22/08/2026
கடந்த ஆகஸ்ட் 21, 2026 அன்று கடலூர் மாவட்டம், பரிக்கல்பட்டு அருகே உள்ள மாரியம்மன் கோவில் வீதியில், புதிதாக வீடு கட்டுவதற்காகத் தோண்டப்பட்ட மதில் சுவர் குழிக்குள் (வங்குக்குள்) வழிதவறித் தஞ்சம் புகுந்த சாரைப்பாம்பை RatSnake எங்களது Wildlife & Nature Conservation Trust (WNCT) மீட்புக் குழுவினர் Kiruba Karan பத்திரமாக மீட்டனர்.
⚠️ #விழிப்புணர்வுக்_குறிப்பு:
கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் தோண்டப்படும் குழிகள், மணல்/கல் குவியல்களில் பாம்புகள் தஞ்சம் புக அதிக வாய்ப்புள்ளது.
அப்பகுதிகளில் பணிபுரியும் போதும் நடமாடும் போதும் கவனமாக இருப்பது நல்லது.
சாரைப்பாம்புகள் நச்சுத்தன்மையற்றவை; மனிதர்களுக்கு ஆபத்தில்லாத உழவனின் நண்பன்!
வன உயிரினங்களைப் பாதுகாப்போம்! 🌿