போர்க்குடி_அகம்படியர்

  • Home
  • India
  • Madurai
  • போர்க்குடி_அகம்படியர்

போர்க்குடி_அகம்படியர் போர்க்குடி அகம்படியர் - தமிழ்நாடு

மருது வம்சத்தில் மண விழா 💛💚புதிய நீதிக்கட்சியின் திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பாளர்களின் இல்லத் திருமண விழாவிற்கு சுற்று வ...
03/07/2026

மருது வம்சத்தில் மண விழா 💛💚

புதிய நீதிக்கட்சியின் திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பாளர்களின் இல்லத் திருமண விழாவிற்கு சுற்று வட்டார அகமுடையார் பேரின உறவுகள் மற்றும் தாய் தமிழ் உறவுகள் அனைவரும் பங்கேற்று மணமக்களை வாழ்த்த அன்புடன் அழைக்கிறோம்.

#அகமுடையார்
#அகமுடையார்_பேரினம்
#மாமன்னர்_மருது_பாண்டியர்கள்
#மருதுபாண்டிய_மன்னர்கள்
#கொடை_வள்ளல்_பச்சையப்ப_முதலியார்
#போர்க்குடி_அகமுடையார்
#போர்க்குடி_அகம்படியர்

அகமுடையார் பேரினம் கிணற்று தவளைகள் அல்ல!!! கிணற்று தவளைக்கு கிணறு தான் கடல்,ஆனால் கிணற்றை விடவும் பல மடங்கு ஆழமான அல்லது...
29/06/2026

அகமுடையார் பேரினம் கிணற்று தவளைகள் அல்ல!!!

கிணற்று தவளைக்கு கிணறு தான் கடல்,ஆனால் கிணற்றை விடவும் பல மடங்கு ஆழமான அல்லது நீண்ட பரப்பளவு கொண்ட பெருங்கடலை பற்றிய அறிவு அதற்கு இருக்காது.

ஒரு சில அகமுடையார்களும் அப்படி தான் உள்ளனர்.அனைத்து முதலியார் அல்லது முக்குலத்தோர் அரசியல் என்றால் தான் நமக்கு பலம் என்று தவறாக எண்ணுகின்றனர்.

முக்குலத்தோர் என்றால் ஐந்து மாவட்டங்களில் மட்டுமே நமக்கு பலன்,அனைத்து முதலியார் என்றால் மேலும் ஒரு ஐந்து மாவட்டங்களில் மட்டுமே பலன்.அதிலும் நம் பலத்தை பயன்படுத்தி மாற்று சாதியினர் தான் வலிமை பெறுகின்றனர்,பெரிதாக நமக்கு பயனில்லை.

அதுவே அகமுடையார் பேரினம் எனும் போது தமிழகத்தின் பிரதான சமூகங்களின் ஆதரவு நமக்கு கிடைக்கிறது,மற்றவர்களை நம் முதுகில் சுமக்க வேண்டாம்,நாமும் மற்றவர்களின் நிழலில் பயணிக்க வேண்டாம்.நமக்கான அரசியலை நாமே தீர்மானிப்பது தான் ஆரோக்கியமான அரசியலுக்கு வழிவகுக்கும் உறவுகளே.

#அகமுடையார்
#அகமுடையார்_பேரினம்
#மாமன்னர்_மருது_பாண்டியர்கள்
#மருதுபாண்டிய_மன்னர்கள்
#கொடை_வள்ளல்_பச்சையப்ப_முதலியார்
#போர்க்குடி_அகமுடையார்
#போர்க்குடி_அகம்படியர்

முக்குலத்தோர் செயற்கை கட்டமைப்பை ஆதரிக்கும் அகமுடையார்கள் யார்??? முக்குலம் என்பது இடைச்செருகல் என்றும்,1933ஆம் ஆண்டிற்க...
28/06/2026

முக்குலத்தோர் செயற்கை கட்டமைப்பை ஆதரிக்கும் அகமுடையார்கள் யார்???

முக்குலம் என்பது இடைச்செருகல் என்றும்,1933ஆம் ஆண்டிற்கு முன்பு அப்படி ஒரு சொல்லாடல் இல்லை என்பதும் யாவரும் அறிந்ததே.

