17/03/2026
கழக பொதுச்செயலாளர் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் புரட்சித்தமிழர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் போதைப் பொருட்கள் புழக்கம் முதலானவற்றை கட்டுப்படுத்த தவறிய நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை கண்டித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுடன் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமானது இன்று (17.3.2026) செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு கழக அமைப்புச் செயலாளர் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் திருமிகு.N.தளவாய் சுந்தரம் Bsc BL அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் திரு.K.T.பச்சைமால் அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாஞ்சில் திரு வின்சென்ட் அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் திரு ஜாண் தங்கம் அவர்கள் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு ஜெயசுதர்சன் அவர்கள் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக அவை தலைவர் திரு சேவியர் மனோகரன் அவர்கள் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் திரு கோபகுமார் அவர்கள் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் திரு சுரேஷ் அவர்கள் முன்னாள் நாகர்கோவில் நகர் மன்றத் தலைவர் திருமதி மீனாதேவ் அவர்கள் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் திரு ராகவன் அவர்கள் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அம்மா முன்னேற்றக் கழக செயலாளர் திரு ஜெங்கின்ஸ் அவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பாரதிய ஜனதா கட்சி தேசிய செயற்குழு உறுப்பினர் திருமிகு பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தினை துவக்கி வைத்தார்.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாலியல் வன்கொடுமைகள் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் போதை பொருள் புழக்கம் முதலானவற்றை கட்டுப்படுத்த தவறிய நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசினை கண்டிக்கும் விதமாக கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தின் முடிவில் நாகர்கோவில் மாநகர வடக்கு பகுதி கழகச் செயலாளரும் 11-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான திருமதி ஸ்ரீலிஜா அவர்கள் நன்றியுரையாற்றினார்.
இந்நிகழ்வில் மாவட்ட மாநகர ஒன்றிய நகர பகுதி பேரூர் ஊராட்சி கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாநில மாவட்ட மாநகர ஒன்றிய நகர பகுதி பேரூர் ஊராட்சி சார்பு அணி நிர்வாகிகள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.