DIG TIN RANGE

DIG TIN RANGE DR.R.THIRUNAVUKARASU, I.P.S., Official page -Office of the Deputy Inspector General of Police, Tirunelveli Range.

வ.உ.சி. 154-வது பிறந்த நாள் விழா – பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருநெல்வேலி சரக டிஐஜி ஆய்வுதிருநெல்வேலி சரக டிஐஜி முன...
04/09/2026

வ.உ.சி. 154-வது பிறந்த நாள் விழா – பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருநெல்வேலி சரக டிஐஜி ஆய்வு

திருநெல்வேலி சரக டிஐஜி முனைவர் இரா. திருநாவுக்கரசு, இ.கா.ப., அவர்கள், சுதந்திரப் போராட்டத் தியாகியும், கப்பலோட்டிய தமிழனுமான வ.உ. சிதம்பரனார் அவர்களின் 154-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, இன்று (04.09.2026) காலை தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரத்தில் அமைந்துள்ள வ.உ.சி. நினைவிடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, உடனிருந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. ஆறுமுகம், காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு. கண்ணன் மற்றும் ஓட்டப்பிடாரம் காவல் ஆய்வாளர் திரு. கார்த்திக் ஆகியோருக்கு, பிறந்த நாள் விழாவின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துதல், போக்குவரத்தைச் சீர்செய்து ஒழுங்குபடுத்துதல், வாகன நிறுத்துமிடங்களை முறையாக நிர்வகித்தல் மற்றும் முக்கிய இடங்களில் காவலர்களைத் தகுந்த முறையில் பணியமர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேவையான ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கினார்.
#திருநெல்வேலிசரகம்

பணி மாறுதலாகியுள்ள தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெகநாதன் அவர்களும், தூத்துக்குடி...
02/09/2026

பணி மாறுதலாகியுள்ள தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெகநாதன் அவர்களும், தூத்துக்குடி ஊரக உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. சுதீர் அவர்களும் இன்று (02.09.2026) மாலை திருநெல்வேலி சரக அலுவலகத்தில் காவல்துறை துணைத் தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு, இ.கா.ப., அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தனர். இருவருக்கும் டி.ஐ.ஜி. அவர்கள் புத்தகப் பரிசு வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

திருநெல்வேலி சரக காவல்துறைதென்காசி மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட POCSO வழக்கில் தொடர்புடை...
02/09/2026

திருநெல்வேலி சரக காவல்துறை

தென்காசி மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட POCSO வழக்கில் தொடர்புடைய எதிரியை கைது செய்ய உறுதுணையாக இருந்த சிங்கப்பெண் படையைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் தி. செந்தில்ராணி, தலைமைக் காவலர் ப. பானுமதி மற்றும் காவலர் செ. சுகந்தினி ஆகியோரை இன்று (02.09.2026), திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு, இ.கா.ப., அவர்கள் சரக அலுவலகத்திற்கு நேரில் அழைத்து, அவர்களின் சிறப்பான பணியைப் பாராட்டி, பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.

#திருநெல்வேலிகாவல்சரகம்

திருநெல்வேலி சரகம்இன்று (02.09.2026) புதன்கிழமை, திருநெல்வேலி சரக அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமி...
02/09/2026

திருநெல்வேலி சரகம்

இன்று (02.09.2026) புதன்கிழமை, திருநெல்வேலி சரக அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில், காவல்துறை துணைத் தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு, இ.கா.ப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து மனுக்களை நேரடியாகப் பெற்றுக் கொண்டு, அவற்றின் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

திருநெல்வேலி சரகத்திற்குட்பட்ட திருநெல்வேலி, தென்காசி,தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்களில் மொத்தம் 334 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 10 மனுக்கள் மீது பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு உடனடியாக முதல் தகவல் அறிக்கைகள் (FIR) பதிவு செய்யப்பட்டன. எஞ்சிய 324 மனுக்கள் மீது துரித விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

#திருநெல்வேலிகாவல்சரகம்

 # # # 🚨 பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வுதிருநெல்வேலி சரக டிஐஜி **முனைவர் இரா. திருநாவுக்கரசு, இ.கா.ப.,** அவர்கள் இன...
01/09/2026

# # # 🚨 பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு

திருநெல்வேலி சரக டிஐஜி **முனைவர் இரா. திருநாவுக்கரசு, இ.கா.ப.,** அவர்கள் இன்று தென்காசி மாவட்டம், **நெற்கட்டும்செவலில் நடைபெற்ற மாமன்னன் பூலித்தேவனின் 311-வது பிறந்த நாள் விழாவில்** மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துதல், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், வாகன நிறுத்துமிடங்களை முறையாக நிர்வகித்தல் மற்றும் முக்கிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காவல் அதிகாரிகளுக்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை நேரில் வழங்கினார்கள்.

