28/07/2026
பாண்டிய மண்டலத்திலுள்ள பதினாலு தன்னரசு கள்ளர் நாடுகளில் ஒன்று
தன்னரசு ஆறூர் வட்டகை நாடு.
இந்நாடு தெற்கே பனங்குடி நாட்டையும் வடக்கே மயில்ராயன்கோட்டை என்ற
மல்லாக்கோட்டை நாட்டையும் கிழக்கே பாகனேரி வாள்கோட்டை நாட்டையும்
மேற்கே வெள்ளலூர் மற்றும் நாலூர் நாட்டையும் எல்லைகளாக கொண்டுள்ளது.
இது 22 ½ கிராமங்களை உள்ளடக்கியது. நாலுகோட்டை இந்நாட்டின் தலைமை
கிராமம் ஆகும். இது இன்றைய சிவகங்கை தாலுகாவில் அமைந்துள்ளது.
சங்ககாலச் சோழ மன்னன் நியமிச் சக்கரவர்த்தி மனுநீதி சோழனின் வழிவந்த
மன்னன் "நன்னியன்" என்றழைக்கப்பட்டான். இவன் நன்னிலம் என்ற ஊரை
தலைநகரமாகக்கொண்டு ஆட்சி புரிந்தான். இவனது மரபில் வந்தவர்கள்
நன்னி,நயினியன் ஆகிய பட்டங்களை சூடிக்கொண்டனர் அவர்களது மரபில்
வந்தவர் தான் தன்னரசு ஆறூர் வட்டகை நாட்டு அம்பலக்காரர் மாவீரர் நன்னி அம்பலம்.
இவர் கி.பி 1780இல் ஆர்க்காட்டு நவாபை எதிர்த்து வீரமங்கை வேலு நாச்சியார்
தலைமையில்நடத்தப்பட்ட சிவகங்கை மீட்புப் போரில் திருப்பத்தூர் படைக்கு
தலைமை தாங்கி வாகை சூடியவர்.
பின்னர் கி.பி 1801ஒக்கூரில் மருதுபாண்டியர்களுக்கு ஆதவாக
போரில் 4,000 பேர் கொண்ட படைக்கு நன்னி அம்பலம் தலைமை தாங்கி,
கர்னல் அக்னியூ தலைமையிலான ஆங்கிலப் படையை வேல் வளரி வாளைக்கொண்டு
இரவு பகலாக வீரப்போர் புரிந்து எதிரிகள் பீரங்கிகள் மற்றும் ஆயுதங்களை
போட்டுவிட்டு புறமுதுகிட்டு ஓடும்படி செய்தார் என்றும் அப்போரில்
ஆங்கிலேயர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்றும் , ஒரே
இரவில் ஆயிரக்கணக்கானவர்களை திரட்டி போரிடும் வல்லமை பெற்றவர்
நன்னிஅம்பலம் எனவும் சிவகங்கை சரித்திர கும்மி சிவகங்கை நகர் கும்மி
குறிப்பிடுகிறது,
மீண்டும் கர்னல் அக்னியூ மற்றும் கர்னல் இன்ஸ் தலைமையிலான 12
வெண்கல பீரங்கிகளை கொண்ட பெரும்படையுடன் சோழபுரம் ,பூங்குடி
கண்மாய், மாவேலி கண்மாய் மதகுபட்டி ஒக்கூர் ஆகிய இடங்களில்
நன்னி அம்பலம் தனது படையினரும் எதிர்த்துப் போரிட்டார். இப்போரில்
கர்னல் அக்னிவும் நன்னி அம்பலமும் மோதியது "சுப்பிரமணியனும் சூரபத்மனும்"
போரிட்டது போன்றிருந்து என்றும், குண்டுகள் வண்டுகள் போல பறந்தது என்றும்
குறிப்பிடப்பட்டுள்ளது.
இறுதியில் 28.7.1801 அன்று காலை முதல் மாலை வரை நடைபெற்ற போரில்
பல்லாயிரக்கணக்கான விடுதலை வீரர்கள் ஒக்கூர் பகுதியில் கொல்லப்பட்டனர்.
ஆங்கிலேயர்களுக்கு போரில் பேரிழப்பை ஏற்படுத்திய காரணத்தினால் கடும்
கோபமடைந்த கர்னல் அக்னியூ ஒக்கூரை அன்றே தீயிட்டு கொளுத்தினான்
இம் மண்ணின் விடுதலைக்காக இத்தகைய தியாகங்களைச் செய்த
மறைக்கப்பட்ட மாவீரன் நன்னி அம்பலத்தை போற்றி வணங்கிடுவோம்.
ராக்கெட்_தாக்குதல்_ நடத்திஆறூர் வட்டகை நாட்டார்கள்
சிவகங்கை அரசுத் தலைவர் சின்ன மருதுபாண்டியரால் முன்னிறுத்தப்பட்ட தென்னிந்திய புரட்சி என்பது வரலாற்றில் தவிர்க்க முடியாத இரத்த சரித்திதம், அச்சரித்திரத்தில் மன்னர் மருதுபாண்டியர்களுக்கு 23 கள்ளர் நாடுகள் ஆதரவு தெரிவித்து 2ஆயுத தொழிற்சாலை கட்டி போரிட்டனர்.
அதில் திருப்பத்தூர் பகுதியின் ஆறூர்வட்டகை நாட்டின் தலைமை அம்பலகாரரான “மாவீரன் நன்னி அம்பலம்” அவர்களின் தலைமையிலான படையானது, “Operation Sivagangaa”வின் தலைமை அதிகாரியான கர்னல் அக்னியூவின் நேரடி தாக்குதலை எதிர்த்து நின்று களமாடியது.
இதனை வரலாற்று ஆய்வாளர்கள் “War of Okkur” என தனித்த போராக குறிப்பிடுகிறார்கள்.
ஒக்கூர் என்பது ஆறூர் வட்டகை நாட்டின் தலைமை கிராமம் ஆகும். இந்த ஓக்கூரில் கிபி1801 சூலை 26ஆம் தேதி கர்னல் அக்னியூவின் அதி நவீன மற்றும் இன்ஃபேண்டரி படையை எதிர்கொள்ள ராக்கெட் வீசி தாக்குயுள்ளனர்.
3 நாட்கள் நடந்த இந்த தொடர் யுத்தத்தில் “ஆயிரக்கணக்கான நாட்டார்கள் வீழ்த்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டனர்
ஒக்கூரை வீழ்த்திய பின்பே மருதிருவர்களின் தலைமை இராணுவ படைப்பற்றான “சிறுவயல் பற்று” கர்னல் அக்னியூவால் கிபி 1801 சூலை 30 கைப்பற்றப்பட்டது.
ராக்கெட் டெக்னாலஜியை முதன் முதலாக கிபி1755 மே 29ல் “ நத்தம் கணவாய் தாக்குதலில்” மத்தம் மேல் நாட்டு கள்ளர்கள் பயன்படுத்திய குறிப்பிற்கு பின்பு 1801ல் ஆறூர் வட்டகை நாடு பயன்படுத்திய குறிப்புகள் கிடைக்கப்பெற்றதில், தன்னரசு கள்ளர் நாடுகள் இராக்கெட் பயன்பாட்டை பயன்படுத்தியுள்ளது இங்கே உறுதிபடுகிறது.
மன்னர் மருதுபாண்டியர்களுக்காக உதிரம் சிந்திய பல்லாயிரம் கள்ளர் நாட்டார்களை என்றும் நினைவில் போற்றுவோம்.
தமிழ்நாடு கள்ளர் படைப்பற்று நலச்சங்கம். 🔰