Sharon Global Revival Ministries & Navi Mumbai Prayer Fellowship

Sharon Global Revival Ministries & Navi Mumbai Prayer Fellowship THE OFFICIAL FACEBOOK PAGE OF SHARON GLOBAL REVIVAL MINISTRIES & NAVI MUMBAI PRAYER FELLOWSHIP

Brief Information about Dr. R S A Williams – Founder & President of SGRM/ NMPF
(An anointed servant of God carrying Lord’s word in Tamil & English across the Globe)

- Motivational Speaker to Global Audience on Management Subjects (with Biblical base)
- Anointed Speaker on Evangelism and Spiritual Topics
- Faculty in Seminars/ Retreats and Conventions with the guidance of Holy Sp

irit
- Management Expert specialised in Global Logistics

Spiritual Background and Services to the Lord with Global Span Coverage
• Commenced Lord’s ministry during the year 1988
• Celebrating completion of the 25th year of ministry in this blessed year 2013
• Balanced the ministry with Corporate Career judiciously for 20 years and entered into full time ministry during the year 2007 spanning 6 years now (25 years of glorious ministry in His Vineyard). We are into –
• Ministry among corporate personnel/ politicians & bureaucrats
• Ministry among churches across nations without denominational barrier
• Miracle all night prayer ministry
• Bible study and seminar ministry
• Ministry of personal evangelism
• Ministry among families/ women/ youth & children
• E-mail ministry
• E-magazine ministry
• Television ministry
• Crusade ministry
• Hospital ministry
• Cottage prayer ministry
• Travelled and ministered in more than 17 countries
• Carrying Lord’s word across India and around the Globe with Love and Compassion

Educational Background
• Bachelors Degree in Law/ Bachelors Degree in Arts
• Masters Degree in Business Management
• Masters Degree in Theology
• PG Diploma in Transport Management/ PG Diploma in Personal Management & Industrial Relations
• Honorary Doctorate Degree

Service Background with Industries in India & abroad
• Commenced corporate career with Tata Group immediately after completion of Education and had an opportunity serving with prominent Blue Chip companies by availing more exposure in Logistics field holding designations right from OFFICER to EXECUTIVE DIRECTOR.
• The Industries served are -
Tea Industry
Paper Industry
Steel Industry
Shipping Industry
Logistics Industry
Media Industry
• Served in Belgium (Europe) as a Vice President/ Director Europe Operations for an Indian MNC and travelled extensively around the world spanning more than 16 countries.
• Left worldly job during the year 2007 and serving the Lord within India and across the globe thereafter on a full time basis. Address & Contact Coordinates
..... Presently settled in Mumbai by having base in Kharghar, Navi Mumbai - Maharastra

Dr. R S A Williams - Founder & President
Sharon Global Revival Ministries & Navi Mumbai Prayer Fellowship
C-1002, Tharwani Heritage, Sector 7, Kharghar, Navi Mumbai – 410 210 Tel. +91 22 2774 9200
Mob. +91 99672 28488
E-mail: [email protected] [email protected]
FB: www.facebook.com/sgrm.nmpf

🔵⚪🔵2091-வது நாளின் காலைத்தியானம்  06/09/2026 !!!இந்த ஓய்வநாளின் காலைவேளையில், "மறுபடியும் உன்னைக் கட்டுவிப்பேன், நீ கட்ட...
05/09/2026

🔵⚪🔵2091-வது நாளின் காலைத்தியானம் 06/09/2026 !!!

இந்த ஓய்வநாளின் காலைவேளையில், "மறுபடியும் உன்னைக் கட்டுவிப்பேன், நீ கட்டப்படுவாய்" ...... "I WILL BUILD YOU UP AGAIN, AND YOU… WILL BE REBUILT" என்று (JEREMIAH) எரேமியா 31:4-ல் காணப்படும் வேதபகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

இந்த உலகவாழ்வில் ஒரு சிலர், தங்களது குடும்பம், தொழில், வேலை, ஆவிக்குரிய ஜீவியம் என அனைத்திலும், ஒரு உயர்வான நிலையில் இருந்து, ஏதோ ஒரு வீழ்ச்சியை இன்று சந்தித்து, வாழ்க்கையே உடைந்து, நொறுங்கிப் போய் ஒரு கடினமான பாதையில் சென்று கொண்டிருக்கக்கூடும்.

நம் தேவனாகிய கர்த்தர், ஒவ்வொருவருடைய வாழ்க்கையையும் ‘மறுபடியும் கட்டி எழுப்புவேன், நீ கட்டப்படுவாய்’ என்று வாக்குக்கொடுக்கிறார்.

ரூத்தினுடைய வாழ்க்கையின் முதல் பகுதியிலே மிகப்பெரிய வீழ்ச்சி காணப்பட்டாலும், கர்த்தர் மீண்டும் அவளுடைய வாழ்க்கையைக் கட்டி எழுப்பினார். மிகுந்த ஆஸ்திக்காரனாகிய போவாஸை வாழ்க்கைத் துணையாய்த் தந்தருளினார். ரூத்தின் வம்சத்தில் தாவீதும், அதைத் தொடர்ந்து நம் அருமை இயேசு கிறிஸ்துவும் பிறந்ததாகப் பார்க்கிறோம்.

ஆமோஸ் 9:12-ல் “…. விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை நான் திரும்ப எடுப்பித்து, அதின் திறப்புகளை அடைத்து, அதில் பழுதாய்ப்போனதைச் சீர்ப்படுத்தி, பூர்வநாட்களில் இருந்ததுபோல அதை ஸ்தாபிப்பேன்” என்று இதைச் செய்கிற கர்த்தர் சொல்லியிருப்பதைப் பார்க்கிறோம்.

எனவே பிரியமானவர்களே,
இடிந்து போயிருக்கிற நம் வாழ்வை கர்த்தர் கரத்திலே ஒப்புக் கொடுப்போம். கர்த்தர் திரும்பவும் சிறப்பாய்க் கட்டியெழுப்பி, மேன்மையான வாழ்வைத் தந்து நம்மை கனப்படுத்துவார்.

ஜெபம்: இந்த நாளின் வார்த்தையின்படியே, எங்களை மறுபடியும் நீர் கட்டுவீர் என்றும், நாங்கள் கட்டப்பட்டு நிலைநிற்போம் என்றும் விசுவாசித்து ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே. ஆமென்.

ஜெப தேவைகளுக்கும், ஆலோசனைகளுக்கும்
24/7- 9967228488
WhatsApp- 7400472200

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai India.

🔴⚪🔴 2090-வது நாளின் காலைத்தியானம்  05/09/2026 !!!இந்த காலைவேளையில், “என் மேன்மையைப் பெருகப்பண்ணி, என்னை மறுபடியும் தேற்ற...
04/09/2026

🔴⚪🔴 2090-வது நாளின் காலைத்தியானம் 05/09/2026 !!!

இந்த காலைவேளையில், “என் மேன்மையைப் பெருகப்பண்ணி, என்னை மறுபடியும் தேற்றுவீர்"...... "YOU WILL INCREASE MY HONOR AND COMFORT ME ONCE MORE" என்று (PSALM) சங்கீதம் 71:21-ல் காணப்படும் வேதபகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

அநேக இக்கட்டுகளையும், ஆபத்துகளையும் கடந்து சென்ற சங்கீதக்காரன், கர்த்தரை நோக்கி, நீர் என்னை திரும்பவும் உயிர்ப்பித்து, திரும்பவும் என்னைப் பூமியின் பாதாளங்களிலிருந்து ஏறப்பண்ணி, என் மேன்மையைப் பெருகப்பண்ணி, என்னை மறுபடியும் தேற்றுவீர் என்று விசுவாசத்தோடு அறிக்கையிடுகிறார்.

இந்தநாளிலும், நமது அந்தஸ்து, பணம், பலன் போன்றவற்றை இழந்து, சோர்ந்து, துக்கத்தோடு தேற்றுவதற்கு யாருமின்றி திகைத்து நிற்கக்கூடும். நம் அன்பின் கர்த்தர், ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல நம்மைத் தேற்றி, இழந்துபோன மேன்மையை திரும்பவும் தந்து, உயர்த்தி கனப்படுத்துவார்.

வாழ்க்கையிலே இருள் சூழ்ந்து, இனி என்ன செய்வதென்று வழி தெரியாமல் இருக்கும் போது, வழிகாட்டும் வெளிச்சமாக நமக்கு முன்சென்று, நீதியின் பாதைகளில் நடத்தி, மற்றவர்கள் முன்னிலையில் நம்மை மேன்மைப்படுத்தி, உயர்ஸ்தலங்களில் ஏறப்பண்ணுகிறார்.

தாவீது, சங்கீதம் 23:3-ல் “அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்”என்று குறிப்பிடுகிறார்.

எனவே பிரியமானவர்களே, வாழ்விலே எப்படிப்பட்ட எதிரடையான சூழ்நிலைகளை சந்திக்க நேர்ந்தாலும், இயேசுவை அண்டிக்கொள்வோம். அவரே நமக்கு ஆறுதலையும், தேறுதலையும் தந்து, நம்மை கனப்படுத்துவார்.

ஜெபம்: இந்த நாளின் வார்த்தையின்படியே, கர்த்தராகிய நீர் எங்கள் மேன்மையைப் பெருகப்பண்ணி, எங்களை மறுபடியும் தேற்றுவீர் என்று உம்மை விசுவாசித்து ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே…. ஆமென்.

ஜெப தேவைகளுக்கும் ஆலோசனைகளுக்கும்
24/7- 9967228488
WhatsApp- 7400472200

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India.
NMPF - Mumbai India

🟠⚪🟠 2089-வது நாளின் காலைத்தியானம் 04/09/2026 !!!இந்த காலைவேளையில், “கர்த்தாவே என் சத்துருக்களுக்கு என்னைத் தப்புவியும். ...
03/09/2026

🟠⚪🟠 2089-வது நாளின் காலைத்தியானம் 04/09/2026 !!!

இந்த காலைவேளையில், “கர்த்தாவே என் சத்துருக்களுக்கு என்னைத் தப்புவியும். உம்மைப் புகலிடமாகக் கொள்ளுகிறேன்" …... "RESCUE ME FROM MY ENEMIES, LORD FOR I HIDE MYSELF IN YOU” என்று (PSALM) சங்கீதம் 143:9-ல் காணப்படும் வேதபகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

இந்த உலக வாழ்விலே, பொல்லாத ஜனங்கள் நமக்கு விரோதமாக கிரியைகளை நடப்பித்து, எளியவர்களாகிய நம்மை தாழ்த்திக் கொண்டே இருப்பார்கள். நாம், கர்த்தரை நமக்குப் புகலிடமாகக் கொள்ளும்போது, நமக்கு விரோதமாக எப்பேர்ப்பட்ட சத்துருக்கள் எழும்பினாலும், நாம் பயப்படவோ, கலங்கவோ வேண்டியதில்லை.

சங்கீதக்காரனாகிய தாவீது, சங்கீதம் 31:1 மற்றும்15-ம் வசனங்களில் “கர்த்தாவே, என் சத்துருக்கள் எவ்வளவாய்ப் பெருகியிருக்கிறார்கள்”….. “என் சத்துருக்களின் கைக்கும் என்னைத் துன்பப்படுத்துகிறவர்களின் கைக்கும் என்னைத் தப்புவியும்” என்று விண்ணப்பம் பண்ணியிருப்பதைப் பார்க்கிறோம்.

ஆபத்து காலத்தில் ஓடிஒளிந்து கொள்ளத்தக்க பாதுகாப்பான இடம் கர்த்தர் மட்டுமே என்று அவரிடம் தஞ்சம் அடையும்போது, நம் அன்பின் கர்த்தர் சத்துருக்களின் கைக்கு நம்மை தப்புவித்து, நமக்கு நிச்சயமாய் வெற்றியைக் கொடுப்பார்.

அவ்வண்ணமாய் வெற்றியைப் பெற்ற தாவீது, சங்கீதம் 18:17-ல், “என்னிலும் பலவான்களாயிருந்த என் பலத்த சத்துருவுக்கும் என்னைப் பகைக்கிறவர்களுக்கும் என்னை விடுவித்தார்” என்று கூறியிருப்பதை பார்க்கிறோம்.

எனவே பிரியமானவர்களே, எப்பேர்ப்பட்ட போராட்டங்களை சத்துரு கொண்டு வந்தாலும் கர்த்தரிடம் அடைக்கலம் தேடுவோம். அவர் நமக்கு துணையாயிருந்து, நம்மை விடுவித்து கனப்படுத்துவார்.

ஜெபம்: இந்த நாளின் வார்த்தையின்படியே, கர்த்தராகிய நீர், உம்மையே புகலிடமாகக் கொண்டிருக்கிற எங்களை, சத்துருக்களின் கைக்கு தப்புவிக்கும்படி ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே....ஆமென்.

ஜெப தேவைகளுக்கும் ஆலோசனைகளுக்கும்
24/7- 9967228488
WhatsApp- 7400472200

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai India

🟢⚪🟢 2088-வது நாளின் காலைத்தியானம் 03/09/2026 !!!இந்த காலைவேளையில், "என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இள...
02/09/2026

🟢⚪🟢 2088-வது நாளின் காலைத்தியானம் 03/09/2026 !!!

இந்த காலைவேளையில், "என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன்" …... "MY PRESENCE WILL GO WITH YOU AND I WILL GIVE YOU REST” என்று (EXODUS) யாத்திராகமம் 33:14-ல் காணப்படும் வேதபகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

நம் வாழ்க்கைப் பாதையில், கர்த்தர் நமக்கு முன்னே சென்று நமக்கு வழிகாட்டுவார். கவலைகள் மற்றும் போராட்டங்களின் நடுவில் அவர் நம்மோடிருந்து, நமக்கு உண்மையான அமைதியையும், இளைப்பாறுதலையும் தருவேன் என்று வாக்குக்கொடுக்கிறார்.

மோசே, இஸ்ரவேல் ஜனங்களை வனாந்தரத்திலே வழிநடத்திச் சென்றபோது,
“அவர்கள் இரவும் பகலும் வழிநடக்கக்கூடும்படிக்கு, கர்த்தர் பகலில் அவர்களை வழிநடத்த மேகஸ்தம்பத்திலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சங்காட்ட அக்கினிஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன் சென்றார்” என்று யாத்திராகமம் 13:21-ல் பார்க்கிறோம். ஆகவே அவர்களுக்கு எந்தவொரு ஆபத்தும் நேரிடவில்லை.

கர்த்தர் நமக்கு முன்பாக செல்லும்போது, கோணலானவைகள் எல்லாம் செம்மையாகும், பள்ளங்களெல்லாம் நிரப்பப்படும், சகல மலைகளும், குன்றுகளும் தாழ்த்தப்படும். வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்துப் போடுவார்.

மீகா 2:13-ல் “தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்….” என்று பார்க்கிறோம்.

எனவே பிரியமானவர்களே, நம் வாழ்வில், கர்த்தர் நமக்கு முன்பாக செல்லும்படியாக நம்மை அர்ப்பணிப்போம். எல்லா தடைகளையும் நீக்கி, நேர்த்தியாய் நடத்தி சென்று, அவர் நமக்கு மிகுந்த இளைப்பாறுதலைத் தந்தருளுவார்.

ஜெபம்: இந்த நாளின் வார்த்தையின்படியே, கர்த்தராகிய உம் சமுகம் எப்பொழுதும் எங்களுக்கு முன்செல்லவும், இளைப்பாறுதல் கிடைக்கவும் வாஞ்சித்து ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப்பிதாவே.... ஆமென்.

ஜெப தேவைகளுக்கும் ஆலோசனைகளுக்கும்
24/7- 9967228488
WhatsApp- 7400472200

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai India

🔴⚪🔴2087-வது நாளின் காலைத்தியானம்  02/09/2026 !!!இந்த காலைவேளையில், "நான் கர்த்தர்; எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்ப...
01/09/2026

🔴⚪🔴2087-வது நாளின் காலைத்தியானம் 02/09/2026 !!!

இந்த காலைவேளையில், "நான் கர்த்தர்; எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை”..... "I am the Lord: those who hope in me will not be disappointed” என்று (ISAIAH) ஏசாயா 49:23-ல் காணப்படும் வேதபகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

நம்முடைய வாழ்வின் தோல்விகள், ஏமாற்றங்கள், பிறர் செய்த தீமைகள், நாம் செய்த தவறுகள், சாத்தானின் தந்திரங்கள்…. இவைகளினிமித்தமாக
நாம் வெட்கத்தோடு, பொது இடங்களில் தலைகுனிந்து நின்றுகொண்டிருக்கக்கூடும்

இயேசு கிறிஸ்து, அன்று கல்வாரி சிலுவையிலே நமக்காக அவமானத்தை ஏற்றுக்கொண்டு, நமது பாடுகள், பாவங்கள், சாபங்கள் அனைத்தையும் சுமந்து தீர்த்ததினாலே நாம் இனி வெட்கம் அடைவதில்லை. எதற்கும் பயப்படவும் தேவையில்லை.

ஆகவே சோதனை காலங்களில், நாம் பதற்றப்படாமல் கர்த்தருடைய சமூகத்தில் நம்பிக்கையோடு காத்திருப்போம். அவர் நம்மை நேர்த்தியாய் வழிநடத்தி, நாம் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்வார்.

