Thiru. U. Sagayam IAS

Thiru. U. Sagayam IAS இந்தியாவின்
முதல் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம்.
'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து'

22/11/2025
10/08/2023

21/04/2023
03/07/2016

*மக்கள் பாதை மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்*

_மக்கள் பாதை அன்பர்களுக்கு வணக்கம். சமூக மாற்றத்தை முன்னோக்கி எடுத்துச் செல்லும் மக்கள் பாதை அமைப்பிற்கு, மாவட்ட வாரியான பொறுப்பாளர்கள் 21 மாவட்டங்களுக்கு மக்கள் பாதை தலைமை அறிவிக்கிறது._

*அறிவித்தோர்:*
1. திரு. நாகல்சாமி அவர்கள்
( மாநில தலைவர்)
2. திரு. இளந்திரு மாறன் அவர்கள்(மாநில ஒருங்கிணைப்பாளர்)

*மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியல்:*

*திருவண்ணாமலை:*
1. வடிவேல் - இணை ஒருங்கிணைப்பாளர்.

*திண்டுக்கல்:*
1. மகேந்திர பாபு - இணை ஒருங்கிணைப்பாளர்.
2. பன்னீர் செல்வம் - துணை ஒருங்கிணைப்பாளர்.

*பெரம்பலூர்:*
1. நவநீதன் - துணை ஒருங்கிணைப்பாளர்.

*புதுக்கோட்டை:*
1. ராஜேந்திரன் - துணை ஒருங்கிணைப்பாளர்

*தஞ்சாவூர்:*
1. அலெக்சாண்டர் - இணை ஒருங்கிணைப்பாளர்
2. சுமதி - துணை ஒருங்கிணைப்பாளர்

*திருவள்ளூர்:*
1. தமிழொளி - இணை ஒருங்கிணைப்பாளர்

*திருவாரூர்:*
1. மோகன் தாஸ் - இணை ஒருங்கிணைப்பாளர்.

*தூத்துக்குடி:*
1. ராக்கப்பன் கணேசன்- இணை ஒருங்கிணைப்பாளர்

*திருநெல்வேலி:*
1. சுசிலா ராஜ்குமார் - துணை ஒருங்கிணைப்பாளர்.

*விருது நகர்:*
1. சங்கர் குருராஜா - துணை ஒருங்கிணைப்பாளர்

*சிவகங்கை:*
1. கரோலின் - துணை ஒருங்கிணைபாளர்

*திருப்பூர்:*
1. சுரேந்தர் - இணை ஒருங்கிணைப்பாளர்.

*காஞ்சிபுரம்:*
1. சங்கர் - ஒருங்கிணைப்பாளர்
2. பிரதாப் சந்துரு- இணை ஒருங்கிணைப்பாளர்.

*கடலூர்:*
1. புஷ்பராஜ்: கூடுதல் ஒருங்கிணைப்பாளர்

*சேலம்:*
1. சதீஷ் பெருமாள் - கூடுதல் ஒருங்கிணைப்பாளர்.

*கரூர்:*
1. மோகன் ராஜ்- இணை ஒருங்கிணைப்பாளர்
2. விஜய்- துணை ஒருங்கிணைப்பாளர்

*நாமக்கல்:*
1. தினேஷ் மனோகரன் - இணை ஒருங்கிணைப்பாளர்
2. ஸ்ரீகாஜ் - துணை ஒருங்கிணைப்பாளர்

*வேலூர்:*
1. தியாக மூர்த்தி - இணை ஒருங்கிணைப்பாளர்
2. விஜயகாந்த் - துணை ஒருங்கிணைப்பாளர்

*விழுப்புரம்:*
1. சந்தோஷ் குமார் - இணை ஒருங்கிணைப்பாளர்
2. முஹம்மத் அனீஸ் - துணை ஒருங்கிணைப்பாளர்

*மதுரை:*
1. விவேக் - கூடுதல் ஒருங்கிணைப்பாளர்

*தேனி:*
1. வெங்கடேசன் - துணை ஒருங்கிணைப்பாளர்

_மக்கள் பாதை ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்ட அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். நீங்கள் அனைவரும் இச்சமூகப் பணியை செவ்வனே செய்வீர்கள் என்ற உறுதியுடனும், நம்பிக்கையுடனும் மக்கள் பாதை தலைமை._

*நன்றி,*
_மக்கள் பாதை தலைமை நிர்வாகக் குழு._

18/06/2016

📢📢📢📢📢📢📢சேலம் மாவட்டம் *மக்கள் பாதை* நண்பர்கள்
*கலந்தாய்வு கூட்டம் மற்றும் மரகன்றுகள் பராமரிப்பு பணி*

*நாள்:* 19-06-2016
*இடம்:* வாய்க்கால் பட்டறை
( கூட்டம் கண்ணன் இல்லத்தில்)
*நேரம்:* காலை 8 மணிக்கு
*காலை சிற்றுண்டியுடன்*

