Pannal

Pannal பூலோக சொர்க்கம் பன்னாள்

அன்பு உறவுகளுக்கு பன்னாள் மேற்கில் அருள்பாலித்து வரும்  அருள்மிகு அடைக்கலம் காத்த ஐயனார் அருள்மிகு அண்ணன் செவந்தான் அருள...
15/11/2023

அன்பு உறவுகளுக்கு பன்னாள் மேற்கில் அருள்பாலித்து வரும் அருள்மிகு அடைக்கலம் காத்த ஐயனார் அருள்மிகு அண்ணன் செவந்தான் அருள்மிகு பிடாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களின் ஆலய குடமுழுக்கு விழா நாளை காலை 9 மணி முதல் 10.30 க்குள் சிறப்பாக நடைபெற உள்ளது அதுசமயம் பக்தர்கள் வருகை தந்து இறைவனின் அருள்பெற்று செல்லுமாறு அன்புடன் அழைக்கின்றோம்

02/12/2020

பன்னாள் கிராமத்தில் சரியான பருவமழை இன்றுதான்(02/12/2020) துவங்கியுள்ளது காலை 11 மணி நிலவரப்படி 30மிமீ அளவு மழை பதிவாகியுள்ளது
வெப்பநிலை குறைந்த பட்சம் 24.8 அதிகபட்சம் 27.0 ஆகவும்
ஈரப்பதம் 85% ஆகவும் பதிவாகியுள்ளது

18/04/2019

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில்(18/04/2019) நமது #பன்னாள் கிராமத்தில் 78% சதவிகித (2035/1634) வாக்கு பதிவாகியுள்ளது

மாநில சராசரியை இது விட அதிகம்

ஆர்வத்துடன் ஜனநாயக கடமையாற்றியவர்களுக்கு வாழ்த்துக்கள்.

 #பன்னாள்_ஆலமரம்_திருட்டுசமீபத்திய தகவல்களின் படி பன்னாள் மழை மாரியம்மன் கோவிலின் தலைமை நிர்வாகி மற்ற 17 கரைகளின் நிர்வா...
30/07/2018

#பன்னாள்_ஆலமரம்_திருட்டு

சமீபத்திய தகவல்களின் படி பன்னாள் மழை மாரியம்மன் கோவிலின் தலைமை நிர்வாகி மற்ற 17 கரைகளின் நிர்வாகிகளிடம் கூட கலந்து ஆலோசிக்காமல் தன் கை செலவிற்கு நண்பரின் செங்கல் சூலையின் விறகு தட்டுப்பாட்டிற்காக 100 ஆண்டு பழமையான கோவில் ஆலமரத்தை ஊரில் யாருக்கும் தெரியாமல் வெட்டி விற்று விட்டதாக கூறப்படுகின்றது

பன்னாள் மழைமாரியம்மன் ஆலயத்தில் வடக்கு புறம் இருந்த பழமைவாய்ந்த ஆலமரம் நிர்வாகிகள் தங்கள் அறிவற்ற மூடத்தனத்தினால் வெட்டி...
29/07/2018

பன்னாள் மழைமாரியம்மன் ஆலயத்தில் வடக்கு புறம் இருந்த பழமைவாய்ந்த ஆலமரம் நிர்வாகிகள் தங்கள் அறிவற்ற மூடத்தனத்தினால் வெட்டி சாய்த்துள்ளனர் இது மிகவும் அதிர்சியாக உள்ளது கண்டிக்கதக்கது இந்த மோசமான முடிவை எடுக்கும் முன்னர் பன்னாள் மக்கள் அனைவரிடமும் கலந்து பேசியிருக்க வேண்டும் இந்த அறிவற்ற செயலை செயல்படுத்தியவர்களிடம் சில கேள்விகள்

1. இதே போன்றதொரு மரத்தை மீண்டும் எளிதில் உருவாக்க முடியுமா ஒருமரம் இத்தகைய வளர்ந்த நிலையை அடைய எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று தெரியுமா

2. இதை வெட்டும் முடிவை எடுத்தது யார்.