95 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் அகமுடையார் என்ற தனித்தன்மையுடன் நம் முன்னோர்கள் வாழ்ந்து வந்தனர்,பிறகு ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக, மாற்று சாதியினருடன் நம்மை இணைத்து முக்குலத்தோர் என்ற சொல்லாடல் புழக்கத்திற்கு வந்தது.மாற்று சாதியினருடன் கலப்பு திருமணங்கள் ஏற்படவில்லை என்றாலும் தேர்தல் காலங்களில் இந்த முக்குலத்தோர் என்ற செயற்கை கட்டமைப்பு காரணத்தினால் நமக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படுகிறது.இந்த போலி முக்குலத்தோர் கட்டமைப்பின் காரணமாக தென் தமிழகத்தில் அகமுடையார் பேரினத்திற்கான உரிய பிரதிநிதித்துவம் கடந்த கால் நூற்றாண்டுகளில் அதிகளவில் பறிபோகி உள்ளது.

இத்தனைக்கும் மூலக் காரணமாக உள்ள முக்குலத்தோர் என்ற காலாவதியான கட்டமைப்பை இன்றும் சில அகமுடையார் உறவுகள் பின்பற்றி வருகின்றனர்.அவர்கள் மூன்று வகையினர் :
1) வரலாறு புரிதல் அற்றோர்,
2) சலுகைக்காக மாற்று சாதியின் பெயரில் சாதி சான்றிதழ் வைத்துள்ளவர்கள்,
3) பிற்போக்கு அரசியல் செய்பவர்கள்.

முதலில் வரலாற்று புரிதல் இல்லாத அகமுடையார்கள் :
கல்வெட்டுகள்,செப்பேடுகள்,பட்டயங்கள்,வரலாற்று நூல்கள் உள்ளிட்ட எதையும் படிக்காத அல்லது ஏட்டை கையில் எடுத்து படிப்பதற்கு தேவையான படிப்பறிவு அற்றவர்கள்.
இவர்களுக்கு பெரும்பாலும் சுய அறிவு,சிந்திக்கும் திறன் அதிகம் இருக்காது.எதையும் எளிதில் நம்பக்கூடிய சிறு மதியாளர்கள் இவர்கள்.ஒரு விடயத்திற்கு பின்னால் உள்ள வரலாறு மற்றும் அறிவியல் பற்றிய சிந்தனை இவர்களுக்கு பெரிதும் இருக்காது.அதனால் எதற்காக ஒரு விடயத்தை செய்கின்றோம் என்ற தெளிவு இதுபோன்ற மனிதர்களிடத்தில் இராது.

இரண்டாவதாக சலுகைக்காக சாதி மாறியவர்கள் :

அரசாங்கம் இந்த சாதி முன்னேற வேண்டும் என்று கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் குறிப்பிட்ட சாதிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்குகிறது.
தமிழகத்தில் அகமுடையார் பேரினம் பிற்படுத்தப்பட்டோர் சாதிகளின் பட்டியலில் உள்ளது.ஆனால் ஒரு சில அகமுடையார்கள் அற்ப சலுகைக்கு ஆசைப்பட்டு மாற்று சாதியின் பெயரில் சட்டவிரோதமாக சாதி சான்றிதழ் பெற்று பலன்களை பெறுகின்றனர்.
அகமுடையார் தனித்தன்மை அரசியல் சாத்தியப்பட்டால் நம்மால் மாற்று சாதியின் பெயரில் அரசின் சலுகைகள் பெற முடியாது என்ற காரணத்தால் முக்குலத்தோர் என்று போர்வைக்குள் ஒளிந்து கொள்கின்றனர்.

இறுதியாக பிற்போக்கு அரசியல்வாதிகள் :
சாதியும்,மதமும் மனிதனுக்கானது - அரசியல் அனைத்து உயிர்களுக்குமானது என்பதே தமிழ் தேசியத்தின் உயிர்நாடி கொள்கை.
ஆனால் இங்கு சில அரசியல் தலைவர்கள் தங்களின் அரசியல் சுயலாபத்திற்காக அகமுடையார் பேரினம் முக்குலத்தில் இருந்து விடுபடுவதை தடுத்து வருகின்றனர்.
அகமுடையார் பேரின அரசியல் சாத்தியமானால் அகமுடையார்கள் மத்தியில் மிகப்பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டுவிடும்,அதன் பிறகு நமக்கு கொடி பிடிக்க எவரும் வர மாட்டார்கள்.நம்மால் அரசியல் செய்ய முடியாது என்று எல்லா உண்மைகளும் அறிந்தும் அகமுடையார் பேரின அரசியலை தாமதிக்கும் வகையில் செயல்படுகின்றனர்.

#அகமுடையார்
#அகமுடையார்_பேரினம்
#மாமன்னர்_மருது_பாண்டியர்கள்
#மருதுபாண்டிய_மன்னர்கள்
#கொடை_வள்ளல்_பச்சையப்ப_முதலியார்
#போர்க்குடி_அகமுடையார்
#போர்க்குடி_அகம்படியர்

பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்!!! அதிகார மமதையின் உச்சம் 😡😡😡மாமன்னர் மருது பாண்டியர்களின் மூச்சுக்காற்று சு...
27/06/2026

பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்!!!