🎯*மக்கள் பாதை* உறுப்பினர் படிவம் பூர்த்தி செய்யாத நண்பர்கள் வரும்போது புகைப்படத்துடன் வரவும்

🎯தகவல் அறியும் சட்டம் பற்றிய தகவல்கள் சேகரித்து வரவும்

📡ஜீலை-27 கலாம் ஐயா நினைவாக மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான புதிய படைப்புகள் அறிவியல் கண்காட்சி நடத்துவது சார்ந்த கலந்துறையாடல்

நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கவும்

சதீஸ் பெருமாள்
சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
*மக்கள் பாதை*

பெப்சி கம்பெனிக்கு சீல்வைத்து அமெரிக்காவையே நடுங்க வைத்த சகாயம் - மறைக்கப்பட்ட உண்மைலஞ்சம் தவிர்த்து நேர்மையுடன் வாழும் ...
08/06/2015

பெப்சி கம்பெனிக்கு சீல்வைத்து அமெரிக்காவையே நடுங்க வைத்த சகாயம் - மறைக்கப்பட்ட உண்மை
லஞ்சம் தவிர்த்து நேர்மையுடன் வாழும் திரு.சகாயம் அவர்கள், ஒரு அரசு அதிகாரி எப்படி இருக்க வேண்டும்? என தெரிவித்துள்ளார்.
அவர் கூறியது பின்வருமாறு:-
''என்னை கோயம்புத்தூருக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணியிருந்த நேரம். என் பொண்ணு யாழினிக்கு அப்போ மூணு வயசு. திடீர்னு ஒருநாள் ராத்திரி அவ மூச்சுவிட சிரமப்பட்டா. ஹாஸ்பிடலுக்குத் தூக்கிட்டுப் போனா உடனே அட்மிட் பண்ணச் சொல்லிட்டாங்க. மாசக் கடைசிங்கிறதால கையில ஆயிரம் ரூபாய்கூட இல்லை. புது ஊரு. அறிமுகம் இல்லாத மனுசங்க.
எனக்குக் கீழே வேலை பார்க்குறவங்ககி
ட்ட கடன் கேட்கவும் சங்கடமா இருந்துச்சு. காஞ்சிபுரத்துல நான் வேலை பார்த்துட்டு இருந்தப்ப, எனக்கு நண்பரான ஒரு ஸ்கூல் டீச்சரும் அப்ப கோவைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி வந்திருந்தாரு. அவர்கிட்ட தயங்கிட்டே நாலாயிரம் ரூபாய் கடன் கேட்கவும், அரை மணி நேரத்துல கொண்டுவந்து கொடுத்தார். உடனே, குழந்தைக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சுட்டோம். ஆனா, சம்பளம் வாங்கினதும் அந்தக் கடனை அடைச்சதும்தான் என் மனசுல இருந்த பாரம் இறங்குச்சு!''
''நான் அந்த கோயம்புத்தூர் சம்பவத்தை ஏன் சொல்றேன்னா... அப்ப என் கன்ட்ரோல்ல 650 மதுபானக் கடைகள் இருந்தன. லைசென்ஸ் புதுப்பிக்க கடைக்குத் தலா 10 ஆயிரம் ரூபாய்னு கொடுக்கத் தயரா இருந்தாங்க. நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, அடுத்த அஞ்சாவது நிமிஷம் 65 லட்ச ரூபாய் என் வீடு தேடி வந்திருக்கும். ஆயிரம் ரூபாய்கூட கையில் இல்லாத, மகளுக்கு உடம்பு சரியில்லாத சூழ்நிலையில் மனநிலை என்ன மாதிரி இருக்கும்னுயோசிச்சுப்பாருங்க. ஆனா, அதெல்லாம்தான் ஓர் அரசு அதிகாரியின் நேர்மைக்கான சோதனை. நேர்மையா இருக்குறதுல ஒரே ஒரு சிக்கல் மட்டும்தான். நாளுக்கு நாள் நமக்கு எதிரிகள் அதிகரிச்சுட்டே போவாங்க. அவங்களை மட்டும் சமாளிச்சுட்டாப் போதும்!'' - தடதடக்கும் வார்த்தைகளில் கொப்பளிக்கிறது உற்சாகம்.
''புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுனை குக்கிராமம்தான் என் ஊரு. 'மத்தவங்க தோட்டத்து மாங்காய் தெருவுல கிடந்தாக்கூட எடுத்துட்டு வரக் கூடாது'ன்னு சொல்ற அம்மா. 'நீ படிச்சு கலெக்டர் ஆகி, உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு எல்லாம் உதவணும்டா'ன்னு சொல்லிட்டே இருக்குற அப்பா. 'கலெக்டர்தானே... ஆயிடுவோம்'னு படிச்சேன். ஆயிட்டேன். வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் நம்ம மனசு எந்தளவுக்குப் புத்துணர்ச்சியோ
