சமூதாய சேவகன்

சமூதாய சேவகன் அனைத்து சமுதாய மக்களுக்கும் 24மணி நேரமும் இரத்த தானம் மற்றும் அவசர ஊர்தி சேவை செய்யும் அமைப்பு தமுமுக

21/03/2026
 #எல்லா_புகழும்_இறைவனுக்கேநாகப்பட்டினம் மாவட்டம் தமுமுக ஏனங்குடி கிளையில்  நடைபெற்ற இஃப்தார்  மற்றும் ரமழான் அன்பளிப்பு ...
10/03/2026

#எல்லா_புகழும்_இறைவனுக்கே
நாகப்பட்டினம் மாவட்டம் தமுமுக ஏனங்குடி கிளையில் நடைபெற்ற இஃப்தார் மற்றும் ரமழான் அன்பளிப்பு நிகழ்ச்சி...

09/03/2025 அன்று தமுமுக மகளிர் பேரவை சார்பாக ஏனங்குடி கிளையில் தமுமுகவின் #முன்னாள் #மாவட்டசெயலாளர் #ஏனங்குடி_முஜிபுர்_ரஹ்மான் தலைமையில் இரண்டாம் வருடமாக இஃப்தார் மற்றும் ரமழான் அன்பளிப்பு நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது.

மகளிர் அணி நிர்வாகிகள் ஏற்பாட்டில் நடைபெற்ற
இந்நிகழ்ச்சியில் 300 மேற்பட்ட பெண்கள் கலந்துக் கொண்டனர். கேதாரிமங்களம் பள்ளிவாசல் இமாம் அ‌.சாகுல் ஹமீது உலவி அவர்கள் சுவர்கத்து பெண்கள் எனும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார் அதனைத் தொடர்ந்து ஆதலையூர் அரபிக் கல்லூரி ஆசிரியர் ரமழானின் சிறப்புகள் பற்றியும், சகோதரி சுமையா தமுமுக மகளிர் அணியின் அவசியம் பற்றியும் விளக்கி பேசினர். மேலும் இந்த நிகழ்வில் ஆதலையூர் கரைப்பாக்கம் ஜமாஅத் நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள், மமக தலைமை பிரதிநிதி நாகூர் ஜபருல்லாஹ், மமக மாநில மீனவரணி பொருளாளர் கல்லார் ரபீக், தஞ்சை மண்டல ஐடி விங் செயலாளர் நாகை நிஜாம், நாகை ஒன்றிய செயலாளர் ஆழியூர் ஜலால், முன்னாள் தமுமுக மாவட்ட செயலாளர் வடகரை பரகத் அலி, முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் டாக்டர் சுலைமான், முன்னாள் மாவட்ட பொருளாளர் வேட்டை-இஸ்மாயில், ஐடி விங் முன்னாள் மாவட்ட செயலாளர் நாகூர் கமருதீன், திருமருகல் ஒன்றிய பொருளாளர் ஆதலையூர் சித்திக் மற்றும் தமுமுக ஏனங்குடி கிளை நிர்வாகிகள், அமமுக ஒன்றிய செயலாளர் செல்லராஜா மற்றும் ஆதலையூர் ஜமாஅத் தார்கள் என பலர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். இறுதியாக சுமார் ரூ 30,000 மதிப்புள்ள புடவை,கைலி,டி-சேர்ட், வழங்கப்பட்டது.

இதற்காக உதவிய உழைத்த,பங்களித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் இறைவன் உடல் ஆரோக்கியத்தையும்,பரக்கத்தையும் வழங்குவானாக ஆமீன்...

தமுமுக, மமக
தகவல் தொழில்நுட்ப அணி
த.மு.மு.க ஏனங்குடி கிளை
நாகப்பட்டினம் மாவட்டம்

19/10/2025

#தொப்புள்_கொடி_உறவுகள்_அனைவருக்கும்_இனிய_தீபஒளி_வாழ்த்துக்கள்..

10/10/2025

சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும்

ஊரார் கால் பிடிப்பார்..

ஒரு மானமில்லை, அதில் ஈனமில்லை..

அவர் எப்போதும் வால் பிடிப்பார்.

`எதிர் காலம் வரும் என் கடமை வரும்.

இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்..

09/10/2025

AI WORK

Address

Enangudi
Nagapattinam
609701

Website

Alerts

Be the first to know and let us send you an email when சமூதாய சேவகன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share