16/01/2026
#சல்லிக்கட்டு_வீரவிளையாட்டா?
மாட்டை அடக்குவது வீரமா..
உரிமைக்குப் போராடுவது வீரமா?
#இதுதமிழர்களின்பாரம்பரிய
விளையாட்டு என்கிறார்கள்.
வெங்காயம்,உலகம் முழுவதும் நிர்வாணமாய் காட்டுமிராண்டியாய்
வாழ்ந்த மனிதன் சமூகமாய் வாழத்தொடங்கிய காலம் முதல் மனிதனின் முதல் தொழிலே கால்நடை வளர்த்தல்தான்.
அப்படி வளர்ந்த மாடுகளை அடக்கி விளையாடுவது அன்றையப் முக்கிய பொழுதுபோக்கு.
இது தமிழர்களுக்கு மட்டுமுள்ள பாரம்பரியமல்ல.
மாடு பொருளாதார சக்தி
#சல்லிக்கட்டு_தமிழர்அடையாளம்
இருக்கலாம், ஆனால் இப்போது அது ஜாதி அடையாளம். குறிப்பாக தென்மாவட்ட ஆதிக்கஜாதியினரா ன தேவர் கும்பலின் சண்டியர்தனம், மைனர்தனத்தை காட்டும் விளையாட்டாக மாறியுள்ளதை மறுக்க முடியுமா?
இதுமட்டுமா தமிழர் அடையாளம்?
யாதும்ஊரே யாவரும் கேளீர்,
எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும், சித்தர் மரபு, சாதியற்ற வாழ்வு, ஈகை,வீரம், கொடை, காதல், அறம், நீர்மேலாண்மை, சுயமரியாதை இதுகூடத்தான் தமிழர் மரபு, தமிழர் அடையாளம்.
இதற்காக இந்த வெளக்கெண்ணைகள் போராடியதுண்டா?
#தமிழகத்தில்_இந்த_ஒருமாதத்தில்
நடந்த முக்கிய நிகழ்வுகளென்ன?
கோயிலில் அர்ச்சகராகும் உரிமையை உச்சிக்குடுமி மன்றம் பறித்தது
இடஒதுக்கிட்டை சரியாக அமல்படுத்தவில்லை
சாரயநாடாக மாறி நாறிக்கொண்டிருக்கிறது தமிழகம்.
புயல்,வெள்ளப்பாதிப்பிலிருந்து இன்னும் கரையேற முடியவில்லை.
கடுமையான விலைவாசி.
முல்லைப்பெரியாறு,காவிரி,மீத்தேன், கூடங்குளம், மோடிப் பேரழிவு,
தேயிலைக்கு விலையில்லை
கரும்பு,நெல்லுக்கு விலையில்லை
ஹைட்ரோ கார்பன், தாதுமணல் கொள்ளை, நியூட்ரினோ,ஆற்றுமணல் கொள்ளை, இடஒதுக்கீடு பறிப்பு, நீட் திணிப்பு, இந்தித் திணிப்பு, பணமதிப்புழப்பு, GST, டோல்கேட், விவசாயம் அழிப்பு, கால்நடை அழிப்பு,
அதானிக்கு அம்பானிக்கு தமிழ்நாட்டையே தாரை வார்க்கிறார்கள்
வடஇந்திய முதலாளிகளால் திட்டமிட்டு தமிழக பொருளாதாரம் வாழ்வாதாரம் நசுக்கப் படுகிறது
இப்படி 100பிரச்சனைகள் நம்மைச் சுத்திச்சுழன்று அடித்துக் கொண்டிருக்கும் வேலையில்
இதற்கெல்லாம் போராடாத சல்லிக்கட்டுப் போராட்ட ஆதிக்கச் ஜாதிக்கும்பல் தமிழகத்தின் ஒரே பிரச்சனை சல்லிக்கட்டுக்கானத் தடை என்பதுபோல் மக்கள் பிரச்சனைகளை மடைமாற்றி வெற்றுப் போராட்டங்களை நடத்தி வந்தனர் இந்த வெண்ணெய் வெட்டி வீரர்கள். வெளக்கெண்ணெய்கள்.
மனிதன் மனிதனாக மாறாத காலத்திலிருந்தே மனிதனின் முக்கிய உணவு மாட்டிறைச்சிதான்
அதை இந்துமதவெறியர்கள் இந்திய ஒன்றியம் முழுவதும் படிப்படியாக தடைசெய்து வந்த போது இவர்கள் வாயில் கொழக்கட்டையை வைத்திருந்தது போல் அமைதியாக இருந்தார்கள்.
தமிழகத்தில் கடந்த 40ஆண்டாக எப்படியாவது காலூன்றிவிட வேண்டுமென பார்ப்பன நரி தந்திரத்துடன் வேலைசெய்துவரும் இந்துத்துவா மதவெறி கும்பல்
தான் வளர்வதற்கான ஒரு வாய்ப்பைக்கூட தவறவிடுவதில்லை.
கவுண்டர் ஜாதிவெறியர்களை கணிசமாக இழுத்துவிட்டனர்
BCதமிழிசையை நிறுத்தி நாடார் மத்தியிலும் பரவி வருகின்றனர்.
