SDPI Kanyakumari District

SDPI Kanyakumari District SDPI Kanyakumari District – Official

இரங்கல் செய்தி..!கன்னியாகுமரி மாவட்டம் SDPI மகளிரணி (WIM) மாவட்டத் தலைவரும், நெல்லை மண்டல SDPI மகளிரணி (WIM) IT Wing தலை...
05/09/2026

இரங்கல் செய்தி..!

கன்னியாகுமரி மாவட்டம் SDPI மகளிரணி (WIM) மாவட்டத் தலைவரும், நெல்லை மண்டல SDPI மகளிரணி (WIM) IT Wing தலைவருமான சகோதரி றம்லத் ஷிஹாப் அவர்களின் அன்புத் தந்தையும், SDPI வேளாண் அணியின் மாவட்டத் தலைவர் சிகாப்தீன் அவர்களின் மாமனாருமாகிய நூகுக்கண் (76) அவர்கள் இன்று இறைவனடி சேர்ந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைகிறேன்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல இறைவன் அன்னாரின் பிழைகளைப் பொறுத்து, அவருக்கு ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயரிய சொர்க்கப் பதவியை அளித்தருள வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

மேலும், அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் இப்பேரிழப்பைத் தாங்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்க இறைவனிடம் வேண்டுகிறேன்.

-A. சுல்பிக்கர் அலி,
மாவட்ட தலைவர், கன்னியாகுமரி மாவட்டம், SDPI கட்சி

Police Fascism Is the New Trend Under the Delhi RegimeIt is shocking and deeply disturbing that the Delhi Police alleged...
04/09/2026

Police Fascism Is the New Trend Under the Delhi Regime

It is shocking and deeply disturbing that the Delhi Police allegedly detained and assaulted two journalists, Shaheen Khan and Nafeesa Khan, who were reportedly slapped and beaten inside the police station and subjected to communal remarks.

The alleged police excesses reportedly occurred after the journalists attempted to question Delhi Chief Minister Rekha Gupta at an event attended by Union Home Minister Amit Shah.

However, the Saket Police Station has reportedly refused to register an FIR against the police personnel accused of these criminal acts.

Such police fascism under the behest of the Delhi regime is highly condemnable. This incident raises serious concerns about the safety and freedom of journalists who seek to question those in power. If journalists cannot question the government without facing intimidation and alleged police assault, it poses a serious threat to democracy and freedom of the press.

An FIR must be registered immediately, and the police personnel responsible for this heinous act must be suspended pending a fair and impartial investigation.

Yasmin Farooqui
National General Secretary

தமிழக அரசே!கர்நாடகா, பீகாரை போல சாதிவாரி கணக்கெடுப்பை மூன்று மாதத்திற்குள் நடத்திடு! கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களின்...
04/09/2026

தமிழக அரசே!

கர்நாடகா, பீகாரை போல சாதிவாரி கணக்கெடுப்பை மூன்று மாதத்திற்குள் நடத்திடு!

கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை 7% ஆக உயர்த்திடு!

COUNT US!

REPRESENT US!!

தலைநகர் சென்னையில்

தலைமைச் செயலகம் நோக்கி SDPI கட்சி நடத்தும்

மாபெரும் பேரணி!

நாள்: செப்டம்பர் 12,
சனிக்கிழமை

இடஒதுக்கீடு சலுகையல்ல! உரிமை!

அனைவரும் திரள்க! உரிமையைப் பெறுக!

அழைக்கிறது..!
SDPI கட்சி, தமிழ்நாடு.





கன்னியாகுமரி மாவட்ட SDPI மகளிரணியின் (WIM) மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம்: புதிய நிர்வாகிகள் தேர்வு!எஸ்.டி.பி.ஐ. (SDPI) க...
02/09/2026

கன்னியாகுமரி மாவட்ட SDPI மகளிரணியின் (WIM) மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம்: புதிய நிர்வாகிகள் தேர்வு!

எஸ்.டி.பி.ஐ. (SDPI) கட்சியின் மகளிர் அமைப்பான விமன் இந்தியா மூவ்மெண்ட் (WIM) அமைப்பின் கன்னியாகுமரி மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம், மாவட்டத் தலைவர் மாஜிதா ஷா தலைமையில், கட்சியின் மாவட்டத் தலைமை அலுவலகத்தில் இன்று (செப்டம்பர் 02) நடைபெற்றது.

நிகழ்வின் தொடக்கமாக மாவட்டச் செயலாளர் நஸ்ரத் ஷாகுல் வரவேற்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் A. சுல்பிக்கர் அலி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, மகளிர் அமைப்பின் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான (2026–2029) புதிய மாவட்ட நிர்வாகிகளை முறைப்படி அறிமுகம் செய்து வைத்தார்.

இந்நிகழ்வில் கட்சியின் SDTU மாநிலச் செயலாளர் நாஞ்சில் A. செய்யது அலி, SDPI கட்சியின் மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் மணவை சாதிக் அலி, WIM மாவட்ட பொதுச் செயலாளர் ஹசீனா கான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள.

இதில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சலீம், நாகர்கோவில் மாநகரத் தலைவர் செய்யது இஸ்ஹாக், மாவட்டச் செயற்குழு சிறப்பு அழைப்பாளர் மீரான் முகைதீன் தங்கப்பா, திருவிதாங்கோடு நகரப் பொறுப்புத் தலைவர் மாஹீன், பத்மநாபபுரம் தொகுதித் தலைவர் அப்துல் ராசாக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும், விமன் இந்தியா மூவ்மெண்ட் அமைப்பின் மாவட்ட, தொகுதி மற்றும் கிளை நிர்வாகிகள் பலரும் திரளாகக் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.

