Neyveli Township

Neyveli Township Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Neyveli Township, Landmark & historical place, Neyveli lignite corporation, Neyveli.
(359)

NLC நிறுவனத்தால் கடலூர் மாவட்டம் நெய்வேலி சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதரச மாசுபாடு குறித்து விசாரிக்க ஒரு உ...
15/06/2025

NLC நிறுவனத்தால் கடலூர் மாவட்டம் நெய்வேலி சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதரச மாசுபாடு குறித்து விசாரிக்க ஒரு உயர் மட்டக் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. இவ்விவகாரத்தின் தீவிரம் கருதியும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் உயர் மட்டக் குழுவை முழுவதும் அரசு அதிகாரிகளைக் கொண்டு மட்டும் அமைக்காமல் பொதுவான, துறைசார் நிபுணத்துவம் பெற்ற பேராசிரியர்களைக் கொண்டும், உள்ளூர் மக்களின் பிரநிதிகளைக் கொண்டும் திருத்தியமைக்க வேண்டும்.

🚨"மின்சாரத்தின் இருண்ட முகம் (POWERing Pollution)"  STREAMING NOW! on Poovulagu Youtube channel 🚨A Documentary film abou...
15/12/2024

🚨"மின்சாரத்தின் இருண்ட முகம் (POWERing Pollution)" STREAMING NOW! on Poovulagu Youtube channel 🚨

A Documentary film about NLC Neyveli.

https://youtu.be/iuIrCbnuAUs?feature=shared.

08/12/2022

https://fb.watch/hhTtWJa5Is/

NLC Neyveli | தீர்ந்தது நிலக்கரி ... மூடப்படும் என்.எல்.சி.: என்ன செய்யப் போகிறார் ஸ்டாலின்

நிலத்துக்கு நாங்க அல்லாட..உங்களுக்கு குத்தாட்டம் கேட்குதோ! நள்ளிரவு ஆபாச நடனம்! எல்லை மீறிய என்எல்சிஎன்.எல்.சி.க்காக நில...
07/12/2022

நிலத்துக்கு நாங்க அல்லாட..உங்களுக்கு குத்தாட்டம் கேட்குதோ! நள்ளிரவு ஆபாச நடனம்! எல்லை மீறிய என்எல்சி

என்.எல்.சி.க்காக நிலம் கொடுத்த மக்களுக்கு வேலை வழங்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி போராட்டத்தை தொடங்கியுள்ள நிலையில், அரைகுறை ஆடையுடன் பெண்கள் சிலர் சுரங்கம் அருகே குத்தாட்டம் போட்ட ஆடல் பாடல் வீடியோ காட்சிகள் தற்போது வேகமாக பரவி வருகிறது

64 ஆண்டுகளுக்கு மேலாக என்எல்சி நிறுவனம் கடலூர் மாவட்ட மண்ணையும் மக்களையும் ஏமாற்றி பழுப்பு நிலக்கரியை எடுத்து வருகிறது. ஒரு காலத்தில் தன்னூத்தாக இருந்த கடலூர் மாவட்டத்தின் நீர்மட்டம் 8000 அடிக்கும் கீழே சென்று விட்டதாக புகார் கூறப்படுகிறது.

என்.எல்.சி நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டு வந்தாலும், அதன் காரணமாக அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு துரோகம் விளைவிக்கும் என்எல்சி நிறுவனம் தமிழ்நாட்டிற்கு தேவை இல்லை என போராட்டங்களும் அரங்கேறி வருகிறது. நவரத்தின அந்தஸ்த்துடன் இந்தியாவின் மிகப் பெரிய அரசு நிறுவனமாக என்எல்சி இந்தியா செயல்பட்டு வருகிறது.

மக்கள் போராட்டம்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அடுத்த கரிவெட்டி கிராமத்திற்கு என்எல்சி அதிகாரிகள் நிலம் மனை அளவீடு செய்ய வருகை தந்தனர். இதனை அறிந்த கிராம மக்கள், கிராம எல்லையில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்றிணைந்து, ஊருக்குள் விடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும் பாமக உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் பொதுமக்களுடன் என்எல்சி அதிகாரிகளுக்கு, எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆடல் பாடல்

தற்போதைய சூழ்நிலையில் வட மாநில தொழிலாளர்கள் என்எல்சி நிறுவனத்தில் பணியாற்றுவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் நிலம் மற்றும் வீடுகளை இழந்த கடலூர் மாவட்ட மக்கள் கொந்தளிப்பில் இருக்கும் நிலையில் தற்போது போராட்டம் தீவிரமடைந்து இருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக பல்வேறு கட்சிகளும் களமிறங்கி இருக்கின்றன. இந்த நிலையில் கடலூர் என்எல்சி சுரங்கம் அருகே விதிமுறைகளை மீறி அதிகாரி ஒருவருக்காக ஆடல் பாடல் குத்தாட்டம் என கொண்டாட்டங்கள் நடைபெற்றது கடலூர் மக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

பிரிவு உபச்சார விழா

சண்டிகரைச் சேர்ந்த ராகேஷ் குமார் என்பவர் கடந்த 2012 ஆம் ஆண்டு என்எல்சி நிதித்துறை இயக்குனராக பணியில் சேர்ந்து இருக்கிறார். 2019 ஆம் ஆண்டு பணி உயர்வு பெற்ற அவர் இந்த ஆண்டு இறுதியில் பணி ஓய்வு பெற இருக்கிறார். இதை அடுத்து அவருக்கு பிரிவு உபச்சார விழா வழங்க திட்டமிட்ட அதிகாரிகள் சிலர் உற்சாக குத்தாட்ட விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கின்றார். அரைகுறை ஆடையுடன் பெண்கள் சிலர் குத்தாட்டம் போட்ட ஆடல் பாடல் வீடியோ காட்சிகள் தற்போது வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் ஆபாச நடனமாடும் பெண்களை அதிகாரிகள் சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பதை கண்ட கடலூர் மக்கள் கடும் கோபத்திற்குள்ளாகி இருக்கின்றனர்.

கடும் நடவடிக்கை

நிலத்தையும் கொடுத்து வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நாங்கள் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்க அதிகாரிகளுக்கு குத்தாட்டம் கேட்கிறதா என கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது நிரந்தர வேலை இன்றி நிலத்திற்காக நாங்கள் போராடிவரும் நிலையில் வடமாநில அதிகாரிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இந்தி பாடல்களும் குத்தாட்டமும் கேட்கிறதா என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பியுள்ள அப்பகுதி வாசிகள் தொழிலக விதிமுறைகளை மீறி குத்தாட்டம் நடத்திய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்தின் பழுப்பு நிலக்கரி சுரங்க நடவடிக்கைகளால் ஒட்டுமொத்த மாவட்டமுமே பாதிப்படை...
10/08/2022

கடலூர் மாவட்டத்தில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்தின் பழுப்பு நிலக்கரி சுரங்க நடவடிக்கைகளால் ஒட்டுமொத்த மாவட்டமுமே பாதிப்படைந்துள்ளது என மாவட்ட தாது அறக்கட்டளை அறிவித்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. https://tinyurl.com/2hkjfj6e
https://poovulagu.org/climate/entire-cuddalore-district-affected-by-nlc-mines/?feed_id=794

கடலூர் மாவட்டத்தில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்தின் பழுப்பு நிலக்கரி சுரங்க நடவடிக்கைகளால் ஒட்டுமொத்த மாவட்டமு.....

Siva wants to raise funds for his wife Priyadarshini to recover from Post delivery complications. Your donation can guid...
06/08/2022

Siva wants to raise funds for his wife Priyadarshini to recover from Post delivery complications. Your donation can guide them to reach their fund goals. Please help.

*Read More:* http://impactguru.com/s/1R6mkb

*Donate Here:* http://impactguru.com/s/hQZLXX

*NEFT / IMPS / RTGS*
(Transfers to this account number would be allowed from Banks in India only)
===========================
Account number: 2223330043769760
Account name: Priyadarshini s
IFSC code: RATN0VAAPIS
Bank Name: RBL Bank
===========================

-------------------------------------
*UPI Handle:*
assist.priyadars16@icici
*Pay via GooglePay / PhonePe / UPI (Android Only):* http://impactguru.com/s/uMzVMG
-------------------------------------
*Donations via ICICI UPI and RBL Bank Transfers are safe with ImpactGuru.*

*Indian tax benefits available*
Hi friends, Our friend Vikneshwaran - Sister-in-law admitted in hospital under treatment for Seizures since last 1 month. Till now they spend more than 20lakhs but she required around 60lakhs for her treatment. Friends this the time for all of us to gather and support for her life. Kindly donate as much you can to save a mother of 2 kids.

Siva s wants to raise funds for his wife Priyadarshini to recover from Post delivery complications. Your donation can guide them to reach their fund goals. Please help.

என்.எல்.சி.யில் 100% பணி இடங்களும் வடவர்களுக்கா?நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் பட்டதாரி பொறியாளர் பணியிடங்களுக்கு தமி...
05/08/2022

என்.எல்.சி.யில் 100% பணி இடங்களும் வடவர்களுக்கா?

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் பட்டதாரி பொறியாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாட்டு இளைஞர்களை திட்டமிட்டே தவிர்த்தது கண்டனத்திற்குரிய செயல் என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் நூறு விழுக்காடு பட்டதாரிப் பொறியாளர்கள் இடங்களுக்கும், தமிழ்நாட்டு இளைஞர்களைத் திட்டமிட்டே தவிர்த்து விட்டு, வட இந்திய பொறியாளர்களை மட்டுமே தேர்வு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரிய செயலாகும்.

அரை நூற்றாண்டுக்கு முன்னர் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்காக, அப்பகுதியின் 30 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது வாழ்வாதாரமாக விளங்கிய நிலங்களை வழங்கினர். அதன் அடிப்படையில் அப்பகுதி மக்களுக்கு என்.எல்.சி. நிறுவனத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டுவரை 80 விழுக்காடு பணி வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது. அதுவும் பெருமளவு ஒப்பந்தப் பணியாளர்களாக மட்டுமே தமிழர்களுக்கான வேலை வாய்ப்பை என்.எல்.சி. நிறுவனம் வழங்கி வந்தது. படிப்படியாக அதுவும் குறைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பட்டதாரிப் பொறியாளர்களுக்கான இடங்களை நிரப்ப, வடமாநிலங்களைச் சேர்ந்த 299 பேரை தேர்வு செய்து, ஆகஸ்ட் 1ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி தேர்வு நடைபெறும் என என்.எல்.சி. நிறுவனம் அறிவித்திருப்பது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் செயலாக உள்ளது. ஏற்கெனவே, தங்கள் சொந்த நிலங்களை என்.எல்.சி நிறுவனத்திற்காக தாரை வார்த்துவிட்டு, அதில் தங்கள் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பாவது கிடைக் காதா என்ற ஏக்கத்துடன் காத்திருக்கும் ஏழைக் குடும்பங் களுக்கு எத்தனை பெரிய பேரிடி இது?

என்.எல்.சி. நிறுவனத்தின் நிரந்தரப் பணியிடங்களில் 90 விழுக்காடு அளவு வட இந்தியர்களுக்கே வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 100 விழுக்காடு பணிவாய்ப்பும் வட இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கப்பட்டிருப்பது - பெரும் வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. என்.எல்.சி. நிறுவனத்தின் இந்த நடவடிக்கை, தமிழ் மண்ணுக் கும், மக்களுக்கும் திட்டமிட்டு துரோகம் இழைக்கும் கொடிய செயலாகும்.

இது கண்டனத்துக்குரியதாகும் என்று மக்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு அவர்கள் தம் அறிக்கையில் குறிப் பிட்டுள்ளார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அவர்களும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து ஒன்றிய அரசு தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது.

வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு குறித்து பல முறை தமிழ்நாடு தழுவிய அளவில் திராவிடர் கழகம் பிரச்சாரம் செய்ததுண்டு - போராட்டங்களையும் நடத்தியதுண்டு.

இரயில்வே துறையாக இருந்தாலும் சரி, அஞ்சல் துறையாக இருந்தாலும், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் போக்கு தொடர் கதையாகி விட்டது.

இந்த நிலை தொடருமேயானால், வேலை வாய்ப்பைத் தேடிக் காத்திருக்கும் இலட்சக்கணக்கான இளைஞர்கள் கொந்தளிக்கும் எரிமலையாக வெடித்துக் கிளம்புவார்கள் என்று எச்சரிக்கிறோம்.

அரியலூரில் கடந்த 30ஆம் தேதி நடத்தப்பட்ட திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் (எண் 9) இந்த நேரத்தில் நினைவூட்டி எச்சரிக்கிறோம்.

"தமிழ்நாட்டில் இயங்கும் ஒன்றிய அரசின் பொதுத் துறைகளின் வேலைவாய்ப்புகளில் சட்ட விரோதமாக வட மாநிலத்தவர்கள் பணி நியமனம் செய்யப்படுவதை கண் கூடாகப் பார்க்க முடிகிறது. வங்கிகளில் தமிழ் தேர்வு அவசியமில்லை என்பதும், வங்கிச் செயல்பாடுகளில் தமிழைத் தவிர்த்துவிட்டு முழுக்க முழுக்க இந்தி, ஆங்கிலம் என்னும் இருமொழிகளைக் கொண்டுவருவதற்கு அச்சாரமாக இந்தப் போக்கு இருப்பதையும் காண முடிகிறது. இந்த நிலை தொடர்வதைத் தடுத்து நிறுத்திட வேண்டும் என்பதுடன், தமிழ்நாடு அரசின் பணி வாய்ப்புகளிலும் சட்டத்தின் சந்து பொந்துகளைப் பயன்படுத்தி, வடநாட்டவர் ஆக்கிரமிப்புத் தொடர்வதை (எ.கா: பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள்) மிகுந்த இம்மாநாடு எச்சரிக்கையுடன் சுட்டிக் காட்டுகிறது. தமிழ்நாட்டு வேலைவாய்ப்பு தமிழர்களுக்கே வழங்கப் பட வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் முக்கியத்துவம் வாய்ந்த முன்னெடுப்பை விரைவுபடுத்திடவேண்டும் என்றும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது."

என்.எல்.சியின் புதிய சுரங்கம் மற்றும் அனல்மின் நிலையத் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கக் கூடாது: பூவுலகின் ந...
27/07/2022

என்.எல்.சியின் புதிய சுரங்கம் மற்றும் அனல்மின் நிலையத் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கக் கூடாது: பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை

விரிவாக வாசிக்க :- tinyurl.com/2cqa7v53

Minister of Tamil Nadu Chief Minister of Tamil Nadu

14/01/2022
NLCIL extends helping hand to Chennai Corporation to remove storm water from flooded streets and waterlogged suburbareas...
10/11/2021

NLCIL extends helping hand to Chennai Corporation to remove storm water from flooded streets and waterlogged suburb
areas

Address

Neyveli Lignite Corporation
Neyveli
607801

Alerts

Be the first to know and let us send you an email when Neyveli Township posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share