அதிகார மமதையின் உச்சம் 😡😡😡

மாமன்னர் மருது பாண்டியர்களின் மூச்சுக்காற்று சுற்றி கொண்டிருக்கும் திருப்பத்தூர் சீமையில்,அவர்களின் நினைவு தூணை மறைத்து அப்படி என்ன சேவையை செய்யப் போகின்றனர் தவெக கட்சியினர்?

உங்களின் விளம்பர அரசியலுக்காக பேருந்து நிலையம்,தொடர்வண்டி நிலையம்,சந்திப்புகள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பதாகை வைத்து இடையூறு ஏற்படுத்துவது போதாதா?

திரை கவர்ச்சி காரணமாக அரசியலுக்குள் நுழைந்தவர்களுக்கு வரலாறு பற்றிய புரிதலும்,தெளிவும் இருக்காது என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகியுள்ளது.

சிவகங்கை மாவட்ட நிர்வாகம்,திருப்பத்தூர் பேரூராட்சி நிர்வாகம்,தன்னார்வ தொண்டு அமைப்புகள் மேலும் கால தாமதம் ஏற்படுத்தாமல் உடனடியாக பதாகையை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கூறிக் கொள்கிறோம்.

மீண்டும் ஒரு முறை தவெக உட்பட எந்த கட்சியும் இதுபோன்ற கோமாளிதனத்தை புரியாத இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

#அகமுடையார்
#அகமுடையார்_பேரினம்
#மாமன்னர்_மருது_பாண்டியர்கள்
#மருதுபாண்டிய_மன்னர்கள்
#கொடை_வள்ளல்_பச்சையப்ப_முதலியார்
#போர்க்குடி_அகமுடையார்
#போர்க்குடி_அகம்படியர்

27/06/2026

அகமுடையார் தனிப்பேரின அரசியல் அமைவதை சில புல்லுருவிகள் தாமதப்படுத்தலாம்,ஆனால் என்றாக இருந்தாலும் அது அமைந்தே தீரும் 💛💚

#அகமுடையார்
#அகமுடையார்_பேரினம்
#மாமன்னர்_மருது_பாண்டியர்கள்
#மருதுபாண்டிய_மன்னர்கள்
#கொடை_வள்ளல்_பச்சையப்ப_முதலியார்
#போர்க்குடி_அகமுடையார்
#போர்க்குடி_அகம்படியர்

கண் கண்ட தெய்வம் 🙏🙏🙏மாமன்னர் மருது பாண்டியர்களை போன்று வேடம் தரித்த சாதாரண மனிதர்களேயே பொது மக்கள் பயபக்தியுடன் வணங்குகி...
27/06/2026

கண் கண்ட தெய்வம் 🙏🙏🙏

மாமன்னர் மருது பாண்டியர்களை போன்று வேடம் தரித்த சாதாரண மனிதர்களேயே பொது மக்கள் பயபக்தியுடன் வணங்குகின்றனர் என்றால்,மாமன்னர் மருது பாண்டியர்கள் வாழ்ந்த காலத்தில் பொது மக்கள் அவர்களை எப்படி போற்றி வணங்கி இருப்பார்கள் என்று எண்ணும் போதே உடல் சிலிர்கிறது!!!

#அகமுடையார்
#அகமுடையார்_பேரினம்
#மாமன்னர்_மருது_பாண்டியர்கள்
#மருதுபாண்டிய_மன்னர்கள்
#கொடை_வள்ளல்_பச்சையப்ப_முதலியார்
#போர்க்குடி_அகமுடையார்
#போர்க்குடி_அகம்படியர்

தற்போது வரையில் அதிகளவில் அகம்படி முதலி கல்வெட்டுகளே கிடைத்துள்ளன,ஆனால் முதலியார் பட்டம் கொண்டவர்கள் அகமுடையார் கிடையாதா...
26/06/2026

தற்போது வரையில் அதிகளவில் அகம்படி முதலி கல்வெட்டுகளே கிடைத்துள்ளன,ஆனால் முதலியார் பட்டம் கொண்டவர்கள் அகமுடையார் கிடையாதாம்...

