02/09/2026
எழுச்சியுடனும் உற்சாகத்துடனும் நடைபெற்ற SDPI மகளிரணி இராமநாதபுரம் மேற்கு மாவட்ட பொதுக்குழு!
*********************************
SDPI கட்சி மகளிரணி (WIM) இராமநாதபுரம் மேற்கு மாவட்டத்தின் மாவட்ட பொதுக்குழு (District Representative Council – 2026) கமுதி சேகநாதபுரத்தில் சிறப்பாக நடைபெற்றது.
மாவட்ட துணைத்தலைவர் ஜரீனா பானு வரவேற்புரையாற்றினார். மாவட்ட தலைவர் A. கன்சுல் மஹரிபா ஆலிமா சித்தீகிய்யா தலைமையுரை நிகழ்த்தினார். தொடர்ந்து மாநில நிர்வாகிகள் கௌரவிக்கப்பட்டனர்.
மாவட்ட பொதுச் செயலாளர் சம்சு பேகம் கடந்த கால செயல்பாடுகள் குறித்த ஆண்டறிக்கையை பொதுக்குழுவில் சமர்ப்பித்தார். தொடர்ந்து ஆண்டறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து புதிய மாவட்ட நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர்.
புதிய நிர்வாகிகள்:
**********************
1.A.கன்சுல் மஹரிபா - மாவட்ட தலைவர்
2.N.சம்சு பேகம் - மாவட்ட பொதுச் செயலாளர்
3.M.ஜரீனா பேகம் - மாவட்ட துணைத் தலைவர்
4.A..ராவியா பீவி- மாவட்ட பொருளாளர்
5.ஆமினா பெனாசிர்- மாவட்ட செயலாளர்
6.S.ரஸியா பேகம்- மாவட்ட செயற்குழு உறுப்பினர்
7.A.சபுரா கனி- மாவட்ட செயற்குழு உறுப்பினர்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற SDPI கட்சி மகளிரணி மாநில செயற்குழு உறுப்பினர் உம்முல் தவ்லத்தியா சிறப்புரையாற்றி, மகளிரணியின் அமைப்பு வளர்ச்சி, பெண்களின் அரசியல் மற்றும் சமூகப் பங்கேற்பு, உரிமைகள் மற்றும் சமூகப் பிரச்சினைகளில் பெண்களின் களப்பணி ஆகியவை குறித்து எடுத்துரைத்தார்.
SDPI கட்சி இராமநாதபுரம் மேற்கு மாவட்ட தலைவர் J. நூருல் அமீன் B.E., சிறப்புரையாற்றி, புதிதாகப் பொறுப்பேற்ற மகளிரணி நிர்வாகிகளை வாழ்த்தியதுடன், “பதவி என்பது பெருமைக்கானது அல்ல; மக்களுக்குப் பணியாற்றுவதற்கான பொறுப்பு. பெண்களின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவர்களின் உரிமைகளுக்காகக் களத்தில் நிற்கக்கூடிய வலிமையான அமைப்பாக மகளிரணி வளர வேண்டும்” என வலியுறுத்தினார்.
SDPI கட்சி இராமநாதபுரம் மேற்கு மாவட்ட பொதுச்செயலாளர் J.பாஞ்சுபீர் மற்றும் கல்வியாளர் அணி மாவட்ட தலைவர் N.அண்ணல் முஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிறைவாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட தலைவர் A.கன்சுல் மஹரிபா ஏற்புரையாற்றினார்.
பொதுக்குழுவில் இராமநாதபுரம் மாவட்ட மக்களின், குறிப்பாக பெண்களின் வாழ்வாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு சார்ந்த பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
👉கிராமப்புற பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு சிறுதொழில் பயிற்சி, மானியக் கடனுதவி மற்றும் சந்தை வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும்;
👉பெண்கள் மற்றும் மாணவிகளின் வசதிக்காக கிராமப்புறங்களில் கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும்;
👉கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்;
👉பொது இடங்களில் பெண்களுக்கான சுகாதாரமான கழிப்பறை வசதிகளை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
👉மேலும், கடலோரப் பகுதிகளில் மீனவப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல்,
👉விதவைகள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கான அரசு உதவிகளை எளிமைப்படுத்துதல்,
பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வை அதிகரித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளும் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.
👉இராமநாதபுரம் மாவட்டத்தில் பரவி வரும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத்துறையும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுக்குழு வலியுறுத்தியது.
அதேபோன்று
👉கிராமப்புற ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களை கடன் சுழலில் சிக்க வைத்து சீரழிக்கும் சட்டவிரோத கந்துவட்டியை ஒழிக்க வேண்டும்; கந்துவட்டியில் ஈடுபடுவோரைக் கண்டறிந்து கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்வதுடன், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அச்சமின்றி புகார் அளிப்பதற்கான வசதியை ஏற்படுத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதிய மாவட்ட பொதுச் செயலாளர் N.சம்சு பேகம் நன்றியுரையாற்றினார். மாவட்ட பொருளாளர் A.ராவியா பீவி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மகளிரணி நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தகவல் தொழில்நுட்ப அணி
SDPI. கட்சி
இராமநாதபுரம் மேற்கு மாவட்டம்