பாட்டாளி சமூக ஊடகப்பேரவை சேலம் மேற்கு மாவட்டம்

  • Home
  • India
  • Omalur
  • பாட்டாளி சமூக ஊடகப்பேரவை சேலம் மேற்கு மாவட்டம்

பாட்டாளி சமூக ஊடகப்பேரவை சேலம் மேற்கு மாவட்டம் Official Page Of PSMF Salem

🥹💛பாட்டாளி சமூக ஊடகப்பேரவை சேலம் மேற்கு மாவட்டம்
24/06/2026

🥹💛
பாட்டாளி சமூக ஊடகப்பேரவை சேலம் மேற்கு மாவட்டம்

பாமக நிறுவனர், தலைவர் மருத்துவர் அய்யா அவர்களின் தமிழர் திருநாளாம், பொங்கல் வாழ்த்து செய்தி!💙💛❤️
15/01/2026

பாமக நிறுவனர், தலைவர் மருத்துவர் அய்யா அவர்களின் தமிழர் திருநாளாம், பொங்கல் வாழ்த்து செய்தி!💙💛❤️

பா.ம.க. நிறுவனர், தலைவர் மருத்துவர் ச.இராமதாசு தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்து செய்தி

தமிழர்கள் கொண்டாடும் தமிழ்ப் பொங்கல் திருநாள், உலகத் தமிழர்கள் வாழ்வில் ஒளியேற்றட்டும்

பண்டைய தமிழரின் பண்பாட்டுத் திருவிழாவாம், பாரம்பரியம் போற்றும் மங்கலப் பெருவிழாவாம், தன்னிகரில்லா தனிப்பெரும் திருநாளாம் பொங்கல் திருநாளை புத்துணர்ச்சியோடு கொண்டாடும் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

"யாமறிந்த மொழிதனிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்றான் பாரதி. அந்த பாரதியின் கூற்றுக்கேற்ப தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் திருவிழாவானது "பழையன கழிதலும் புதியன புகுதலும்" என்ற போற்றுதலுக்குரிய முதுமொழிக்கு ஏற்ப "போக்கி பண்டிகையில் " கடந்த காலங்களில் நம்மில் ஏற்பட்ட எதிர்மறை சிந்தனைகள், எதிர்மறையான நிகழ்வுகள் அகல வேண்டி மாவிலை, வேப்பிலை, பூலாப்பூ, ஆவாரம்பூ இப்படி இலைகளாலும் பூக்களாலும் வாயில் தோரணம் கட்டி மக்களையும்; வயல்வெளியில் காப்பு சூடி மண்ணையும் காக்கின்ற மாண்புடை சிறந்த மார்கழியின் இறுதி நாள்.

தமிழர் போற்றும் தை முதல் நாளை ""தை பிறந்தால் வழி பிறக்கும்'" என்று பண்டைய தமிழர்கள் பறைசாற்றுவது எல்லோர் இல்லங்களிலும் இருளகன்று ஒளி பிறக்கும், புதிய விடியல் புது வாழ்வளிக்கும் என்பதற்கே... அந்நாளிலிருந்து புத்துணர்ச்சியோடு, புதிய சிந்தனையோடு, மாவிலையுடன் பச்சை மஞ்சளும் தித்திக்கும் செங்கரும்பும் வாயிலில் தோரணமாய் வளைத்துக் கட்டி, புத்தாடைகள் அணிந்து, புதுப் பானையில் புத்தரிசியிட்டு, இனிக்கும் வெல்லமதை இதமாய் சேர்த்து, பால் பொங்கி வருகையில் குடும்பமே குதூகலமாய் "பொங்கலோ பொங்கலெ"ன பூரித்து மகிழ்ந்து, கொண்டாடும் பொன்நாள்.

மூன்றாம் நாளோ; பொங்கல் திருநாளின் முத்தான முக்கியமான நாள்; உழவு செழிக்க, உணவு பெருக்க ஒவ்வொரு நாளும் உழைத்திடும் கால்நடைகளுக்கு நன்றி பாராட்டும் நற்றமிழ் விழா... மாடுகளைக் குளிப்பாட்டி, கொம்புகளை சீவி, வண்ணங்கள் பூசி, இலைகளாலும் மலர்களாலும் மாலைகள் அணிவித்து, வெண்பொங்கலுடன் வெள்ளமும் பழமும் கீரையும் படையிலிட்டு, உருண்டையாய் உருட்டி மாடுகளின் வாயில் உணவாய் அளித்து உவகை கொள்ளும் உன்னத திருநாள் நான்காம் நாளோ காணும் பொங்கல்;குடும்பத்தில், உறவில் மூத்தவர்களானவர்களின் ஆசிகளைப் பெற்று, உறவினர்கள் நண்பர்களிடம் வாழ்த்துகளை பகிர்ந்து, மகிந்து உறவை போற்றும் உற்சாகப் பெருநாள்

பிறந்த ஊரில் இருந்தாலும், பிரிந்து வேறோர் ஊரில் இருந்தாலும், அண்டை மாநிலத்தில் இருந்தாலும், அயலக நாடுகளில் இருந்தாலும் தமிழர்களின் பொங்கல் திருநாள் ஒவ்வொருவர் இல்லத்திலும் உள்ளத்திலும், ஒரு வார காலம் உற்சாகம் பொங்கி வழியும், உணர்ச்சிகள் ததும்பி வழியும்.