ஆம், சங்கீதம் 34:5-ல் “அவர்கள் அவரை நோக்கிப் பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை” என்று பார்க்கிறோம்.

நமது எதிர்கால உயர்வுக்காகவும், நீதி நியாயத்திற்காகவும் காத்திருக்கிற நாம் நினைத்தே பார்க்காத வகையில், வேளையில் பெரிய நன்மையை கர்த்தரர் நமக்குச் செய்து நம்மை வெட்கத்திலிருந்து தூக்கியெடுப்பார்.

ஏசாயா 61:7-ல் “உங்கள் வெட்கத்துக்குப் பதிலாக இரண்டத்தனையாய்ப் பலன் வரும்” என்று கர்த்தர் நம்மை உற்சாகப்படுத்துகிறார்.

எனவே பிரியமானவர்களே, இயேசுமீது முற்றிலுமாய் நமது நம்பிக்கையை வைப்போம். நம் தலையை உயர்த்தி, நாம் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்வார்.

ஜெபம்: இந்த நாளின் வார்த்தையின்படியே, கர்த்தராகிய உமக்கு காத்திருக்கிற நாங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை என்று அறிக்கை செய்து ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே…. ஆமென்.

ஜெப தேவைகளுக்கும் ஆலோசனைகளுக்கும் 24/7- 9967228488
WhatsApp- 7400472200

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM- Chennai India.
NMPF- Mumbai India

🟢⚪🟢 2086-வது நாளின் காலைத்தியானம்  01/09/2026 !!!PROMISE - SEPTEMBER 2026 !!!இந்த புதியமாதத்தின் முதல்நாள் காலைவேளையில்,...
31/08/2026

🟢⚪🟢 2086-வது நாளின் காலைத்தியானம் 01/09/2026 !!!

PROMISE - SEPTEMBER 2026 !!!

இந்த புதியமாதத்தின் முதல்நாள் காலைவேளையில், "உன் துக்கநாட்கள் முடிந்துபோம்"...... " YOUR DAYS OF SORROW WILL END” என்று (ISAIAH) ஏசாயா 60:20-ல் காணப்படும் வேதப்பகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

இன்று நமது உலக பொறுப்புகளிலும், ஊழியத்தின் பாதையிலும்…. பலவிதமான பிரச்சனைகளையும், நெருக்கங்களையும் சந்தித்து துக்கத்துடன் காணப்படுகிறோம்.

ஆயினும், தேவனுடைய பிள்ளைகள் துக்கத்தோடும், துயரத்தோடும் வாழ்வதை அவர் விரும்புவதில்லை. ஆம், “மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்'' என்று ஏசாயா 53:4-ல் பார்க்கிறோம்.

1 நாளாகமம் 4-ம் அதிகாரத்தில் யாபேஸின் தாய்: ‘நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன்’ என்று சொல்லி அவனுக்கு யாபேஸ் என்று பேரிட்டாள். ஆனாலும் யாபேஸ், அந்தத் துக்கத்துடன் வாழ விரும்பவில்லை.

யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி: “தேவரீர்…. தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும்” என்று வேண்டிக்கொண்டதை தேவன் அருளினார் என்று 1 நாளாகமம் 4:10-ல் பார்க்கிறோம். யாபேஸ் தன் சகோதரரைப்பார்க்கிலும் கனம்பெற்றவனாயிருந்தான்

நம் வாழ்க்கையில் துக்கத்தை உண்டாக்குகிற இருள் சூழ்ந்த சம்பவங்கள், சோகங்கள், கலக்கங்கள் மற்றும் கண்ணீர் அனைத்திற்கும் சீக்கிரத்தில் ஒரு முடிவு உண்டு. கர்த்தர், நமக்கு சமாதானமான நல் வாழவைத் தந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

எனவே பிரியமானவர்களே, இப்பொழுதே கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணுவோம். நிச்சயமாகவே நம்முடைய துக்க நாட்களுக்கு ஒரு முடிவு வரும். நம் துக்கம் சந்தோஷமாக மாறும்.

ஜெபம்: இந்த நாளின் வார்த்தையின்படியே, எங்கள் துக்கநாட்கள் முற்றிலுமாக முடிந்து போகவேண்டும் என்று ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப்பிதாவே...ஆமென்

ஜெப தேவைகளுக்கும், ஆலோசனைகளுக்கும்
24/7 - 9967228488
WhatsApp- 7400472200

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai India

🟤⚪ 🟤 2085-வது நாளின் காலைத்தியானம் 31/08/2026 !!!இந்த மாதத்தின் கடைசி நாளில் "அவர் உங்களிடத்தில் எவ்வளவு மகிமையான காரியங...
30/08/2026

🟤⚪ 🟤 2085-வது நாளின் காலைத்தியானம் 31/08/2026 !!!

இந்த மாதத்தின் கடைசி நாளில் "அவர் உங்களிடத்தில் எவ்வளவு மகிமையான காரியங்களைச் செய்தார் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்"..… "CONSIDER WHAT GREAT THINGS HE HAS DONE FOR YOU” என்று (1SAMUEL) 1 சாமுவேல் 12:24-ல் காணப்படும் வேதபகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

இஸ்ரவேல் மக்களுடைய வாழ்க்கையில் கர்த்தர் செய்த அற்புதங்களையும் வழிநடத்துதல்களையும், சாமுவேல் ஞாபகப்படுத்தி, அவைகளைச் சிந்தித்துப் பாருங்கள் என்று கூறுகின்றார்.

நாமும் நம் வாழ்வில், தேவன் இதுவரை செய்த நன்மைகள் மற்றும் இக்கட்டான சூழ்நிலைகளில் தந்த விடுதலையைச் சிந்தித்துப் பார்ப்போம். அப்போது, முழு இருதயத்தோடும், உண்மையாகவும் அவருக்கு நன்றி செலுத்தி அவரையே சேவிக்க முற்படுவோம்.

வேதத்தில், இயேசு செய்த முதலாம் அற்புதம் தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றியதுதான். யோவான் 2:11-ல் “இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார்” என்று பார்க்கிறோம்.

அன்று மகிமையான அற்புதங்களைச் செய்த இயேசு, இன்றும் நம் வாழ்வில் அற்புதங்களைச் செய்ய ஆவலாயிருக்கிறார். ஆகவே, எப்பேர்பட்ட கடினமான பாதைகளை கடந்து வந்தாலும், கர்த்தர் நமக்கு இதுவரை செய்த மகிமையான காரியங்களை எண்ணிப் பார்ப்போம். நிச்சயமாகவே நமது கவலைகள் நீங்கி, உள்ளத்தில் சமாதானமும், துதியும் பெருகும்.

எனவே பிரியமானவர்களே,“வல்லமையுடையவர் மகிமையான காரியங்களை எனக்குச் செய்தார்” என்று மரியாள், கர்த்தருடைய நாமத்தை உயர்த்தினது போல நாமும் உயர்த்துவோம். கர்த்தர் நம் வாழ்வின் தோல்வியை வெற்றியாய் மாற்றிக் கொடுப்பார்.

ஜெபம்: இந்த நாளின் வார்த்தையின்படியே, கர்த்தராகிய நீர், இதுவரை எங்கள் வாழ்வில் எவ்வளவு மகிமையான காரியங்களைச் செய்தீர் என்பதைச் சிந்தித்துப்பார்த்து, இப்போதும் அற்புதத்தைச் செய்வீர் என்று விசுவாசித்து ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே…ஆமென்.

ஜெப தேவைகளுக்கும் ஆலோசனைகளுக்கும்
24/7- 9967228488
WhatsApp- 7400472200.

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India.
NMPF - Mumbai India

🔵⚪🔵2084-வது நாளின் காலைத்தியானம் 30/08/2026 !!!இந்த ஓய்வுநாளின் காலைவேளையில், "எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்ற...
29/08/2026

🔵⚪🔵2084-வது நாளின் காலைத்தியானம் 30/08/2026 !!!

இந்த ஓய்வுநாளின் காலைவேளையில், "எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்” .….. "HE WILL DO TO ME WHATEVER HE HAS PLANNED” என்று (JOB) யோபு 23:14-ல் காணப்படும் வேதப்பகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

யோபு, பலவிதமான பாடுகளின் பாதையில் கடந்துசென்ற வேளையிலும்கூட, கர்த்தர் அவனுக்காக எதை முன்குறித்து வைத்திருக்கிறாரோ அதை நிறைவேற்றுவார் என்று விசுவாசத்தோடு அறிக்கை செய்கிறதைக் காண்கிறோம்.

நம்முடைய வாழ்க்கையிலும்கூட, கர்த்தர் நமக்கென்று எதைக் முன்குறித்திருக்கிறாரோ எல்லாவற்றையும் அவருடைய வேளைவரும்போது, நமக்காகச் செய்து முடிப்பார். இதைப் புரிந்துகொள்ள முடியாததினால் அனேக வேளைகளில் நாம் சோர்ந்து போகிறோம்.

வானமும் பூமியும் ஒழிந்து போனாலும் அவருடைய வார்த்தைகள் ஒருபோதும் ஒழிந்துபோவதில்லை. அவர் பொய் சொல்ல ஒரு மனிதன் அல்ல, மனம்மாற அவர் மனுபுத்திரனுமல்ல.

யோபுவின் வாழ்க்கையில், அவனுடைய உபத்திரவத்திற்குப் பின்பு, முன்குறிக்கப்பட்ட இரட்டிப்பான செழிப்பை கர்த்தர் கட்டளையிட்டார். அதுபோல, நமக்கென்று குறித்ததையும் நிறைவேற்றி, இரட்டிப்பாய் ஆசீர்வதித்து நம்மையும் உயர்த்துவார்.

எரேமியா 33:14-ல் “இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது நான் இஸ்ரவேலின் குடும்பத்துக்கும், யூதாவின் குடும்பத்துக்கும் சொன்ன நல்வார்த்தையை நிறைவேற்றுவேன்” என்று இந்தநாளிலே நம்மை உற்சாகப்படுத்துகிறார்.

எனவே பிரியமானவர்களே, தேவன் முன்குறித்த நேரம் வரைக்கும், நாம் பொறுமையோடு காத்திருப்போம். நிச்சயமாகவே நிறைவான நன்மைகளைப் பெற்றுக்கொள்வோம்.

ஜெபம்: இந்த நாளின் வார்த்தையின்படியே, எங்களுக்கு நீர் குறித்திருக்கிறதை நிச்சயமாய் நிறைவேற்றுவீர் என்று விசுவாசித்து ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே....ஆமென்.

ஜெப தேவைகளுக்கும், ஆலோசனைகளுக்கும்
24/7- 9967228488
WhatsApp- 7400472200

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai India.

🔴⚪🔴 2083-வது நாளின் காலைத்தியானம் 29/08/2026!!!இந்த காலைவேளையில், "நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்...
28/08/2026

🔴⚪🔴 2083-வது நாளின் காலைத்தியானம் 29/08/2026!!!

இந்த காலைவேளையில், "நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்" …... "HOPE DEFERRED MAKES THE HEART SICK, BUT A LONGING FULFILLED IS A TREE OF LIFE" என்று (PROVERBS) நீதிமொழிகள் 13:12-ல் காணப்படும் வேதப்பகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

நம் வாழ்வில் சில காரியங்களுக்காக நெடுங்காலமாய் காத்திருந்து இருதயம் இளைப்படையலாம். ஆனால், கர்த்தர் நம் மனவிருப்பங்களை நிறைவேற்றும்போது, அது ஜீவவிருட்சம்போல இருக்கும்.

கர்த்தர் ஆபிரகாமைப் பார்த்து, “நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப் பெருகவே பெருகப்பண்ணுவேன்” என்றார். “அந்தப்படியே, அவன் பொறுமையாய்க் காத்திருந்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெற்றான்” என்று எபிரெயர் 6:14,15-ல் பார்க்கிறோம்.

கர்த்தர் சொன்னபடியே, ஆபிரகாம் முதிர்வயதாயிருக்கையில், சாராள் கர்ப்பவதியாகி, குறித்தகாலத்தில் ஒரு குமாரனைப் பெற்றாள்.

மேலும், அன்னாள் நெடுங்காலமாய் குழந்தையில்லாததால் தேவனுடைய சமூகத்தில் காத்திருந்து, மனங்கசந்து அழுது விண்ணப்பம் பண்ணினாள். கர்த்தர் அவளுடைய விருப்பத்தின்படியே ஒரு குமாரனைக் கொடுத்தார்.

அப்பொழுது அன்னாள், “என் இருதயம் கர்த்தருக்குள் களிகூருகிறது” என்று கர்த்தரை மகிமைப்படுத்தினாள் என்று 1 சாமுவேல் 2:1-ல் பார்க்கிறோம்.

எனவே பிரியமானவர்களே, நாமும் காத்திருக்கும் காரியங்களுக்காக விசுவாசத்தோடு விண்ணப்பம் பண்ணுவோம். கர்த்தர், அனைத்தையும் தந்து, நம்மைக் கனப்படுத்துவார்.

