நம்ம பட்டுக்கோட்டை - Namma Pattukkottai

நம்ம பட்டுக்கோட்டை - Namma Pattukkottai நம்ம பட்டுக்கோட்டையின் அழகான புகைப்படங்கள் மற்றும் செய்திகளை அறிய பேஜ்யை like செய்யவும்.

02/09/2026

🤩 பட்டுக்கோட்டை காரைக்குடி மின்சார ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம்⚡ அனைத்து பணிகளும் நிறைவடைந்து தற்போது மின்சார எஞ்சின் மூலம் சோதனை ஓட்டம் இந்த ரயில் வழித்தடத்தில் துவங்கியுள்ளது. இன்று எஞ்சின் மட்டும் சோதனை ஓட்டம் இரவில் பட்டுக்கோட்டையில் துவங்கி காரைக்குடி வரை செல்ல இருக்கிறது !! மொத்த வழித்தடம் சுமார் 72 கிலோமீட்டர் தூரம் ஆகும் ‼️

பட்டுக்கோட்டை ரயில் உபயோகிப்போர் சங்கம்.

பட்டுக்கோட்டையில் உங்க ஃபேவரிட் பிரியாணி கடை எது...?? கமெண்ட் பண்ணுங்க...
30/08/2026

பட்டுக்கோட்டையில் உங்க ஃபேவரிட் பிரியாணி கடை எது...??

கமெண்ட் பண்ணுங்க...

பட்டுக்கோட்டை, அறந்தாங்கி வழியாக மதுரை, சென்னை, திருச்சிக்கு புதிய ரயில்களை இயக்க வேண்டும். ரயில் பயணிகள் சங்கங்கள் கூட்...
29/08/2026

பட்டுக்கோட்டை, அறந்தாங்கி வழியாக மதுரை, சென்னை, திருச்சிக்கு புதிய ரயில்களை இயக்க வேண்டும். ரயில் பயணிகள் சங்கங்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

அறந்தாங்கி கோட்ட ரயில் உபயோகிப்போர் சங்கத்தின் ஏற்பாட்டில் அறந்தாங்கியில் இன்று 29.08.2026 சனிக்கிழமை காலை ரயில் பயணிகள் சங்கங்களின் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அறந்தாங்கி கோட்ட ரயில் உபயோகிப்போர் சங்கத்தின் தலைவர் ஏ .பி. ராஜகுமார் தலைமை வகித்தார்.
காரைக்குடி தொழில் வணிக கழகத்தின் முதன்மை ஆலோசகர் சாமி .திராவிட மணி முன்னிலை வகித்தார்.

பட்டுக்கோட்டை ரயில் உபயோகிப்போர் சங்கத்தின் தலைவர் வ.விவேகானந்தம் வரவேற்புரை ஆற்றினார். கூட்டத்தில் மதுரை கோட்ட ரயில் உபயோகிப்போர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஏ .ஆழ்வார்ராஜா ரயில் தேவைகள், ரயில்வே துறை பணிகள் பற்றி சிறப்புரை ஆற்றினார்.

காரைக்குடி வட்ட ரயில் பயணிகள் நல சங்கத்தின் தலைவர் வி.ஆர் .ராமநாதன், காரைக்குடி தொழில் வணிக கழகத்தின் தலைவர் எஸ். கண்ணப்பன் செயலாளர் கே .என். சரவணன், பேராவூரணி ரயில் பயணிகள் நல சங்கத்தின் செயலாளர் ஆர் .பி. ராஜேந்திரன் பொருளாளர் எஸ். நாகராஜன், பட்டுக்கோட்டை ரயில் பொது நல சங்கத்தின் கௌரவ தலைவர் வழக்கறிஞர்
கே.விவேகானந்தன் பொருளாளர் ஆர். ரவிச்சந்திரன் நிர்வாக குழு உறுப்பினர் எம். செந்தில் குமார் பட்டுக்கோட்டை ரயில் உபயோகிப்போர் சங்கத்தின் செயலாளர் கு.முகேஷ், துணைத் தலைவர் வே. ராமலிங்கம்
அதிராம்பட்டினம் ரயில் பயணிகள் சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர்கள் எஸ்.எம்.ஏ சாகுல் ஹமீது,எஃப்.பாரூக் அப்துல்லா, தில்லை விளாகம் ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் ஜே தாகீர், நிர்வாக குழு உறுப்பினர்கள் தனுஷ்பாண்டியன், எம் .சாகுல் ஹமீது ஆகியோர் கலந்து கொண்டு ரயில் கோரிக்கைகள் பற்றி பேசினார்கள்.

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

காரைக்குடியில் இருந்து அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருவாரூர் , மயிலாடுதுறை வழியாக தாம்பரத்திற்கு தினசரி ரயில்களை இரு முனைகளில் இருந்தும் இயக்க வேண்டும்.

மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, மானாமதுரை, சிவகங்கை வழியாக மதுரைக்கு தினசரி பயணிகள் ரயில்களை இருமுனைகளில் இருந்தும் இயக்க வேண்டும்.

திருவாரூர், திருத்துறைப்பூண்டி, தில்லைவிளாகம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, புதுக்கோட்டை, வழியாக திருச்சிக்கு இரு முனைகளில் இருந்து தினசரி பயணிகள் ரயில்களை இயக்க வேண்டும். போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ரயில் பயணிகள் சங்கங்களின் நிர்வாகிகள் விரைவில் மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றித்தர தெற்கு ரயில்வே பொது மேலாளர், தலைமை பயணிகள் போக்குவரத்து மேலாளர் ,திருச்சி, மதுரை கோட்ட ரயில்வே மேலாளர்கள் ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்கள் அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் நிறைவாக பேராவூரணி ரயில் பயணிகள் நல சங்கத்தின் தலைவர் கே. எஸ். கௌதமன் நன்றியுரை ஆற்றினார்.

Murasoli Thanjai District Collector, