Mayiladuthurai boyzz

Mayiladuthurai boyzz Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mayiladuthurai boyzz, Landmark & historical place, Mela nangil nadu, Nagappattinam.

பொங்கி வரும் காவிரி இல்லாமல் இந்த ஆண்டும் மயிலாடுதுறையில் ஆழ்துளை கிணறு நீரில் வந்த காவிரியில் குளித்து ஆடிப்பெருக்கு பண...
03/08/2015

பொங்கி வரும் காவிரி இல்லாமல் இந்த ஆண்டும் மயிலாடுதுறையில் ஆழ்துளை கிணறு நீரில் வந்த காவிரியில் குளித்து ஆடிப்பெருக்கு பண்டிகையினைகொண்டாடுவோம்.-
-அ.அப்பர்சுந்தரம் - மயிலாடுதுறை.
ஆடிப்பெருக்கு தினத்தை ஒட்டி மயிலாடுதுறை காவிரிக்கரையில் நீராட புதுமணத்தம்பதிகள் வாழ்வு செழிக்க காவிரித்தாயை வழிபட இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
விவசாயத்தை வளமாக்கி வாழ்வை செழிக்க வைக்கும் காவிரித்தாய்க்கு நன்றி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஆடிமாதம் 18ம் நாள் ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது.
நீர் நிலைகளுக்கு நன்றி செலுத்தும் விழாவாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நடந்தாலும், காவிரி ஆறு பாயும் திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உற்சாகத்துடன் கொண்டாடப்படுவது வாடிக்கை.
இந்த ஆண்டு பருவ மழை பொய்த்து விட்டதால் காவிரி ஆறு வறண்டு காணப்படுகிறது. இருப்பினும் காவிரியில் கூடும் பக்தர்களின் குறையை போக்கும் வகையில் ஆழ்துளை கிணறுகள் மூலம் செயற்கை நீரூற்றுகள் அமைக்கப்பட்டு காவிரிக்கரையில் மக்கள் நீராடி, புத்தாடைகள் அணிந்து, படித்து றையில் வாழை இலை போட்டு காவிரி தாய்க்கு காப்பரிசி, பழவகைகள், காதோலை கருகமணி, மஞ்சள் கயிறு உள்ளிட்ட மங்கலப் பொருட்களை படையிலிட்டு கற்பூரதீபம் காட்டி வழிபடவேண்டியது தான். புதுமணத்தம்பதிகள் தங்கள் வாழ்வில் வளமும், நலமும் பெருக வேண்டும் என பிரார்த்தனை செய்து திருமண நாளில் தாங்கள் அணிந்திருந்த மணமாலைகளை காவிரி ஆற்றில் விடவேண்டியது தான்.சுமங்கலி பெண்கள் தங்கள் மாங்கல்ய மஞ்சள் கயிறுகளை புதுப்பித்து அணிந்து கொள்ளவேண்டும். மேலும் ஆண்களும் இந்த வழி பாட்டில் கலந்து கொண்டு காவிரி தாயை வேண்டி கையில் மஞ்சள் கயிறுகளை கட்டிக் கொளளவும். பொங்கிவரும் காவிரி இல்லாமல் இந்த ஆண்டு ஆழ்துளை கிணறு நீரில் வந்த காவிரியில் குளித்து ஆடிப்பெருக்கு பண்டிகையினை கொண்டாடுவோம்.
மக்கள் மீது அன்பு இருந்தால் இது போன்று நடக்காது.
அக்கறையற்ற ஆட்சியாளர்களே இது நியாயமா?
ஆடிப் பட்டம் தேடி விதை என்று மரங்களும் செடிகளும் நட்டு வளப்படுத்த வேண்டும்.
’நீரின்றமையாது உலகு’ என்பது போல் அந்தக்காலத்தில் கனவுகளின் பலன்களிலும் ஆறு, குளம் இடம் பெற்று இருக்கிறது அவற்றில் சில:-
‘ஆற்றில் ஓடி வருகின்ற நீரைஅதில் வெள்ளமாகக் கண்டாலும் நன்மை உண்டாகும்.”
“குளங்கள், கிணறுகள், ஆறுகள் முதலியவை வற்றிப்போகுமாறு கனவு கண்டால் வறுமை வந்து சேரும் .
“ஆறுபெருகிக் கரைகளை உடைத்துச்சென்றால் வெகுவிரைவில் நாட்டின் மீது பகைவர் படையெடுப்பர் ’
கடலைத் தாண்டுதல், ஆற்றைத் தாண்டுதல் போல் கனவு கண்டால் நினைத்த காரியம் முடியும்
இப்படி அந்தக் காலத்தில் நீர் நிலைகளைச் சுற்றியே அவர்கள் வாழ்க்கை பின்னப்பட்டு இருந்தது..
அக்காலத்திலும் காவிரி நதி பாயும் சோழநாட்டில் கடும் பஞ்சம் வந்த போது திருநனிபள்ளி என்ற ஊர் பாலை நிலமாக இருந்தது என்றும், அதை மருதநிலமாக மாற்றினார் திருஞானசம்பந்தர் என்றும் புராணங்கள் மூலம் அறிகிறோம். இந்தக்காலத்திலும் அப்படி மாற்றம் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்று நினைப்பு வருகிறது.
ஆறு, குளங்களில் நீர் இல்லை இப்போது. ஆடி பெருக்குவிழாவை மக்கள் மழை வேண்டியும் குடும்ப நலம் வேண்டியும் வணங்கி வருகிறார்கள். மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், காவேரி அன்னை! கருணை மழை பொழிய வேண்டும்!!!!

25/07/2015
pongal function celebrate
22/07/2015

pongal function celebrate

birthday celebration
22/07/2015

birthday celebration

brothers
22/07/2015

brothers

Address

Mela Nangil Nadu
Nagappattinam
609001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mayiladuthurai boyzz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share