Mayiladuthurai District PMK

Mayiladuthurai District PMK Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mayiladuthurai District PMK, Political Party, Mayiladuthurai.

🛑மிக முக்கிய அறிவிப்பு...!10.5 சதவீத இடஒதுக்கீடு கேட்டு வன்னியர் சங்க போராட்டம் நடத்த தீர்மானித்து உள்ளது..!தேதி விரைவில...
13/05/2024

🛑மிக முக்கிய அறிவிப்பு...!

10.5 சதவீத இடஒதுக்கீடு கேட்டு வன்னியர் சங்க போராட்டம் நடத்த தீர்மானித்து உள்ளது..!

தேதி விரைவில் அறிவிக்கப்படும்..!

மக்கள் காவலர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிவிப்பு..!

தற்போது தைலாபுரம் தோட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் மக்கள் காவலர் மருத்துவர் அய்யா அவர்கள்..!!

பா.ம.க. தலைமை நிலைய அறிவிப்புபா.ம.க. இளைஞர் அணி, மாணவர் அணிசமூக ஊடகப் பேரவை கலந்தாய்வு கூட்டம்:மருத்துவர் அய்யா அவர்கள் ...
20/04/2024

பா.ம.க. தலைமை நிலைய அறிவிப்பு
பா.ம.க. இளைஞர் அணி, மாணவர் அணி
சமூக ஊடகப் பேரவை கலந்தாய்வு கூட்டம்:
மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையில் நடைபெறும்

தமிழ்நாடு மற்றும் புதுவையில் மக்களவைத் தேர்தல்கள் நடைபெற்று முடிவடைந்த நிலையில், கட்சி வளர்ச்சிக்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சியின் துணை அமைப்பு நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டங்களை நடத்த பா.ம.க. தலைமை முடிவு செய்திருக்கிறது. பா.ம.க. இளைஞர் அணி, மாணவர் அணி, பாட்டாளி சமூக ஊடகப் பேரவை ஆகிய அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டம் கீழ்க்கண்ட அட்டவணைப்படி விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறும். அனைத்துக் கூட்டங்களுக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் தலைமை ஏற்பார்.

02.05.2024 வியாழக்கிழமை காலை 11.00 மணி பா.ம.க. இளைஞரணி

03.05.2024 வெள்ளிக்கிழமை காலை 11.00 மணி பா.ம.க. மாணவரணி

04.05.2024 சனிக்கிழமை காலை 11.00 மணி பாட்டாளி சமூக ஊடகப் பேரவை

மேற்கண்ட கூட்டங்களில் தொடர்புடைய அமைப்புகளின் மாநில, மாவட்ட, தொகுதி அளவிலான நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இப்படிக்கு,
தலைமை நிலையம்,
பாட்டாளி மக்கள் கட்சி

மிக குறுகிய காலத்தில் சமூக ஊடகத்தில் சிறப்பான பணியாற்றி மயிலாடுதுறை வெற்றி வேட்பாளர் அண்ணன் ம.க.ஸ்டாலின் அவர்களுக்கு பெர...
20/04/2024

மிக குறுகிய காலத்தில் சமூக ஊடகத்தில் சிறப்பான பணியாற்றி மயிலாடுதுறை வெற்றி வேட்பாளர் அண்ணன் ம.க.ஸ்டாலின் அவர்களுக்கு பெருவாரியான வாக்குகளை பெற்றுத்தந்த பாட்டாளி சமூக ஊடக பேரவை பொறுப்பாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.

நம்மில் அனைவருமே தத்தம் வேலை, தொழில், கல்வி, குடும்பம் என்று நிறைய வேலைபலுவுக்கு இடையில் தான் பரப்புரை செய்தோம் என்றாலும் உங்கள் பணி தலைமை வரை கவனிக்கும்படியாக சிறப்பாக அமைந்தது.⁣

அயலகத்தில் இருந்தும் ஓய்வின்றி உழைத்த நண்பர்களுக்கு சிறப்பு பாராட்டுகள்!⁣

படங்கள், வீடியோக்கள், பதிவுகள் தயாரித்து வெளியிட்ட படைப்பாளிகளுக்கும் நன்றிகள்!⁣

களத்தில் வரும் செய்திகள் ம.க.ஸ்டாலின் அண்ணன் மாபெரும் வெற்றி பெறுவார் என்பதை உறுதி செய்கிறது. ⁣

