02/09/2026
அன்புள்ள RTOக்கள் மற்றும் MVIக்கள் கவனத்திற்கு, STA வழங்கியுள்ள பின்வரும் அறிவுறுத்தல்களை கவனத்தில் கொள்ளவும்:
1. நாளை முதல், Smart Card மற்றும் Postal கட்டணம் வசூலிக்கப்படாது. மேலும், விண்ணப்பதாரர்களின் தகவல்கள் Smart Card Vendor-க்கு அனுப்பப்படாது. எனவே, நாளை முதல் வரும் விண்ணப்பதாரர்களுக்கு Digital Printout மட்டும் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தலாம்.
2. ஏற்கனவே செலுத்தப்பட்ட Smart Card மற்றும் Postal கட்டணத்தை, விண்ணப்பதாரர் கோரிக்கை விடுத்தால் TNMVR 422 விதிமுறையின்படி திருப்பி வழங்கலாம்.
3. 15.09.2026 முதல் பணிகள் தடையின்றி நடைபெறுவதற்காக, DL Superintendent மற்றும் அதிகபட்ச எண்ணிக்கையிலான பணியாளர்களுக்கு Photo எடுப்பது மற்றும் Digital Signature பெறுவது தொடர்பான பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
4. Bonton பணியாளர்கள், நிலுவையில் உள்ள அனைத்து RC மற்றும் DL-களையும் இன்றே Download செய்து முடிக்க வேண்டும். நாளை முதல் ஏற்கனவே Download செய்யப்பட்ட RC மற்றும் DL-களின் Printing பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு, 12.09.2026-க்கு முன்பாக Activate செய்யப்பட வேண்டும்.
5. ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால், YUVARAJ, DTC-II அவர்களிடம் கேட்டு தெளிவு பெறலாம்.