சாதி மதம் கடந்து, ஊர் நாடு எல்லை கடந்து உலகத் தமிழர்கள் ஓரணியில் திரண்டு உற்சாகமாய் கொண்டாடும் இந்த ஒற்றுமை பெருவிழா, பானையில் பொங்கல் பொங்குவதைப் போல தமிழர்கள் வாழ்வில் வளங்களும் நலங்களும் பொங்கட்டும், கரும்பும் சர்க்கரை பொங்கலும் தரும் இனிப்பைப் போல, தமிழர்கள் வாழ்வும் இனிக்கட்டும். அன்பும், ஆனந்தமும் பெருகட்டும், பொங்கலோ பொங்கலென என் இனிய பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தைலாபுரம் தோட்டத்தில் பொங்கல் கொண்டாடிய மருத்துவர் அய்யா அவர்கள்!
14/01/2026

தைலாபுரம் தோட்டத்தில் பொங்கல் கொண்டாடிய மருத்துவர் அய்யா அவர்கள்!

09/01/2026
அணைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!❤️🙏🏻பாட்டாளி சமூக ஊடகப்பேரவை சேலம் மேற்கு மாவட்டம்
31/12/2025

அணைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!❤️🙏🏻

பாட்டாளி சமூக ஊடகப்பேரவை சேலம் மேற்கு மாவட்டம்

 #பாட்டாளி_சமூக_ஊடகப்பேரவை கண்டன அறிக்கை​ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று, 25 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சித் ...
29/12/2025

#பாட்டாளி_சமூக_ஊடகப்பேரவை கண்டன அறிக்கை

​ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று, 25 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சித் தலைவராக மக்கள் செல்வாக்கை நிரூபித்த கௌரவத் தலைவர் #ஜி_கே_மணி அவர்களின் அரசியல் ஆளுமையோடு, ஒரு தேர்தலில் கூட வெற்றி பெறாத வழக்கறிஞர் #பாலு தன்னை ஒப்பிடுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அரை நூற்றாண்டு கால அனுபவம் கொண்ட மூத்த தலைவரின் உழைப்பைச் சிறுமைப்படுத்தும் வகையில் பாலுவின் செயல்பாடுகள் அமைவது அவரது அரசியல் முதிர்ச்சியின்மையையே வெளிப்படுத்துகிறது.

​2016, 2021 மற்றும் 2024 எனத் தான் சந்தித்த மூன்று தேர்தல்களிலும் தொடர் தோல்விகளைச் சந்தித்த வழக்கறிஞர் பாலு, #பென்னாகரம் மற்றும் #மேட்டூர் மக்களின் பேராதரவைப் பெற்று ஐந்து முறை சட்டமன்றம் சென்ற மாபெரும் மக்கள் தலைவருடன் தன்னைச் சமமாகப் பாவிப்பது வேடிக்கையானது. சூரியனுக்கு முன் மெழுகுவர்த்தி தன்னை ஒளியாகக் காட்டுவது போல, தேர்தல் களத்தில் இன்னும் ஆரம்பப் பாடத்தைக் கூடக் கற்றுத் தேராத ஒருவர், அரசியலில் கரைகண்ட கைதேர்ந்த தலைவரோடு மோதுவது அறியாமையின் உச்சமாகும்.

​எனவே, மக்கள் செல்வாக்கு இல்லாத நபர்கள் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ள மூத்த தலைவர்களைக் கேலி செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அரசியலில் பல தசாப்த கால தியாக வரலாற்றைக் கொண்ட ஜி.கே. மணி அவர்களுடன், தோல்விகளையே வரலாறாகக் கொண்ட பாலுவை ஒப்பிடுவது மிகப் பெரிய அரசியல் பிழை என்பதை பாட்டாளி சமூக ஊடகப் பேரவை சார்பில் எச்சரிக்கிறோம்.

பாட்டாளி சமூக ஊடகப்பேரவை சேலம் மேற்கு மாவட்டம்

29/12/2025

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில செயற்குழு பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தந்தார் மருத்துவர் அய்யா🇷🇴❤️

அணைவரும் வருக வருக!🙏🏻🙏🏻🙏🏻
29/12/2025

அணைவரும் வருக வருக!🙏🏻🙏🏻🙏🏻

பாமக நிறுவனர்,தலைவர் மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையில் சேலத்தில் நடைபெற உள்ள புத்தாண்டு செயற்குழு மற்றும் பொதுக்குழு இல...
23/12/2025

பாமக நிறுவனர்,தலைவர் மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையில் சேலத்தில் நடைபெற உள்ள புத்தாண்டு செயற்குழு மற்றும் பொதுக்குழு இலட்சணையை (லோகோ) இன்று கௌரவ தலைவர் ஜிகே. மணி அவர்கள் இன்று விழுப்புரத்தில் பத்திரிக்கையாளர்கள் முன்பு வெளியிட்டார் ...

Address

Omalur
636455

Website

Alerts

Be the first to know and let us send you an email when பாட்டாளி சமூக ஊடகப்பேரவை சேலம் மேற்கு மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share