21/08/2026
பரமத்தி வேலூர் ராஜா வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடாத காரணத்தால் விவசாய சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் பரமத்தி வேலூர் பகுதிகளில் அனைத்து கடைகளும் கடையடைப்பு நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஒரு சிறுமியின் குரல் விவசாயிகளுக்காக ஓங்கி ஒலித்தது அப்போது அந்த சிறுமி சொன்ன விஷயம் #விஜய்_மாமா விஜய் மாமா #நீங்கள்_சொல்லி_தான்_நாங்கள்_அப்பா_அம்மாவை_ஓட்டு_போட_வைத்தோம், ஆனால் எங்கள் கரும்பு, வாழை,கோரை பயிர்கள் அனைத்தும் காய்ந்து கொண்டிருக்கிறது. எங்களுக்கு தண்ணீர் வேண்டும் மாமா உங்கள் தாய்மாமன் சீறும் வேண்டாம் உங்கள் பட்டுப் புடவையும் வேண்டாம்,உங்கள் தங்க மோதிரமும் வேண்டாம் மாமா எங்களுக்கு தண்ணீர் வேண்டும் மாமா, என்று அந்த சிறுமியின் குரல் போராட்டகளத்தில் ஓங்கி ஒலித்தது இந்த சிறுமியின் குரலுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் முதலமைச்சர் அவர்களே......