டவும் புனிதமாகவும் இருக்கோ... கடைசி நாளின்போதும் அதே உணர்ச்சியோடு ஓய்வு பெறணும்னு மட்டும் முடிவு பண்ணேன்.
காஞ்சிபுரத்துல டி.ஆர்.ஓ-வா இருந்தப்ப ஒரு பெரியவர் தான் வாங்கிய பெப்சியில் அழுக்குப் படலம் இருந்ததாகப் புகார் கொடுத்தார். சாம்பிளை லேப் டெஸ்ட்டுக்கு அனுப்பினதுல, 'மனிதர்கள் குடிக்க ஏற்ற பானமில்லை'ன்னு ரிப்போர்ட் வந்தது. சட்டப்படி அந்த நிறுவனம் மேல என்ன நடவடிக்கை எடுக்கணும்னு ஒரு அறிக்கை தயாரிச்சேன். ரொம்ப யோசனைக்குப் பிறகு தாசில்தார்கிட்ட எட்டு பூட்டு மட்டும் வாங்கிட்டு வரச் சொன்னேன். எதுக்குன்னு புரியாம வாங்கிட்டு வந்தவரைக் கூட்டிக்கிட்டு மதுராந்தகத்துல இருக்குற பெப்சி கம்பெனிக்குப் போனேன்.
நான் தயாரித்த அறிக்கையின் ஒரு நகலை கம்பெனி மேனேஜர்கிட்ட கொடுத்துட்டு, 'கம்பெனியைப் பூட்டி சீல்வைக்கப் போறோம். எல்லாரையும் வெளியே வரச் சொல்லுங்க'ன்னு சொன்னோம். அந்த மேனேஜரைவிட என்கூட வந்த தாசில்தார் ஆடிப் போயிட்டாரு. 'சார்... பெரிய பிரச்னை ஆயிடும். எதுக்கும் கலெக்டரை ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்'ன
ு பதறுனாரு. 'கலெக்டரைக் கேட்டா சீல்வைக்க விட மாட்டாரு. சட்டப்படி இந்தக் கம்பெனியை மூட நமக்கே அதிகாரம் இருக்கு. நீங்க தைரியமா உங்க கடமையைச் செய்யுங்க'ன்னு அவரை உள்ளே அனுப்பினேன். ஒரு மணி நேரம் கழிச்சு இன்னும் பதற்றத்தோடு வெளியே வந்தவரு, 'சார்... அவங்க அமெரிக்கா வரைக்கும் பேசுறாங்க சார். சி.எம்-கிட்ட பேசுறதாச் சொல்றாங்க சார். என்ன பண்ணலாம்?'னு கேட்டாரு. 'உள்ளே இருக்கிறவங்களை அரெஸ்ட் பண்ணிட்டு சீல்வைக்க வேண்டியதுதான்'னு நான் சொல்லவும் தான் எல்லாரும் பயந்து வெளியே வந்தாங்க. கம்பெனியை இழுத்து மூடி, எட்டு பூட்டுகளையும் போட்டு சீல்வெச்சுட்டோம்.
நான் உடனே அலுவலகத்துக்குப் போகாம ஒரு குக்கிராமத்துக்குப் போயி ரேஷன் கடைபள்ளிக்கூடத்தை எல்லாம் ஆய்வு பண்ணி முடிச்சுட்டு, ராத்திரி எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தேன். என் மனைவி வாசல்லயே காத்துட்டு இருந்தாங்க. கலெக்டர், சீஃப் செக்ரெட்டரி, உள்துறைச் செயலாளர்னு பலரும் என்னைக் கேட்டு வீட்டுக்கு போன் பண்ணிஇருக்காங்க. நான் திரும்ப எல்லோருக்கும் போன் பண்ணா, 'யாரைக் கேட்டு சீல்வெச்சீங்க? என்ன காரியம் பண்ணியிருக்கீங்க தெரியுமா?'ன்னு எல்லாரும் கேள்வி கேட்டாங்க. 'நான் என் கடமையைத் தான் சார் செஞ்சேன். மக்களுக்கு நல்லது செஞ்சதுக்காக சஸ்பெண்ட் பண்ணா, தாராளமாப் பண்ணிக்கோங்க'ன்னு சொல்லிட்டேன். மறுநாள் எந்தப் பத்திரிகைலயும் பெட்டிச் செய்தியாக்கூட பெப்சிக்கு சீல்வெச்ச சம்பவம் ரிப்போர்ட் செய்யப்படவே இல்லை. ரெண்டு நாள் கழிச்சு ஜூனியர் விகடன்ல மட்டும் அந்தச் செய்தி விரிவா வந்திருந்தது. அதுக்குப் பிறகுதான் பெப்சிக்கு நான் சீல்வெச்ச விஷயமே வெளி உலகத்துக்குத் தெரிஞ்சது.
சகாயம் ஐ.ஏ.எஸ்... மதுரையில் ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பில் எல்.ஐ.சி. ஹவுஸிங் லோன் மூலம் கட்டப்பட்ட ஒரு வீடு, வங்கியில் 7,172 ரூபாய் சேமிப்பு எனப் பகிரங்கமாகத் தனது சொத்துப் பட்டியலை வெளியிட்ட இந்தியாவின் முதல் ஐ.ஏ.எஸ்., அதிகாரி
---------------------------------------------
---------------------------------------
தமிழ் வானொலிகளுள், ஓர் வித்தியாசமான இசைத் தொழில்நுட்பத்தி
ல், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் Tune in இல் புரட்சி எப்.எம் ஐக் கேட்டு மகிழ இங்கே கிளிக் செய்யுங்கள