#திருநெல்வேலி_காவல்_சரகம் #திருநெல்வேலி_சரக_டிஐஜி #முனைவர்_இரா_திருநாவுக்கரசு #பூலித்தேவன் #பூலித்தேவன்311 #நெற்கட்டும்செவல் #தென்காசி #பாதுகாப்பு_ஏற்பாடுகள் #காவல்துறை

🛡️ மாமன்னன் பூலித்தேவனின் 311-வது பிறந்தநாள் – பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம்திருநெல்வேலி சரக டிஐஜி முனைவர...
01/09/2026

🛡️ மாமன்னன் பூலித்தேவனின் 311-வது பிறந்தநாள் – பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

திருநெல்வேலி சரக டிஐஜி முனைவர் இரா. திருநாவுக்கரசு, இ.கா.ப., அவர்கள் தலைமையில், மாமன்னன் பூலித்தேவனின் 311-வது பிறந்தநாள் (01.09.2026) முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று (31.08.2026) மாலை தென்காசி மாவட்டம், புளியங்குடியில் உள்ள வீராசாமி செட்டியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அசோக்குமார் அவர்கள், திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) திரு. ரமேஷ் பாபு அவர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துதல், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், வாகன நிறுத்துமிடங்களை முறையாக நிர்வகித்தல் மற்றும் முக்கிய இடங்களில் காவலர்களைத் தகுந்த முறையில் பணியமர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காவல் அதிகாரிகளுக்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.

🎓 தமிழ்நாடு காவல்துறையின் Centenary Scholarship – 2024–25தமிழ்நாடு காவல்துறையின் Centenary Scholarship – 2024–25 திட்டத்...
31/08/2026

🎓 தமிழ்நாடு காவல்துறையின் Centenary Scholarship – 2024–25

தமிழ்நாடு காவல்துறையின் Centenary Scholarship – 2024–25 திட்டத்தின் கீழ், ரூ.13,000/- கல்வி உதவித்தொகை, திருநெல்வேலி சரக காவல் அலுவலகத்தில் பணிபுரியும் கண்காணிப்பாளர் திரு.வி.செல்வராஜ் அவர்களின் மகள் செல்வி.செ.ராகவியா, B.A. படித்து வருவதற்காக வழங்கப்பட்டது.

மேற்கண்ட கல்வி உதவித்தொகைத் தொகையை, இன்று 31.08.2026, திருநெல்வேலி சரக அலுவலகத்தில் வைத்து, திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் முனைவர் இரா.திருநாவுக்கரசு, இ.கா.ப., அவர்கள், அவரது தந்தை கண்காணிப்பாளர் திரு.வி.செல்வராஜ் மற்றும் செல்வி.செ.ராகவியா ஆகியோரிடம் வழங்கினார்.

#திருநெல்வேலி_காவல்_சரகம்




போதைப்பொருள் தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு திருநெல்வேலி சரக டிஐஜி முனைவர் இரா. திருநாவுக்கரசு, இ.கா....
30/08/2026

போதைப்பொருள் தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு திருநெல்வேலி சரக டிஐஜி முனைவர் இரா. திருநாவுக்கரசு, இ.கா.ப., அவர்கள் பாராட்டு

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போதைப்பொருள் தொடர்பான வழக்கில், சிறப்பாக செயல்பட்டு 2 குற்றவாளிகளை விரைந்து கைது செய்து, மொத்தம் 9.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. ச. ராஜா, தலைமைக் காவலர்கள் திரு. மு. ஐயப்பன், திரு. ச. சரவணசேகர், திரு. ம. தினேஷ் கார்த்திக் மற்றும் திரு. ரா. செல்வகுமரேசன் ஆகியோரை இன்று (30.08.2026) காலை, திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவரும், திருநெல்வேலி மாநகர பொறுப்பு காவல் ஆணையருமான முனைவர் இரா. திருநாவுக்கரசு, இ.கா.ப., அவர்கள் மாநகர காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து, அவர்களின் சிறப்பான பணியைப் பாராட்டி, பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஊருடையார்புரம் பகுதியில், 27.08.2026 அன்று வியாழக்கிழமை இர...
29/08/2026

திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஊருடையார்புரம் பகுதியில், 27.08.2026 அன்று வியாழக்கிழமை இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

இந்நிலையில், சம்பவம் நடைபெற்ற இடத்தை நேற்று (28.08.2026), திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவரும், திருநெல்வேலி மாநகர பொறுப்பு காவல் ஆணையருமான முனைவர் இரா. திருநாவுக்கரசு, இ.கா.ப., அவர்கள் இரவு ரோந்தின்போது நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து, அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினார்.

திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஊருடையார்புரம் பகுதியில் நேற்று இரவு பெட்ரோல் குண்டு வீசப்...
28/08/2026

திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஊருடையார்புரம் பகுதியில் நேற்று இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, இன்று (28.08.2026) மதியம், அந்த கிராம மக்கள் திருநெல்வேலி மாநகர காவல் அலுவலகத்தில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவரும், பொறுப்பு காவல் ஆணையருமான திருநெல்வேலி மாநகரம், முனைவர் இரா. திருநாவுக்கரசு, இ.கா.ப., அவர்களை நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.

Address

NO, 4 ST. THOMAS Road, MAHARAJA NAGAR POST, TIRUNELVELI
Palayamkottai
627011

Opening Hours

Monday 10am - 6am
Tuesday 10am - 6am
Wednesday 10am - 6am
Thursday 10am - 6am
Friday 10am - 6am
Saturday 10am - 6am
Sunday 10am - 6am

Website

Alerts

Be the first to know and let us send you an email when DIG TIN RANGE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share