Thangam Thenarasu

Thangam Thenarasu Member of the Legislative Assembly - Tiruchuli | Belongs to the Dravidian stock

நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் - திருச்சுழி சட்டமன்ற தொகுதி

20/08/2026

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டத்திற்கு உட்பட்டு இயங்கும் பட்டாசு ஆலைகளில் 'திடீர் ஆய்வு' என்ற பெயரில் நடைபெறும் கெடுபிடிகளைச் சட்டப்பேரவையில் 55-ஆம் விதியின் கீழ் அவையின் கவனத்திற்குக் கொண்டு வந்தேன்.

சட்டத்திற்குப் புறம்பாக இயங்கும் பட்டாசுத் தொழிற்சாலைகள் மற்றும் விற்பனையகங்களில் ஆய்வு மேற்கொள்வதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. மாறாக, முறையான விதிகளின்படி செயல்பட்டு வரும் ஆலைகள் மற்றும் சில்லறை விற்பனையகங்களில் 'ஆய்வு' என்ற பெயரில் நடைபெறும் தொடர் சோதனைகளால் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று, அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் மாண்புமிகு கழகத் தலைவர் திரு M. K. Stalin அவர்களின் அறிவுறுத்தலின்படி, சிவகாசியில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். பொது அமைப்புகளும், தொழிலாளர்களும்கூடத் தொடர்ந்து இந்த ஆய்வுகளுக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில், "இந்த ஆர்ப்பாட்டங்களெல்லாம் அரசியல் காரணங்களுக்காக நடத்தப்பட்டவை" என்ற மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் அவர்களின் குற்றச்சாட்டுக்குப் பேரவையில் தகுந்த பதிலளித்தேன். தொழிலாளர்களின் வாழ்வாதாரப் போராட்டம் ஒருபோதும் அரசியலாகாது!

ஆங்கிலேய ஆட்சியின் அச்சுறுத்தலுக்கு அடிபணியாமல், தாய்மண்ணின் உரிமைக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய வீரத் தமிழர் ஒண்டிவீரன் அ...
20/08/2026

ஆங்கிலேய ஆட்சியின் அச்சுறுத்தலுக்கு அடிபணியாமல், தாய்மண்ணின் உரிமைக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய வீரத் தமிழர் ஒண்டிவீரன் அவர்களின் நினைவு நாளில், அவரது இணையற்ற துணிச்சலையும் தியாகத்தையும் போற்றுவோம்.

போர்க்களத்தில் ஒரு கரத்தை இழந்த நிலையிலும், தளராது தொடர்ந்து போராடிய அவரது மன உறுதி, விடுதலை வேட்கையின் அழியாத அடையாளமாகத் திகழ்கிறது. தாய்நாட்டின் மானத்திற்காகத் தன் உயிரையே அர்ப்பணித்த மாவீரர் ஒண்டிவீரனின் வீர வரலாறு தலைமுறைகள் கடந்தும் தமிழர் நெஞ்சங்களில் வாழட்டும்!

16/08/2026

தூத்துக்குடியில், கழகத் துணைப் பொதுச் செயலாளர் திருமிகு. கனிமொழி கருணாநிதி அவர்களின் ஒருங்கிணைப்பில், நமது தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டைக் கொண்டாடும் வகையில் 'நெய்தல் 2026' – 5-ஆம் ஆண்டு தூத்துக்குடி கலைத் திருவிழாவில் பங்கேற்றபோது!

Kanimozhi Karunanidhi

16/08/2026

பட்டாசுத் தொழிலை முடக்கும் வகையில் ஆய்வு என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளைக் கண்டித்து, விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.கழகம் சார்பில் இன்று சிவகாசியில், நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய போது…

பட்டாசுத் தொழிலை முடக்கும் வகையில் ஆய்வு என்ற பெயரில்மேற்கொள்ளப்படும் தொடர் நடவடிக்கைகளைக் கண்டித்து, கழகத் தலைவர் தளபதி...
16/08/2026

பட்டாசுத் தொழிலை முடக்கும் வகையில் ஆய்வு என்ற பெயரில்மேற்கொள்ளப்படும் தொடர் நடவடிக்கைகளைக் கண்டித்து, கழகத் தலைவர் தளபதி திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு. கழகம் சார்பில் இன்று சிவகாசியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான கழகத்தோழர்களுடன் பங்கேற்றோம்.