அகம்படியர் சங்கத்தை முதன்முதலில் தொடங்கியவர்கள் பிள்ளை பட்டம் கொண்ட அகமுடையார்கள்,

அகம்படியர் மாநாட்டை முதன்முதலில் ஏற்பாடு செய்தவர்கள் பிள்ளை பட்டம் கொண்ட அகமுடையார்கள்,

தற்கால அரசியலில் இரண்டு அகமுடையார் எழுச்சி மாநாடுகளை நடத்தி காட்டியவர் ஒரு பிள்ளை பட்டம் கொண்ட அகமுடையார்,

முக்குலத்தோர் என்ற மூடத்தனத்திற்கு காட்டமான எதிர்ப்பை பதிவு செய்தவர்கள் பிள்ளை பட்டம் கொண்ட அகமுடையார்கள்,ஆனால் பிள்ளை பட்டம் கொண்டவர்களும் அகமுடையார் கிடையாதாம்...

தேவர் மற்றும் சேர்வை பட்டம் கொண்ட அகமுடையார்களுக்கு மற்ற அகமுடையார் உறவுகளோடு உள்ள தொடர்பை துண்டித்து அதன் மூலம் நம் ஒற்றுமையை சிதைக்க காத்து கிடைக்கின்றனர் பிணந்தின்னிக் கழுகுகள்.மாற்று சாதியினரின் இந்த பிரிந்தாலும் சூழ்ச்சிக்கு ஒருசில அகமுடையார் பதர்களும் துணை நிற்பது தான் பெருந்துயராக உள்ளது.

#அகமுடையார்
#அகமுடையார்_பேரினம்
#மாமன்னர்_மருது_பாண்டியர்கள்
#மருதுபாண்டிய_மன்னர்கள்
#கொடை_வள்ளல்_பச்சையப்ப_முதலியார்
#போர்க்குடி_அகமுடையார்
#போர்க்குடி_அகம்படியர்

இருகுலத்தோர் மற்றும் வெள்ளாடுகளின் கூட்டு சதி!!! ஒரு பெரும்பான்மை சமூகம் ஒற்றுமையாக பயணிப்பது சிறுபான்மை சாதிகளில் சிலரு...
26/06/2026

இருகுலத்தோர் மற்றும் வெள்ளாடுகளின் கூட்டு சதி!!!

ஒரு பெரும்பான்மை சமூகம் ஒற்றுமையாக பயணிப்பது சிறுபான்மை சாதிகளில் சிலருக்கு மிகுந்த நெருடலாக இருக்கும்,இது இயற்கை.

வட தமிழக அகமுடையார்கள் - தென் தமிழக அகமுடையார்கள் யாவரும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் என்பதை தொடர்ந்து கல்வெட்டுக்கள்,வரலாற்று ஆவணங்கள்,உள்ளிட்டவைகளை மேற்கோள் காட்டி நாமும்,நமது அகமுடையார் பேரின ஆய்வாளர்களும் பதிவு செய்து வருகின்றோம்.

ஆனால் வரலாற்று புரிதல் இல்லாத சில தான்தோன்றிகள் திரை கவர்ச்சி,வாக்கரசியல்,தங்களின் சுயநலம் கருதி அகமுடையார் பேரினம் ஒரு குடையின் கீழ் அணி சேர்வதற்கு தொடர்ந்து இடர்களை ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டு வருகின்றனர்.

தொடக்கத்தில் அகம்படியர் - அகமுடையார் என்று பிதற்றி வந்தனர்,அதற்கு தகுந்த வரலாற்று ஆதாரங்களை நாம் பகிர்ந்த போது,வட தமிழக அகமுடையார்கள் வேறு,தென் தமிழக அகமுடையார்கள் வேறு என்று ஒப்பாரி வைக்க தொடங்கினர்.அதற்கும் நாம் சம்மட்டி அடி கொடுக்கும் விதமாக வரலாற்று தகவல்களை பகிர்ந்தோம்.இறுதியில் பட்டம் குறித்து பிரிவினையை விதைத்தனர்.

இவை அனைத்தையும் நாம் தொடர்ந்து எதிர்கொண்டு வந்து தான் இன்று இந்த ஒற்றுமையை நாம் அடைந்துள்ளோம்.இனியும் நாம் தொடர்ந்து சமுதாயப் பணியில் முழுவதுமாக ஈடுபடுவோம்.

இனிமேலாவது இருகுலத்தோர்களும்,வெள்ளாட்டிகளும் அகமுடையார் பேரினத்திற்கு குந்தகம் விளைவிக்காமல் அவரவர் சாதியின் ஒற்றுமை பற்றி சிந்திக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கின்றோம்.