ஆனால் நாம் இத்துடன் ஓய்ந்து விடாமல், அன்புமணி அண்ணன் சொன்னது போல 2026ல் பாமகவுக்கு ஒரு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது என்பதை உணர்ந்து,⁣

சட்டமன்ற தேர்தலை நோக்கி இங்கிருந்து தொடர் பரப்புரையை விடாமல் எடுத்து செல்ல வேண்டும்.⁣

ஊடக பேரவையை ⁣
1. அமைப்பு ரீதியாக வலுவாக்குதல்*
2. உள்ளடக்கங்கள் தயாரிப்பு பயிற்சிகள்
3. பரவலாக்கல் முறைகள்
4. பேச்சாளர் பயிற்சி
5. சமூக ஊடகத்துக்கான உட்கட்டமைப்பு வசதிகள்
6. சிறப்பான பணி செய்தவர்களை அங்கீகரித்தல்

போன்ற பணிகளை அதிகமாக்கி ⁣

கட்சியின் தலைவர் அவர்கள் சொன்னதை போல, 2026 சட்டமன்ற தேர்தல் பாமக தலைமையிலான கூட்டணி ஆட்சியை அமைக்கும் வரலாற்று சிறப்புமிக்க தேர்தலாக இருக்கும்.

அதில் சமூக ஊடகம் தான் மிகப்பெரிய பங்காற்றப்போகிறது.

எனவே 2024க்கு பாடுபட்ட அனைத்து பாட்டாளி சமூக ஊடக பொறுப்பாளர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து,⁣

2026ஐ நோக்கி அதே வேகத்தோடு தொடர தாழ்மையான வேண்டுகோளையும் முன்வைக்கிறேன்.⁣

நன்றி 🙏⁣

தமிழ்நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தவாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி!தமிழ்நாட்டில் 18&ஆம் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ...
19/04/2024

தமிழ்நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த
வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி!

தமிழ்நாட்டில் 18&ஆம் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7.00 மணிக்கு தொடங்கி மாலை 6.00 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது. அனைத்து தொகுதிகளிலும் மக்கள் கடும் வெயிலையும் கடந்து ஆர்வத்துடன் வந்து ஜனநாயகக் கடமையாற்றி சென்றுள்ளனர்.

தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் சராசரியாக 70 விழுக்காட்டுக்கும் கூடுதலான வாக்குகள் பதிவாகியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாக்குப்பதிவின் அளவு, வாக்காளர்களின் உடல் மொழி, பொதுவான மக்களின் மனநிலை ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது தமிழ்நாடு மற்றும் புதுவையில் கடந்த தேர்தலில் கிடைத்த முடிவுகளை மாற்ற வேண்டும்; மத்தியில் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான ஆட்சி தொடர வேண்டும் எண்ணத்தில் பெருமளவிலான மக்கள் பா.ம.க. இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களித்திருப்பதாக உணர முடிகிறது.

தமிழ்நாட்டில் மக்களவை பிரதிநிதித்துவத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களித்த தமிழக மக்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர்களுக்காக மிகச் சிறந்த முறையில் களப்பணியாற்றிய அனைத்துக் கூட்டணிக் கட்சிகளுக்கும், ஆதரவு தந்த அமைப்புகளுக்கும் பா.ம.க. சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

19/04/2024
 #மயிலாடுதுறைமாவட்டம்
18/04/2024

#மயிலாடுதுறைமாவட்டம்

 #மக்களுடன்_மகஸ்டாலின்  #நமது_வேட்பாளர்_ம_க_ஸ்டலின்  #வாக்களிப்பீர்_மாம்பழம்  #தேசிய_ஜனநாயக_கூட்டணி  #பாட்டாளிமக்கள்கட்ச...
17/04/2024

#மக்களுடன்_மகஸ்டாலின்
#நமது_வேட்பாளர்_ம_க_ஸ்டலின்
#வாக்களிப்பீர்_மாம்பழம்
#தேசிய_ஜனநாயக_கூட்டணி
#பாட்டாளிமக்கள்கட்சி
#மயிலாடுதுறை



Address

Mayiladuthurai

Alerts

Be the first to know and let us send you an email when Mayiladuthurai District PMK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share