ஜெபம்: இந்த நாளின் வார்த்தையின்படியே, நெடுங்காலமாய் காத்திருந்து எங்கள் இருதயம் இளைத்துப்போன வேளையிலும், நாங்கள் விரும்பினது வரும் என்று விசுவாசித்து ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் எங்கள் ஜெபத்தைக் கேளும், எங்கள் அன்பின் பரலோகப்பிதாவே...ஆமென்

ஜெப தேவைகளுக்கும் ஆலோசனைகளுக்கும்
24/7- 9967228488
WhatsApp- 7400472200

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM- Chennai India
NMPF- Mumbai India

🟤⚪🟤 2082-வது நாளின் காலைத்தியானம் 28/08/2026 !!!இந்த  காலைவேளையில், "களிமண் குயவன் கையில் இருக்கிறதுபோல நீங்கள் என் கையி...
27/08/2026

🟤⚪🟤 2082-வது நாளின் காலைத்தியானம் 28/08/2026 !!!

இந்த காலைவேளையில், "களிமண் குயவன் கையில் இருக்கிறதுபோல நீங்கள் என் கையில் இருக்கிறீர்கள்" ..... "LIKE CLAY IN THE HAND OF THE POTTER, SO ARE YOU IN MY HAND” என்று (JEREMIAH) எரேமியா 18:6-ல் காணப்படும் வேதப்பகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

ஆதியிலே தேவன், மண்ணை எடுத்து, தமது சாயலின்படியேயும், தமது ரூபத்தின்படியேயும் தம்முடைய சொந்தக் கரங்களினால் மனிதனை உருவாக்கினார். தமது ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினபோது அவன் ஜீவாத்துமாவானான்.

ஆனால், ஆதாமின் மீறுதல்களினிமித்தமாக, குயவனுடைய கையிலே களிமண் பாத்திரம் உடைந்து போவதுபோல, அவனுடைய மேன்மையான வாழ்க்கை உடைந்து, சிதைந்து போனது. அதைத் தொடர்ந்து பாவங்களும், சாபங்களும், அவனைப் பற்றிப்பிடித்தது.

எரேமியா18:4-ல் “குயவன் வனைந்துகொண்டிருந்த மண்பாண்டம் அவன் கையிலேகெட்டுப்போயிற்று; அப்பொழுது அதைத் திருத்தமாய்ச் செய்யும்படிக்கு, தன் பார்வைக்குச் சரியாய்க் கண்டபடி குயவன் அதைத் திரும்ப வேறேபாண்டமாக வனைந்தான்” என்று பார்க்கிறோம்.

மனிதனுடைய பாவத்துக்கு பரிகாரம் செய்ய இயேசுகிறிஸ்து தன்னையே பாவ நிவாரண பலியாக அர்ப்பணித்தார். பரம குயவனாகிய இயேசு, தன் கரத்திலே வழியும் இரத்தத்தையே ஊற்றி, நம்மை வனைந்தருள சித்தமானார்.

தாவீது பாவம் செய்தபோது உடைந்த பாத்திரத்தைப் போலானார். ஆனால், கண்ணீர் சிந்தி, தன் பாவத்தை அறிக்கையிட்டு தேவசமுகத்தில் கதறி அழுதபோது, கர்த்தர் தாவீதை மீண்டும் கனமுள்ள பாத்திரமாக்கினார்.

எனவே பிரியமானவர்களே, இந்தநாளிலும், நம்மை கர்த்தர் கரத்தில் அர்ப்பணிப்போம். அவர் நம்மை சுத்திகரித்து மகிமையின் பாத்திரமாக வனைந்தருளுவார்.

ஜெபம்: இந்த நாளின் வார்த்தையின்படியே, களிமண் குயவன் கையில் இருக்கிறதுபோல, உமது கையில் இருக்கிற எங்களை கிருபையின் பாத்திரங்களாக வனையும்படிஜெபிக்கிறோம்இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப்பிதாவே…ஆமென்

ஜெப தேவைகளுக்கும் ஆலோசனைகளுக்கும்
24/7- 9967228488
WhatsApp- 7400472200.

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM- Chennai India
NMPF- Mumbai India

Address

Navi Mumbai

Telephone

00919967228488

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sharon Global Revival Ministries & Navi Mumbai Prayer Fellowship posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Sharon Global Revival Ministries & Navi Mumbai Prayer Fellowship:

Shortcuts

Share