புகார் சொன்னால் நிர்வாண குளியல்!கிரானைட் மாஃபியாக்களின் பட்டியல்தயார்கிரானைட் கொள்ளையர்களின்பேராசையில் சிதைக்கப்பட்ட புர...
14/01/2015

புகார் சொன்னால் நிர்வாண குளியல்!
கிரானைட் மாஃபியாக்களின் பட்டியல்
தயார்
கிரானைட் கொள்ளையர்களின்
பேராசையில் சிதைக்கப்பட்ட புராதன
சின்னங்கள்,
இயற்கையை அழித்து வெட்டப்பட்ட
கிரானைட் மரணக் கிணறுகள்
மதுரை மாவட்டத்தில் மிரள வைக்கின்றன.
சேதாரமாகி எஞ்சியுள்ள பெரும் மலைகள்,
இனி விவசாயமே செய்ய முடியாது என்ற
நிலையில் இருக்கும் பாலைவன நிலங்கள்
பயமுறுத்துகின்றன. கிரானைட் தொழில்
என்ற பெயரில் மதுரையைச் சுற்றியுள்ள
கிராமங்களை அழித்து மனிதர்கள்,
பறவைகள், சிறு விலங்குகள் என்று பல
உயிரினங்கள் வாழ முடியாத நிலைக்குத்
தள்ளப்பட்ட இடங்களை வேதனையுடன்
சகாயம் சுற்றி வருகிறார்.
தினசரி காலை எட்டு மணிக்கே ஆய்வுப்
பணிகளை மேற்கொள்ளும் சகாயம் மதிய
உணவு இடைவெளியில்கூட
ஓய்வு எடுப்பதில்லை.
'விதிமீறலை விதி ஆக்காதீர்!’
கீழவளவு பகுதியில் இருந்த பொக்கிஷ
மலை என்கிற சக்கரை பீர்
மலை வெட்டப்பட்டிருப்பதைக் கண்ட
சகாயத்திடம், 'நடுப்பகுதி உனக்கு, வால்
பகுதி அவருக்கு,
சைடு பகுதி எனக்கு என்று துண்டுத்துண்டாக
அறுத்து பங்குபோட்டு கொண்டுள்ளனர்
பி.ஆர்.பி., ஒலம்பஸ், பி.கே.எஸ்.
கிரானைட் தரப்பினர்' என்று சொன்னார்கள்
அங்கே காத்திருந்த மக்கள். 'இந்த
மலையை முதலில்
அறுக்கும்போதே நாங்கள்
சட்டப்படி எல்லா இடங்களுக்கும்
சென்று முறையிட்டோம். ஆனால்
மலையை காப்பாற்ற முடியவில்லை'
என்று அப்போது மனு கொடுத்தார்
ஜமாஅத் தலைவர் முகமது காசிம்.
'இந்து முஸ்லிம் யார் திருமணம்
செய்தாலும் இங்கு வந்து வேண்டினால்,
அவர்களுக்கு ஆண் பிள்ளைகள்தான்
பிறக்கும். அதனால்தான்
பல்வேறு இந்துக்கள் சக்கரை என்ற
வார்த்தையை அவர்களின்
பெயர்களுக்கு முன்னாள்
வைத்துக்கொள்வார்கள். மத
நல்லிணக்கத்துக்கு பெயர்போன
இடத்தை அழித்துவிட்டனர்' என்றார்
ஒரு முதியவர்.
பொக்கிஷ மலையைச் சுற்றி இருந்த
கூத்தன் செட்டி புதுக்குளம்,
வேப்பம்குடி கண்மாய், குதிரை சாம்பான்
கண்மாய் என்று அங்கிருந்த கண்மாய்
பகுதிகளுக்குள் கிரானைட்
கழிவுகளை மலைபோல்
கொட்டி வைத்திருந்தனர். மேலும் அந்தப்
பகுதி விவசாயிகளிடம் செயற்கையாக
பஞ்சத்தை உருவாக்கி நிலங்களை சொற்ப
தொகைக்கு மிரட்டி வாங்கி,
அவர்களை அந்த
இடத்தைவிட்டே விரட்டிவிட்டனர் என்கிற
அதிர்ச்சித் தகவல்களையும் மக்கள்
சோகத்துடன் சொல்ல, அதையும் வாய்ஸ்
ரெக்கார்டரில் பதிவு செய்துகொண்டார்
சகாயம்.
அடைஞ்சான்பட்டியில் நடந்துபோகும்
பாதை கிரானைட் கொள்ளையர்களால்