#அகமுடையார்
#அகமுடையார்_பேரினம்
#மாமன்னர்_மருது_பாண்டியர்கள்
#மருதுபாண்டிய_மன்னர்கள்
#கொடை_வள்ளல்_பச்சையப்ப_முதலியார்
#போர்க்குடி_அகமுடையார்
#போர்க்குடி_அகம்படியர்

அற்ப மகிழ்ச்சிக்கும்,ஆழமான மகிழ்ச்சிக்கும் இடைப்பட்ட வேறுபாடுகளை அகமுடையார்கள் உணர வேண்டும்!!! உலக இன்பங்களிலேயே உயர்ந்த...
26/06/2026

அற்ப மகிழ்ச்சிக்கும்,ஆழமான மகிழ்ச்சிக்கும் இடைப்பட்ட வேறுபாடுகளை அகமுடையார்கள் உணர வேண்டும்!!!

உலக இன்பங்களிலேயே உயர்ந்தது,அடுத்தவரை மகிழ்வித்து அதை பார்த்து நாம் மகிழ்வது தான்.

ஆனால் நம் அகமுடையார் பேரின இளைஞர்களில் சிலருக்கு அது தெரிவதில்லை,உண்மையை கூற வேண்டும் என்றால் அவர்களை இறுதி வரை உணரவிடாமல் தங்களது கைபாவையாக அரசியல்வாதிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

முதல் படம் : மருதிருவர் கல்வி மையம்,
இரண்டாம் படம் : குருபூஜைக்கு செல்லும் இளைஞர்கள்.

மற்றவர்கள் நம்மை பார்த்து முகம் சுளிக்க வைக்க வேண்டும் எனில் நொடி பொழுது போதும்,ஆனால் அவர்களே நம்மை பாராட்ட வேண்டும் எனில் ஒரு யுகமே தேவைப்படும்.

குருபூஜைக்கு செல்லும் தருணத்தில் போக்குவரத்து விதிமீறல்கள் செய்து,உயிருக்கு ஆபத்தான நிலையில் பயணிப்பது,சாலையில் பயணிக்கும் வாகனங்களுக்கு இடைஞ்சல் செய்வது,அதிக சத்தத்தை ஏற்படுத்தி ஒலி மாசு ஏற்படுத்துவது என பொது மக்கள் நம்மை வெறுக்க பல காரணங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

அதேநேரத்தில் நம்மை அவர்கள் ஆதரிக்க வேண்டுமெனில் இதுபோன்று கல்வி மையங்கள் நடத்துவது அல்லது கல்வி மையங்களை நடத்துபவர்களுக்கு இயன்ற உதவி புரிவது,மரம் நடுவது,குருதி கொடை அளிப்பது,அன்னதானங்கள் வழங்குவது,ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குவது மூலமே அவர்களின் அன்பையும்,ஆதரவையும் நாம் பெற முடியும்.

குருபூஜை நாட்களில் நாம் செய்யும் நிகழ்வுகள் சில வாரங்களுக்கு மட்டுமே மக்கள் மனதில் நிற்கும்,ஆனால் மேற்கண்ட அற செயல்கள் புரிவதன் மூலம் நம் மறைவுக்குப் பின்னரும் நம்மை மக்கள் தங்கள் மனதில் ஒரு அறையில் என்றென்றும் பாதுகாத்து வைப்பார்கள் உறவுகளே.

#அகமுடையார்
#அகமுடையார்_பேரினம்
#மாமன்னர்_மருது_பாண்டியர்கள்
#மருதுபாண்டிய_மன்னர்கள்
#கொடை_வள்ளல்_பச்சையப்ப_முதலியார்
#போர்க்குடி_அகமுடையார்
#போர்க்குடி_அகம்படியர்

சென்னை மாநகராட்சிக்கு பாராட்டுக்கள் 👏சென்னை மாநகரில் உள்ள பள்ளிக்கரணை எனும் பகுதியில் ஒரு மேம்பாலத்தின் தூணில் இந்திய சு...
25/06/2026

சென்னை மாநகராட்சிக்கு பாராட்டுக்கள் 👏

சென்னை மாநகரில் உள்ள பள்ளிக்கரணை எனும் பகுதியில் ஒரு மேம்பாலத்தின் தூணில் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு தூணாக விளங்கிய மாமன்னர் மருது பாண்டியர்களின் திருவுருவப்படத்தை வரைந்துள்ளார்கள் 💛💚

#அகமுடையார்
#அகமுடையார்_பேரினம்
#மாமன்னர்_மருது_பாண்டியர்கள்
#மருதுபாண்டிய_மன்னர்கள்
#கொடை_வள்ளல்_பச்சையப்ப_முதலியார்
#போர்க்குடி_அகமுடையார்
#போர்க்குடி_அகம்படியர்

Address

Madurai
625006

Website

Alerts

Be the first to know and let us send you an email when போர்க்குடி_அகம்படியர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category