24/12/2025
#திருவாரூரில்....
#மகாத்மா_காந்தி_100_நாள்_வேலைத்_திட்டத்தின்_பெயர்_மாற்றத்தை_கண்டித்து...
#மதச்சார்பற்ற_முற்போக்கு_கூட்டணியின்_சார்பில்_கண்டன_ஆர்ப்பாட்டம்…
ாநில_துணை_செயலாளர்_பொதக்குடி_ஜெயினுதீன்_பங்கேற்பு!!
டிசம்பர்.24.,
மகாத்மா காந்தி 100 நாள் வேலைத் திட்டத்தின் பெயரை மாற்றிய ஒன்றிய அரசை கண்டித்து இன்று திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து மாவட்டத்திலும் உள்ள மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னணி நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்றுள்ளனர்.
அதன் ஒரு நிகழ்வாக திருவாரூர் மாவட்டம் மாவட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மஜக மாநில துணை செயலாளர் பொதக்குடி ஜெயினுதீன் அவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
இதில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளை சேர்ந்த முன்னணி தலைவர்களும், முன்னாள் அமைச்சர்கள், இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நகர மன்ற தலைவர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்று கண்டன கோஷம் மற்றும் கண்டன உரை நிகழ்த்தினர்.
இந்நிகழ்வில் மாவட்ட IT WING செயலாளர் சமீம், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சித்திக் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
தகவல்;
்_தொழில்நுட்ப_அணி
#திருவாரூர்_மாவட்டம்
24.12.2025