மூடப்பட்டிருப்பதாக மக்கள் தெரிவித்தனர்.
அதை ஆய்வு செய்த சகாயம், பழைய
அரசு பதிவேட்டில் பாதை இருப்பதைப்
பார்த்துவிட்டு,
'விதிமீறலை விதி ஆக்காதீர்’
என்று ஆவணங்களை திருத்திய
அதிகாரிகளைக் கடிந்துகொண்டார்.
எல்லா கண்மாய்களும் கிரானைட்
கழிவுகள், கற்கள் என
நிரம்பி பாதை இல்லாமல் இருந்தது.
தாசில்தாரை அழைத்து, 'நீங்கள்
ஒரு கண்மாயை முழுமையாகக்
காட்டினால் உங்களுக்கு ரூ.10 ஆயிரம்
பரிசு தருகிறேன்!’ என்று சொல்ல... அவர்
அமைதியாக நின்றார்.
நிர்வாண குளியல்!
புது தாமரைபட்டி கிராமத்தில்
ஆய்வு செய்துகொண்டு இருந்த
சகாயத்திடம், 'ஐந்து தலைமுறையாக
இங்கு வாழ்கிறோம். கிராமத்தைச்
சுற்றி கிரானைட் தோண்ட
ஆரம்பித்துவிட்டனர். அவர்கள் வைக்கும்
வெடிகளில் வீடுகள்
பிளந்து இடிந்து விழுந்தன. புகார்
சொன்னதால் அங்கு வேலை பார்க்கும்
நபர்கள் எங்கள் தெருவில் உள்ள
அடி பம்பில் வந்து ஜட்டியுடன்
குளிப்பார்கள். சில சமயம் அதுவும்கூட
இருக்காது. பொம்பளைங்க
பயந்துக்கிட்டு தண்ணீர் எடுக்க போக
மாட்டாங்க. ஒருநாள் தனியா போன
ஒரு பெண்ணை பாலியல்
தொல்லை தந்தாங்க. அவனைப்
பிடித்து ஆலமரத்தில்
கட்டி வைத்திருந்தோம்.
பி.ஆர்.பி மைத்துனர்
வந்து அவனை மீட்டார். அதற்குப்
பிறகு அவர்கள் தினமும் தொல்லை தர
ஆரம்பித்தனர்.
மானத்தை அடகுவைத்து குடியிருக்க
முடியாம வேறு இடம் போய்விட்டோம்'
என்று பூட்டிய மற்றும் இடிந்த
வீடுகளைக்
காட்டி கதறி அழுதபடியே புகார் தந்தார்
முருகன்.
'இந்த இடத்துலதான்
நரபலி கொடுத்தாங்க...’ பாசுவதம் என்கிற
62 வயது பெண்மணி சகாயத்திடம், '2006-
ல் இங்கிருந்த 52
வீடுகளை மிரட்டி வாங்கிக்கொண்டனர்.
நீங்கள் நிற்கும் இந்த இடம்தான், 10
வருடங்களுக்கு முன்பு 'ஐ.ஆர்8’ என்கிற
நெல், ஓர் ஏக்கருக்கு 110 மூட்டைகள்
வீதம் விளைந்து விருது வாங்கின பூமி.
கிரானைட் இருக்குனு தெரிந்ததும்
எங்களை மிரட்டியும்,
தராதவர்களை அடித்தும் வாங்கினார்கள்.
500 அடிக்கு மேல
பூமியை குடைந்து வெட்டியதில்
குடிக்கக்கூட தண்ணீர் இல்லை.
காசுக்குத்தான் கேன்
தண்ணி வாங்குறோம்.
இப்போ எல்லா நிலங்களும் போய் கட்டட
வேலைக்குப் போறோம். அதுக்கும்
வெளி மாநில ஆட்களைக்
கூட்டி வந்துடுறாங்க. எங்க பூமியில
எங்களால பொழப்பு நடத்த முடியல. நெல்,
தானியம்னு பொன் விளைந்த
பூமி இப்போ சுடுகாடா கிடக்கு.
கோர்ட்டு்ல தீர்ப்பு கொடுக்கும் முன்பு,
நீதிபதி ஐயா இந்தப்
பூமியை ஒருமுறை நேரில்
வந்து பார்த்துட்டுப் போகச்
சொல்லி எழுதுங்க.. அப்போதான்
விவசாயம் பார்த்த
பூமி இப்படி சுடுகாடா போன விவரம்
அவருக்குப் புரியும்' என்று கலங்கினார்.
