31/07/2026
மயிலாடுதுறை மணக்குடி புதிய பேருந்து நிலையம் – மக்களின் குழப்பத்திற்கும் கவலைக்கும் தீர்வு எங்கே?
மயிலாடுதுறை நகரின் இதயப் பகுதியில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பழைய பேருந்து நிலையம் தற்காலிகமாக நகர பூங்கா பேருந்து நிலையம் இட நெருக்கடி மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக மணக்குடி புதிய பேருந்து நிலையம் அமைந்திருப்பது வரவேற்கத்தக்க முயற்சியே...
ஆனால், பூம்புகார் சாலை மணக்குடியில்பகுதியில் தோராயமாக சுமார் 35 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வந்து, பழைய பேருந்து நிலையத்தை கடந்து அனைத்து பேருந்துகளையும் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! !!
இதில்தான் மக்களின் கேள்விகளும், கவலைகளும் ஆரம்பமாகின்றன.
பழைய பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மார்க்கெட், நூற்றுக்கணக்கான வணிக நிறுவனங்கள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் என மக்கள் அன்றாடம் சென்று வரும் முக்கிய மையமாக உள்ளது!!!
இந்நிலையில், குத்தாலம் கும்பகோணம் திருவாரூர் ஆக்கூர் பொறையார் நாகப்பட்டினம் சீர்காழி சிதம்பரம் மணல்மேடுஉள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் மக்கள் எங்கு இறங்க வேண்டும்
நகருக்குள் செல்லும் பேருந்துகள் எந்த வழித்தடத்தில் இயக்கப்படும்?
கடைத்தெருவிற்கு வருபவர்கள் எப்படி செல்வார்கள்?
முதியவர்கள், மாணவர்கள், பெண்கள், நோயாளிகள் ஆகியோருக்கான மாற்று ஏற்பாடுகள் என்ன?
பழைய பேருந்து நிலையத்தை சுற்றியே நகரின் வணிகம் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை உள்ளது அது பாதிக்கப்படாதவாறு :
இவற்றுக்கான தெளிவான விளக்கங்களும், போக்குவரத்து திட்டங்களும் இதுவரை பொதுமக்களிடம் முழுமையாக கொண்டு செல்லப்படவில்லை என்ற எண்ணம் பலரிடமும் உள்ளது.
புதிய பேருந்து நிலையம் வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பு இல்லை. நகரின் வளர்ச்சிக்கு பேருந்து நிலையம் மிக மிக அவசியம் , அதனை நடைமுறைப்படுத்தும் விதம் மக்களுக்கு சிரமமின்றி, திட்டமிட்டு இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு !!
எனவே, மாவட்ட நிர்வாகம், நகராட்சி மற்றும் போக்குவரத்துத் துறை இணைந்து:
✅ முழுமையான பேருந்து வழித்தட வரைபடத்தை வெளியிட வேண்டும்.
✅ மக்கள் எங்கு ஏறுவது, எங்கு இறங்குவது என்பதைக் தெளிவுபடுத்த வேண்டும்.
✅ வணிகர்கள், பொதுமக்கள் மற்றும் அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்டு, தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
✅ பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்கள் ஒருங்கிணைந்த முறையில் செயல்படும் திட்டத்தை பரிசீலிக்க வேண்டும்.
மக்களின் நலனே முதன்மை. வளர்ச்சி என்பது கட்டிடங்களை மட்டும் உருவாக்குவது அல்ல; மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதே உண்மையான வளர்ச்சி. நகரில் சாலை மையப்பகுதியில் சென்டர் மீடியன் அமைத்து இரு சக்கர மற்றும் நான்கு சக்கர
வாகனங்கள் எளிதில் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும்! !!
இந்தப் பதிவு யாரையும் குறை கூறுவதற்காக அல்ல.
மயிலாடுதுறை மாவட்ட மக்களின் நலனையும், எதிர்கால வசதியையும் கருத்தில் கொண்டு உரிய திட்டமிடலுடன் இந்த மாற்றம் அமல்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக மட்டுமே.
மயிலாடுதுறை மக்களின் கருத்து என நினைக்கிறேன் உங்கள் கருத்துகளை பகிருங்கள்