3. என்ன காரணத்திற்காக இம்மரம் வெட்டப்பட்டது

4. இம்மரத்தினால் கோவில் பாதிக்கப்படும் சூழல் இருந்திருந்தால் அதை தடுக்க மரத்தை வெட்டாமல் தீர்வு கிடையாதா அல்லது தெரியாதா

5. தெரியவில்லை என்றால் ஊர் மக்களிடம் ஏன் கருத்து கேட்கவில்லை

09/06/2018

வேதாரண்யம் வட்டம் #பன்னாள் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் #அருள்மிகு_கபிலவன_நாதர்_காரணவள்ளி_ஆலயம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கான குடமுழக்கு விழா 60 ஆண்டுகளுக்கு பின்னர் வரும் ஆனி 3ம்நாள் (சூன் 17 ம் தேதி 2018) காலை 10.30 மணியளவில் விமரிசையாக நடைபெற உள்ளது அதுசமயம் பக்தர்கள் தமிழர் மெய்யிலை மீட்க வருகை தந்து ஆதிசிவன் அருளை பெற்று சொல்லுமாறு அன்போடு கேட்டு கொள்கிறோம்

#பன்னாள்_கிராமவாசிகள்

ஆலயத்தின் நிர்வாக குழு கௌவத் தலைவர்கள்
ப.சுப்பிரமணியத்தேவர் , சு.சீனிவாசத்தேவர் ,
இரா.குமணன் ,
தலைவர் VK சுரேஷ்
செயலாளர் VGசேகர் ,
பொருளாளர் P,சித்திரவேல்
துணை தலைவர் K,செல்வகுமார்
துணை செயலர்J,சக்திவேல்
மற்றும் V,கோவிந்தரஜ் ,S,மூர்த்தி

பன்னாளின் காவேரியான  #பெரிய_பெலத்தில் கொஞ்சம் தண்ணீர் வந்திட்டாலே போதும் இளசுகளுக்கு கொண்டாட்டம் துவங்கிவிடும்இந்தா கிளம...
07/11/2017

பன்னாளின் காவேரியான #பெரிய_பெலத்தில் கொஞ்சம் தண்ணீர் வந்திட்டாலே போதும் இளசுகளுக்கு கொண்டாட்டம் துவங்கிவிடும்

இந்தா கிளம்பிட்டாங்க மீன் பிடிக்க

#பன்னாள்
#பன்னாள்_மழைக்கால_நினைவுகள்

06/11/2017
01/08/2017

அன்பான பன்னாள் கிராமவாசிகளுக்கு தமிழர் வழிபாட்டு முறையின் முக்கிய வழிபாடான ஆடித்திருவிழாக்கள் நமது பகுதியில் துவங்கிவிட்டது இதன் தொடர்ச்சியாக பன்னாள் அருள்மிகு மழைமாரியம்மன் ஆலய ஆடித்திருவிழாவிற்க்கு காப்புகட்டிதல் துவங்கி 18 கரைகளின் மண்டகப்படி நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது நமது கிராமவாசிகள் அனைவரும் தமது பங்களிப்பை செலுத்தி திருவிழாவை சிறப்பித்து உறவுகளையும் நட்புகளையும் புதுப்பித்து தமிழர் வழிபாட்டு முறைகளை மேன்மேலும் சிறந்ததாகக் மாற்றுவோம்

14/01/2017

அன்பான பன்னாள் கிராமவாசிகளுக்கும் உலகத்தமிழர்களுக்கும் இனிய தித்திக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள் இந்நாளில் உங்கள் குடும்பங்களில் மகிழ்ச்சி பொங்கட்டும் துன்பங்கள் எரியட்டும்

நல்வாழ்த்துகள்

06/08/2016

பன்னாள் கிராமம் அருள்மிகு மழை மாரியம்மன் ஆலய ஆடிதிருவிழா வரும் செவ்வாய் கிழமை (09/08/2016) அன்று சிறப்பாக நடைபெற உள்ளது இதனையொட்டி அன்று மாலை 5மணியளவில் அம்மனின் மஞ்சள் விளையாட்டு நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்

Address

Vedaraniyam
Nagapatinam
614707

Telephone

+916383758756

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pannal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Pannal:

Share