​சட்ட விதிமுறைகளைப் பின்பற்றி உரிமம் பெற்று செயல்படும் பட்டாசுத் தொழிற்சாலைகள் மற்றும் விற்பனையாளர்களைத் தேவையற்ற ஆய்வுகள் மூலம் அச்சுறுத்துவதும், தொழில் நடவடிக்கைகளை முடக்குவதும் சிவகாசியின் பொருளாதாரத்தையும், இந்தத் தொழிலை நம்பி வாழும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் நேரடியாகப் பாதிப்பதை எடுத்துரைத்தோம். தவெக அரசு உடனடியாக பட்டாசுத் தொழிலையும், அதில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் வலியுறுத்தினோம்.

நேற்று தூத்துக்குடியில், கழகத் துணைப் பொதுச் செயலாளர் திருமிகு. கனிமொழி கருணாநிதி அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற 'நெ...
16/08/2026

நேற்று தூத்துக்குடியில், கழகத் துணைப் பொதுச் செயலாளர் திருமிகு. கனிமொழி கருணாநிதி அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற 'நெய்தல் 2026' – 5-ஆம் ஆண்டு தூத்துக்குடி கலைத் திருவிழாவில் பங்கேற்று மகிழ்ந்தோம்.

நம் மண்ணின் பாரம்பரியக் கலைகள், பாரம்பரிய உணவுகள் மற்றும் விளையாட்டுகளை ஒரே களத்தில் கொண்டாடும் வகையில் இவ்விழா சிறப்பாக அமைந்திருந்தது. நமது தமிழர் பண்பாட்டின் பெருமையை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லும் இந்த முன்னெடுப்பைச் சிறப்பாக ஒருங்கிணைத்த தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு. கனிமொழி கருணாநிதி அவர்களுக்கும், விழாவில் பங்கேற்ற அனைத்துக் கலைஞர்கள் மற்றும் கலைக் குழுவினருக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்று விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தொகுதி, காரியாபட்டி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட எம். இலுப்பைகுளம், டி. வேப்பங்க...
15/08/2026

இன்று விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தொகுதி, காரியாபட்டி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட எம். இலுப்பைகுளம், டி. வேப்பங்குளம், தொட்டியன்குளம், என். நெடுங்குளம், முடுக்கன்குளம், கல்யாணிபுரம், கூவர்குளம், தேனூர், எஸ். மறைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மக்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தோம்.

ஒவ்வொரு ஊரிலும் மக்களின் அன்பும் ஆதரவும் எங்களுக்கு மேலும் உற்சாகத்தையும் பொறுப்புணர்வையும் அளித்துள்ளது. பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளைக் கேட்டறிந்து, அவற்றை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதோடு, இப்பகுதிகளின் வளர்ச்சிக்காகத் தொடர்ந்து மக்களோடு இணைந்து பயணிப்போம் என்று உறுதியளித்தோம்.

நம் தாய்நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதி காரியாபட்டியில் உள்ள சட்டமன்ற...
15/08/2026

நம் தாய்நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதி காரியாபட்டியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினோம். அடிமைத்தளையை அறுத்தெறிந்து, சுதந்திர இந்தியாவை உருவாக்க தங்கள் இன்னுயிரையும் தியாகம் செய்த எண்ணற்ற விடுதலைப் போராட்ட வீரர்களை இந்நன்னாளில் நன்றியுடன் நினைவுகூர்வோம்.

ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் சுதந்திர காற்றை சுவாசிக்க, தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த எண்ணற்ற தியாக சீலர்களால் இந்தியத...
15/08/2026

ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் சுதந்திர காற்றை சுவாசிக்க, தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த எண்ணற்ற தியாக சீலர்களால் இந்தியத் திருநாடு விடுதலை பெற்ற நாள் இன்று.

இந்த விடுதலைத் திருநாளில்,நாட்டு மக்களிடையே ஒற்றுமை, சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் ஜனநாயக மாண்புகளை மேலும் வலுப்படுத்துவோம். விடுதலைக்காகப் போராடிய தியாகிகளின் கனவுகளை நனவாக்கும் வகையில், ஜனநாயகத்தையும் சமூகநீதியையும் பாதுகாக்க ஒன்றுபட்டு நிற்போம்.

கழக அயலக அணிச் செயலாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான சகோதரர் திரு. எம்.எம். அப்துல்லா அவர்களின் அன்ப...
13/08/2026

கழக அயலக அணிச் செயலாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான சகோதரர் திரு. எம்.எம். அப்துல்லா அவர்களின் அன்புத் தாயார் திருமிகு. நபீசா பீவி அவர்கள் மறைவெய்திய செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

அன்புடனும் பாசத்துடனும் தன்னை வளர்த்து ஆளாக்கிய அன்னையை இழந்து வாடும் சகோதரர் அப்துல்லா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இந்தத் துயரமான நேரத்தில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Address

மல்லாங்கிணர்
Madurai
626109

Alerts

Be the first to know and let us send you an email when Thangam Thenarasu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share