share