Pattukkottai is an urban town in Thanjavur district, Chola Nadu region, in the Indian state of Tamil Nadu. Pattukkottai is the 3rd largest town in the Thanjavur district and is located in the southern part of the district. It is a peaceful town situated in the Cauvery delta and comes under the Tropical Dry Evergreen Forest [1] region. It receives maximum rainfall during winter months as it lies al
ong the Coromandel Coast of South India.
பட்டுக்கோட்டை இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.
இவ்வூரின் அமைவிடம் 10.43° N 79.32° E ஆகும்.[7] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 5 மீட்டர் (16 அடி) உயரத்தில் இருக்கின்றது.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 65,453 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[8] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பட்டுக்கோட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பட்டுக்கோட்டை மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
பட்டுக்கோட்டை அருகேயுள்ள மனோரா எனும் சுற்றுலாத்தளம் உள்ளது மேலும் இங்குள்ள அருள்மிகு நாடியம்மன் கோவில் ,முத்துபேட்டை தர்க்கா, வீரக்குரிச்சி அந்தோனியார் ஆலயம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.