பூமா என்கிற பிராமண சமூகத்துப் பெண்,
'எனக்கு 60 வயது ஆகிறது. எங்க
தாத்தா காலத்தில் வாங்கிய நான்கு ஏக்கர்
நிலத்தில் விவசாயம் செய்துட்டு வர்றேன்.
என் நிலத்தை மிரட்டிக் கேட்டும் நான்
தரலை. அதனால என் நிலத்துக்குப்
போகவிடாமல்
வேலி போட்டு அடைத்துவிட்டனர்.
அறுவடை செய்ய முடியலை. ஒத்த
பொம்மனாட்டியா இவங்ககூட
மோதிட்டு இருக்கேன். என்ன ஆனாலும்
ஆகட்டும் என்று விவசாயம்
செய்து வருகிறேன்'' என்று தனது நெல்
வயலை காட்டினார்.
அந்த ஊரைச் சேர்ந்த உஷா என்கிற பெண்,
''எனது மூன்று வயது குழந்தையை இங்கு நரபலி கொடுத்துட்டாங்க ஊரே சேர்ந்து ஒரு மாதம் போராட்டம்
பண்ணியும் இன்னமும் குற்றவாளியைக்
கண்டுபிடிக்கலை. எதுவும் நடக்கலை.
இந்த இடத்துலதான் என்
புள்ளையை பலி கொடுத்தானுங்க...
நீங்களாவது ஏதாவது செய்யுங்கய்யா...'
என்று அருகில் இருந்த
கால்வாயை காட்டிக் கதறினார்.
'எதுவா இருந்தாலும் புகாராக கொடுங்க!’
சகாயத்திடம் பொதுமக்கள் புகார்
சொல்லிக் கொண்டிருந்த சமயத்தில்,
பி.ஆர்.பி தரப்பில் இருந்து வேவு பார்த்த
சூப்பர்வைசர் கண்ணன்,
பொதுமக்களிடமும் சகாயத்திடமும்
சண்டைக்கு வந்தார்.
குரலை உயர்த்தி பொதுமக்கள் சொல்லும்
குறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரம்பத்தில்
இருந்தே பிரச்னை செய்து வந்தவரை சகாயம்,
''உங்களிடம் நான் எதுவும் பேசவில்லை.
நீங்கள் எதுவாக இருந்தாலும்
முறைப்படி புகாராக எழுதி உங்கள்
தரப்பு விவரத்தைச் சொல்லுங்க''
என்று சொல்லியும் அவர்
கேட்கவே இல்லை.
கிரானைட் குவாரிகள் வந்த
பிறகு மதுரை பகுதிகளில் உற்பத்தியாகிய
உணவுத் தானியங்கள், சிறு குறு பயிர்
வகைகள் என்று மாவட்ட நிர்வாகம்
சார்பில் தேசிய உணவுக்
கழகத்துக்கு அனுப்பிய
புள்ளி விவரங்களைக்
கேட்டு வாங்கி இருக்கிறார் சகாயம். 10
ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மாவட்டத்தில்
உற்பத்தியான உணவு, உற்பத்தி என
இரண்டு பட்டியல்களையும்
எடுத்துக்கொண்டு, விவசாயிகளின்
தொலைந்துபோன வாழ்வையும், விவசாய
நிலங்கள் கிரானைட் கழிவுகளால்
மலடாகி போன விவரங்களையும்,
நிலத்தடி நீர் இல்லாமல் போன
காரணத்தையும், பென்னி குயிக்
அமைத்து கொடுத்த
நீர்வரத்து கால்வாய்கள், அவைகள்
சேதாரப்படுத்தி நொறுக்கப்பட்ட
கால்வாய்கள் என ஏராளமான
விவரங்களுடன் கிரானைட்
மாஃபியாக்களுக்கு எதிராக பட்டியல் தயார்
செய்யப்பட்டிருப்பதாக வருவாய்த்
துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காலில்விழுந்து விவசாயி கதறல்...சகாயத்திடம்புகார் செய்ததால் துப்பாக்கி முனையில்போலீஸ் மிரட்டல்பதிவு செய்தநேரம்:2015-01-10...
14/01/2015