நிறைவாக, மகளிர் அமைப்பின் மாவட்டத் தகவல் தொழில்நுட்பப் பிரிவு (IT Wing) பொறுப்பாளர் பஸ்ரியா ஷாகுல் நன்றியுரை ஆற்றினார்.

– தகவல் தொழில்நுட்ப அணி (IT Wing)
SDPI கட்சி, கன்னியாகுமரி மாவட்டம்

வாழ்த்துகள்!SDPI கன்னியாகுமரி மாவட்டத்தின்மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள சகோதரர் M.I. மணவை சாதிக் அலி அ...
02/09/2026

வாழ்த்துகள்!

SDPI கன்னியாகுமரி மாவட்டத்தின்
மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள சகோதரர் M.I. மணவை சாதிக் அலி அவர்களுக்கு SDPI கட்சி கன்னியாகுமரி மாவட்டம் சார்பாக எங்களது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

மக்கள் நலன் காக்கும் உங்கள் களப்பணிகளும்,சமூக நீதிக்கான கரமும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மேன்மேலும் ஓங்கி ஒலிக்க மனதார வாழ்த்துகிறோம்!

- M. முஹைதீன் நாகூர் மீரான்
மாவட்ட பொதுச் செயலாளர்
SDPI கட்சி, கன்னியாகுமரி மாவட்டம்

தமிழ்நாடு மாணவர் இளைஞர் கூட்டமைப்பு சார்பாக, சென்னை வேப்பேரி பெரியார் திடலில், நீட் எதிர்ப்பு போராளி அனிதா -வின் 9 ஆம் ஆ...
01/09/2026

தமிழ்நாடு மாணவர் இளைஞர் கூட்டமைப்பு சார்பாக, சென்னை வேப்பேரி பெரியார் திடலில், நீட் எதிர்ப்பு போராளி அனிதா -வின் 9 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் SDPI கட்சியின் மாநில துணைத் தலைவர் அச.உமர் பாரூக், மாநில செயற்குழு உறுப்பினர் அஸ்கர் அலி ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், இந்நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, சட்டமன்ற உறுப்பினர் தமீம் அன்சாரி, திரைக்கலைஞர் சத்யராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் எழிலன், அப்துல் சமது, தோழர் தியாகு, வழ.ரஜினிகாந்த், ஊடகவியலாளர் காளீஸ்வரன், தோழர் அற்பதம்மாள் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர்.

தமிழக அரசே!கர்நாடகா, பீகாரை போல சாதிவாரி கணக்கெடுப்பை மூன்று மாதத்திற்குள் நடத்திடு! கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களின்...
01/09/2026

தமிழக அரசே!

கர்நாடகா, பீகாரை போல சாதிவாரி கணக்கெடுப்பை மூன்று மாதத்திற்குள் நடத்திடு!

கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை 7% ஆக உயர்த்திடு!

COUNT US!
REPRESENT US!!

தலைநகர் சென்னையில்
தலைமைச் செயலகம் நோக்கி SDPI கட்சி நடத்தும் மாபெரும் பேரணி!

நாள்: செப்டம்பர் 12,
சனிக்கிழமை

இடஒதுக்கீடு சலுகையல்ல! உரிமை!

அனைவரும் திரள்க! உரிமையைப் பெறுக!

அழைக்கிறது..!
SDPI கட்சி, தமிழ்நாடு.





திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான உயர்திரு. மு.க.ஸ்டாலின் M. K. Stalin  அவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த பாதுகாப்...
29/08/2026

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான உயர்திரு. மு.க.ஸ்டாலின் M. K. Stalin அவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை குறைத்திருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கிறது.

ஒரு மாநிலத்தின் மிக முக்கிய அரசியல் தலைவராகவும், பிரதான எதிர்க்கட்சித் தலைவராகவும் மக்கள் பணியில் தொடர்ந்து தீவிரமாக இயங்கி வருபவர் உயர்திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள். பொதுவெளியில் தினமும் ஆயிரக்கணக்கான மக்களைச் சந்திக்கும் இத்தகைய மக்கள் தலைவர்களின் பாதுகாப்பு என்பது சமரசத்திற்கு அப்பாற்பட்டது.

சமகால அரசியல் சூழலில் தலைவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது இன்றியமையாத தேவையாக உள்ள நிலையில், திடீரென பாதுகாப்பைக் குறைத்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதோ என்ற நியாயமான சந்தேகத்தை எழச் செய்கிறது.

மக்கள் தலைவர்களின் பாதுகாப்பில் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளோ, உள்நோக்கங்களோ துளியும் தலைதூக்கக் கூடாது. மாற்றுக் கருத்துகள், அரசியல் நிலைப்பாடுகளுக்கு அப்பாற்பட்டு, உயர்திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் மக்கள் தொடர்பையும் முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு, அவருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த அதே முழுமையான 'Z+' பாதுகாப்பைத் தாமதமின்றி மீண்டும் வழங்கிட வேண்டும் என ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.

—நெல்லை முபாரக்,
தலைவர், SDPI கட்சி தமிழ்நாடு.

SDPI கட்சியின் மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர்களாக கீழ்க்கண்டவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்களின் சமூக, அரசியல் பணிகள் ...
28/08/2026

SDPI கட்சியின் மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர்களாக கீழ்க்கண்டவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்களின் சமூக, அரசியல் பணிகள் சிறக்க வாழ்த்துகிறேன்

M.நிஜாம் முகைதீன்,
மாநில பொதுச்செயலாளர்,
SDPI கட்சி.

Address

Nagercoil

Alerts

Be the first to know and let us send you an email when SDPI Kanyakumari District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to SDPI Kanyakumari District:

Shortcuts

Share