31/08/2026
🚨 *POCSO வழக்கு குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10,000 ரூபாய் அபராதம் விதித்து நாகர்கோவில் சிறப்பு POCSO நீதிமன்றம் தீர்ப்பு*
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் விரைந்து புலன் விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, நீதிமன்ற வழக்கு விசாரணையை முறையாக கண்காணித்து, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *டாக்டர். R. ஸ்டாலின் IPS* அவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட POCSO வழக்கில், சிறப்பான புலன் விசாரணையின் மூலம் குற்றவாளிக்கு நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுத்தரப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு , மறுதூர்குறிச்சி, கொல்லன்விளை பகுதியைச் சேர்ந்த அருள் தாஸ் என்பவரின் மகன் ஜஸ்லின் ராஜ்குமார் (32) ,பிளஸ்-2 படித்து வந்த 17 வயது மாணவியை , ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை அழைத்துச் சென்றதாக புகார் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் Crime No.10/2019, U/S 366 IPC & 5(l), 6 OF POCSO Act ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் போது வழக்கு POCSO Act பிரிவுகள் 5(l), 6 ஆகியவை சேர்க்கப்பட்டு, குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கானது தக்கலை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பார்த்திபன் அவர்களின் மேற்பார்வையில் நாகர்கோவில் POCSO சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
விசாரணையின் முடிவில், குற்றவாளி ஜஸ்லின் ராஜகுமாருக்கு, POCSO Act பிரிவுகள் 5(l), 6 – 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ₹5,000 அபராதம்
IPC பிரிவு 366 – 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் ₹5,000 அபராதம்
என தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
நீதிமன்ற வழக்கு விசாரணை மற்றும் சாட்சிகள் விசாரணை ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தர காரணமாக இருந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரிகள், அரசு வழக்கறிஞர், நீதிமன்ற காவலர் இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணையை முறையாக கண்காணித்த தக்கலை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர், மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.