காலில்
விழுந்து விவசாயி கதறல்...சகாயத்திடம்
புகார் செய்ததால் துப்பாக்கி முனையில்
போலீஸ் மிரட்டல்பதிவு செய்த
நேரம்:2015-01-10 01:01:16மதுரை:
குவாரி முறைகேடு தொடர்பான
உண்மைகளைக் கூறியதால்
என்னை அடித்து, துப்பாக்கியால் மிரட்டி,
என் தம்பி மகன் மீதுபொய் வழக்குப்
போட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்,
எஸ்ஐயிடமிருந்து
குடும்பத்தை காப்பாற்றுங்கள்‘ எனக்
கூறி ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தின் காலில்
விழுந்து விவசாயி கதறி அழுததால்
பரபரப்பு ஏற்பட்டது. கிரானைட்
முறைகேடு தொடர்பாக நான்காம் கட்ட
விசாரணையை நேற்றுமுன்தினம்
துவக்கிய ஐஏஎஸ் அதிகாரி சகாயம்,
மேலூர் பகுதியில்
நேற்று ஆய்வு செய்தார். எரிச்சியூரில்
மணியன் கண்மாயையும்,
கண்மாய்க்கு வரும் வரத்துக்
கால்வாயையும் தனியார்
குவாரி நிறுவனத்தினர் முற்றிலும் அழித்
திருப்பது கண்டு சகாயம் அதிர்ச்சியடைந்த
ார். இதன் விபரங்களைக் கேட்டறிந்தார்.அ
ப்போது இப்பகுதியில் உள்ள
வாச்சம்பட்டியைச் சேர்ந்த அய்யங்காளை,
Ôஇதுகுறித்து நாங்கள் பல புகார்கள்
கொடுத்தும், எந்த அதிகாரியும்
நடவடிக்கை எடுக்கவில்லைÕ
என்று சகாயத்திடம் தெரிவித்தார். மேலும்,
Ô‘கடந்த 30ம் தேதி நீங்கள் இப்பகுதியில்
ஆய்வு செய்தபோது பிஆர்பி நிறுவனத்தினரின்
ஆக்கிரமிப்பு குறித்து ஆதாரத்துடன்
தெரிவித்தேன். அன்று மாலை மேலூர்
போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன்,
எஸ்ஐ அய்யனார் ஆகியோர் என்னிடம்
பிஆர்பி பற்றி புகார் கூறக்கூடாது.
மீறினால் உன் மொத்த குடும்பத்தையும்
அழிப்போம் என்று மிரட்டினர்.மறுநாள்
அதிகாலை 4 மணிக்கு போலீசார் என்
வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து,
எனது தம்பி மகன்
கருப்பணனை இ.மலம்பட்டியில் உள்ள
பிஆர்பி கிரானைட்
நிறுவனத்திற்கு கொண்டு சென்று,
காலைக் கட்டி தலைகீழாக தொங்க
விட்டு அடித்தனர்.
அங்கு சென்று கெஞ்சிய என்னை நோக்கி,
இன்ஸ்பெக்டர் தனது துப்பாக்கி காட்டி,
சுட்டு விடுவேன்
என்று மிரட்டி விரட்டினார். போலீஸ்
அடித்து காயப்படுத்திய என் தம்பி மகன்
மீது, ஆடு திருடியதாக போலீஸ் பொய்
வழக்குப் போட்டது. சம்பந்தப்பட்ட
போலீசார் மீது எஸ்பியிடம் புகார் தெரிவித்
தும், நடவடிக்கை இல்லை.கிரானைட்
தொடர்பாக நான் பொய் சொல்லி இருந்தால்
என்னை தூக்கில் போடுங்கள்
இல்லாவிட்டால், என்னையும், என்
குடும்பத்தையும் காப்பாற்றுங்கள்,‘‘
என்று கூறியபடியே, திடீரென சகாயத்தின்
கால்களை கட்டிப் பிடித்துக்
கொண்டு அய்யங்காளை கதறி அழுதது பரபரப்பை ஏற்படுத்தியது.
Ôஎன்னிடம் பெட்டிசன் கொடுத்ததற்காக
இதுபோன்ற நடவடிக்கைகளில் இறங்கிய
போலீசார்
மீது உடனே நடவடிக்கை எடுங்கள்Õ
என்று ஆர்டிஓவிடம் சகாயம் கூறினார்.
இச்சம்பவத்தால் ஆய்வுக்குச்சென்ற
அதிகாரிகள் மட்டுமல்லாது பொதுமக்கள்,
பத்திரிகையாளர்கள்
அனைவருமே அதிர்ச்சியடைந்த
னர்.அப்பகுதி பிள்ளையார்
கண்மாயை குவாரிதாரர்கள்
ஆக்கிரமித்து அழித்ததாக முத்துச்சாமி,
கருப்பணன் போன்ற விவசாயிகள் புகார்
தெரிவித்தனர். இங்குள்ள மணிமுத்தாறும்
ஆக்கிரமிப்பில் சிக்கி இருந்தது. 150
அடி அகலம் உள்ள இந்த ஆற்றின்
நடுவே கிரானைட்
கழிவு கற்களை கொட்டி பெரிய
கரை ஏற்படுத்தி, அதன் மூலம்