முகடுமுட்டி பயல்களான தேவர்ஜாதி கும்பலை வளைக்க குருபூஜை தரிசனம், கந்துவட்டிக் கும்பலுடன் கைகோர்ப்பு, இதோ இப்போது சல்லிக்கட்டுக்கு ஆதரவாக இருப்பதாகக் காட்டி முக்குலத்தோர் மத்தியிலும் பரவிவருகின்றனர்.
மோடி வந்த பிறகு ஆண்டுக்கு 15000க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்,
உயிரோடிருக்கும் விவசாயிகள் அரைப்பிணமாக வாழ்கிறார்கள்.
இவர்களோ சல்லிக்கட்டு என்கிற ஒருநாள்கூத்துக்கு, பலநாள் போராட்டக் கூத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சல்லிக் கட்டுக்குப் போராடும் இதே சல்லிப்பயலுகதான் தத்தமது ஊரில் தனிச்சுடுகாடு, தனிடீக்கிளாஸ், ஆலயநுழைவுக்காக போராடும் தலித் மக்கள் போராட்டத்தை ஆதிக்க வெறிகொண்டு அடக்குகிறார்கள்.
சல்லிக்கட்டு ஆதி தமிழர் பண்பாடு என வக்காலத்து வாங்குவோர்
ஜாதி மட்டும் தமிழர் பண்பாடா
என்பதை சொல்வார்களா? இடையில் புகுந்த ஜாதியை இறுக்கமாகப் பிடிப்பதேனோ?
#சல்லிக்கட்டு_வீரவிளையாட்டாம்.
10டன் வரும் 200பேர் கூடி, 5அறிவுள்ள 1/2 டன் மாட்டின் மீது தொங்குவதுதான்
வீர்ர்ர்ர விளையாட்டாம்.
அப்படிப்பார்த்த தினமும்பேருந்தில் படிகட்டில் தொங்கிய படி பள்ளிக்கு போவதும் வீர விளையாட்டுதான்
ஒத்தைக்கு ஒத்தை மாட்டை அடக்குவது என்பது யாராலும் முடியாது. 200பேர் சேர்ந்து கூடி விசிலடித்து, பறையடித்து, காட்டுக்கத்து கத்தி ,மாட்டை மிரட்டி, ஓட வைத்து, அதன் கவனத்தை திசைதிருப்பி ஒரு 4நொடி அதன் திமிலைப்பிடித்துத் தொங்கினால் அதுதான் வீரமாம் வீர விளையாட்டாம்.
5அறிவுள்ள மாட்டில் தொங்குவது வீரமாம்.லஞ்சம் வாங்கும் 6அறிவுள்ள தாசில்தாரிடம் லஞ்சம் தரமுடியாதுடா என மீசையை முறுக்கி வீரத்தைக் காட்ட முடியுமா?
ஜெயாவிடம்,மோடியிடம், அதானியிடம் வீரத்தைக் காட்ட முடியுமா?
மாட்டரசியலை நடத்தும் மரமண்டையர்களான பிஜேபி கும்பல், பசுவை வைத்து ஒரு அரசியல், மாட்டிறைச்சியை வைத்து ஒரு அரசியல், சல்லிக்கட்டை தடை செய்து ஒரு அரசியல் அதை நீக்குவது போல் ஒரு நாடக அரசியல்
உண்மையில் நீங்கள் மாட்டுக்குப் பொறந்த ரெண்டுகால் மாடுதான்டா
ஏதோ சுதந்திரப் போராட்டம் நடத்தி ஜெயித்ததுபோல் ஊடகங்களில் பிஜேபியினர் வாயெல்லாம் பல்லாத இளித்தபடி காட்சியளிக்கிறார்கள். த்தூ..
சல்லிக்கட்டை மோடி பெயரில் நடத்தவேண்டுமென சொல்கிறார்
டம்மிபீசு பொன்.ராதா
என்ன பெயர் வைப்பது?
"முகடுமுட்டு மோடியின் சல்லிக்கட்டு"
" சங்கி மோடியின் சல்லிக்கட்டு"
"முட்டாப்பய மோடியும்,
முட்ட வரும் காளைகளும்"
"காளையும் எருமையும்"
யப்பா பொன்ராதா இப்படி எதாவது ஒரு பெயரை வச்சுக்க.
எல்லா ஓட்டுக்கட்சி பொறுக்கிகளும் நாங்களும் போராடினோம், நாங்களும்தான் காரணமென முதுகில் சுவரொட்டி ஒட்டியபடி அலைகிறார்கள்
சல்லிக்கட்டுக்கு மோடியின் பெயரை வைக்க வேண்டுமென்றால்
மோடியின் தயவில், மீனவர்மீது, இலங்கை கடற்படை தாக்குதலென
அதற்கும் மோடி பெயரை வைக்கலாமே.
மாட்டைக் கோமாதாவென அடையாளப்படுத்தும் அந்த மதவெறிக்கும்பலும்
தேவர்ஜாதி ஆதிக்கச் சல்லிக்கட்டில்
காளைகளை தமிழர் பாரம்பரியமாக அடையாளப்படுத்தும் ஜாதிவெறியர்களும் மாட்டுக்கறி தின்னாத ஜாதியென பெருமை பேசும் ஜாதிவெறியர்களும்இணையுமிடம் இதுதான்.
RSSன் புதியகிளை,தமிழ்தேசிய RSS.
ஒரு சீட்டு கூட வாங்காத பிஜேபி நாட்டை ஆளக்காரணம் இப்படி சொரணையில்லாமல் இருப்பதால்தான்.