16/08/2026
காவிரி…
தலைமுறைகளாக நமது தாகத்தை தீர்த்து, வயல்களை வளப்படுத்தி, எண்ணற்ற உயிர்களுக்கு வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.
இன்று அந்த காவிரியின் கரைகள் மனிதர்களின் அலட்சியத்தால் மாசடைந்து கிடக்கின்றன.
இந்த நிலையை மாற்றும் சிறிய முயற்சியாக, பரமத்தி வேலூரில் “அன்னை காவிரி – தூய்மைத் திட்டம்” தொடங்கப்பட்டுள்ளது.
இது ஒரு தூய்மைப் பணி மட்டுமல்ல; நமக்கு வாழ்வு தந்து வரும் காவிரிக்குச் செலுத்தும் நன்றியின் வெளிப்பாடு.
காவிரி கரையோரத்தில் வாழும் ஒவ்வொருவரும், ஒவ்வொரு அமைப்பும், ஒவ்வொரு தலைவரும் இந்த இயக்கத்தில் இணைந்து தங்கள் பகுதி காவிரியை பாதுகாக்க முன்வர வேண்டும்.
காவிரி நம் பொறுப்பு. காவிரியை பாதுகாப்பது நம் கடமை.
K.Annamalai We The Leaders Foundation We The Leaders Ramanathapuram