பாதி ஆற்றை ஆக்கிரமிப்பு செய்து கிரானைட்
கற்கள் வெட்டி இருப்பதை சகாயம்
கண்டுபிடித்தார்.இந்த
ஆறு எங்கிருந்து வருகிறது அதன்
போக்கு தெரியுமா என அதிகாரிகளிடம்
கேட்டபோது சரியாக சொல்ல
முடியவில்லை. அப்போதுஅப்பகுதி மக்கள்
இது, திண்டுக்கல் மாவட்டம்
கரந்தமலையில் துவங்கி மதுரை,
சிவகங்கை, கல்லல், தேவகோட்டை,
ராமநாதபுரம்
கண்மாயை சென்று அடைவதாக கூறினர்.
இந்த ஆற்றை அழித்தவர்கள்
மீது வருவாய்த்துறையினர் ஏன்
நடவடிக்கை எடுக்கவில்லை என்று சகாயம்
கடிந்து கொண்டார். மேலும்
கொணப்பகோன் கண்மாய், இடையன்
கண்மாய் ஆக்கிரமிப்புகளையும் சகாயம்
பார்த்தார். மணிமுத்தாற்றின் கரையில்
இருந்த சுடுகாட்டின் ஒரு பகுதியையும்
குவாரிதாரர்கள் ஆக்கிரமித்ததைக்
கண்டு வேதனையடைந்தார்.புகார்
செய்யாதது ஏன்? அதிகாரிகளிடம்
கிடுக்கிப்பிடி;இப்பகுதியில் கண்மாய்
மற்றும் கால்வாய்
போன்றவற்றை அழித்தது தொடர்பாக ஊர்த்
தலையாரி, விஏஓ, புகார்
கொடுத்துள்ளனரா?அல்லது வருவாய்
ஆய்வாளர், துணை தாசில்தார்
ஆகியோரிடம் புகார் மனுக்கள் கொடுத்து,
ஆர்டிஓவிற்கு பரிந்துரை செய்து, அவர்
மூலமாக கலெக்டர்
பார்வைக்கு விசாரணைக்கு இந்த மீறல்கள்
கொண்டு செல்லப்பட்டுள்ளதா? என
ஆர்டிஓ செந்தில்குமாரியிடம் சகாயம்
கேட்டார். கடந்த 2012 வரை எந்த புகாரும்
வரவில்லை. அதன்பிறகே புகார்கள்
வந்தன என்று ஆர்டிஓ தெரிவித்தார்.
பிறகு தலையாரி காந்தியை அழைத்து உங்கள்
ஊரில் இந்த
அளவிற்கு முறைகேடு நடந்து முழு கண்மாய்,
கால்வாய் அழிக்கப்பட்டிரு
ப்பது குறித்து அதிகாரிகளுக்கு ஏன்
தகவல் தெரிவிக்கவில்லை
என்று கண்டித்தார். இதற்கு பதில் சொல்ல
முடியாமல் தலையாரி திணறினார்.பொதுப
்பணித்துறை அதிகாரிகளிடம், உங்கள்
துறைக்கு புகார்கள் வந்ததா? ஏன் எந்த
தடுப்பு நடவடிக்கைகளும்
எடுக்கவில்லை? எனக் கேட்டார். அவர்கள்,
2007ல் ஒரு புகார் வந்தது, ஆனால் அதன்
மீது நடவடிக்கை எடுக்கமுடியவில்
லை என்றனர். குற்றம் செய்ய
பொதுப்பணித்துறையும்,
வருவாய்த்துறையுமே மூல காரணம் என
சகாயம் குற்றம் சாட்டினார்.போலீ
சுக்கு பயந்து புகார்
தரவில்லை:இவ்வளவு பெரிய
முறைகேடுகள் நடந்தும் ஏன் கடந்த
காலங்களில் யாரும் புகார்
தெரிவிக்கவில்லை என மக்களிடம் சகாயம்
கேட்டார். அப்போது விவசாயி முருகன்,
‘இந்த பகுதியில்
குவாரி அமைத்து வெடி போட்டதில்
எங்கள் வீடு விழுந்து நொறுங்கியது.
இதுகுறித்து புகார் தெரிவித்த, எங்கள்
மீதே போலீசார் வழக்குப் போட்டனர்.
இதனால்தான் போலீசுக்கு பயந்து யாரும்
புகார்கள் கொடுக்கவில்லைÕ என்றார்.
இதே கருத்தை அங்கிருந்த பலரும்
தெரிவித்தனர்.ஆய்வில் வருவாய்த்துறையி
னர் 1986க்கு முன்புள்ள
வரைபடத்தை காட்டினர்.
அப்போது கண்மாய் கரையை அவர்களால்
சரியாக காட்டத் தெரியவில்லை. அடுத்த
முறை சம்பந்தப்பட்ட
கண்மாய்களை கலரில் வரைந்து வட்டம்
செய்து காட்ட வேண்டும். எந்த
கண்மாய்க்கு செல்கிறோமோ அங்கு கரை தெரியும்படி கொடியுடன்
கண்மாய் எல்லையில் நிற்கவேண்டும்.
ஆர்டிஒ இதற்கு நடவடிக்கை எடுக்க
வேண்டும் என சகாயம் உத்தரவிட்டார்.

Address

Trichy Main Road
Mallur
636203

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thiru. U. Sagayam IAS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share