27/08/2026
இந்நிகழ்விற்கான முன்பதிவிற்கு :
https://tinyurl.com/kclkids
அனைவருக்கும் வணக்கம் !
மதுரை- கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளின் கற்பனைத்திறன் மற்றும் படைப்பாற்றலை வெளிக்கொணரவும், தனித்திறன்களை வளர்த்துக்கொள்ளவும், மாறுபட்ட தலைப்புகளில் துறைசார்ந்த வல்லுநர்களைக் கொண்டு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு குழந்தைகள் நிகழ்ச்சி அரங்கில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், வரும் 30/08/2026 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 மணிக்கு திருமதி கு.மலர் செல்வி, D.T.E., M.A., M.Phil., B.Ed., B.Lit. அவர்கள் வழங்கும் “ஆர்வம் முதல் அறிவியல் வரை! அறிவோம் அறிவியல்!” என்ற தலைப்பில் சிறப்பு அறிவியல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
நாம் அன்றாடம் காணும் நிகழ்வுகளுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் அறிவியல் உண்மைகளை எளிய விளக்கங்கள், சுவாரஸ்யமான செயல்பாடுகள் மற்றும் நேரடி அனுபவங்கள் மூலம் அறிந்துகொள்ளும் ஓர் அரிய வாய்ப்பு இது.
“ஏன்?”, “எப்படி?” என்ற கேள்விகளே அறிவியலின் முதல் படி என்பதை உணர்த்தி, குழந்தைகளின் கேள்வி கேட்கும் ஆர்வத்தைத் தூண்டுவதோடு, சிந்திக்கவும், ஆராயவும், புதியவற்றைக் கண்டறியவும் அவர்களை ஊக்குவிப்போம். அறிவியலை வெறும் பாடமாக அல்லாமல், நம் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் நிறைந்திருக்கும் ஓர் சுவாரஸ்யமான உலகமாகக் குழந்தைகள் உணர்ந்திடச் செய்வோம்.
பெற்றோர்களும் தங்களது குழந்தைகளுடன் ஆர்வமுடன் கலந்து கொண்டு, அவர்களின் அறிவியல் ஆர்வத்திற்கும் சிந்தனைத்திறனுக்கும் சிறகுகள் தருவோம்!
வாருங்கள்…கேள்விகள் கேட்போம்! சிந்திப்போம்… ஆராய்வோம்… அறிவியலைக் கொண்டாடுவோம்!
அனுமதி இலவசம். அனைவரும் வருக! நன்றி.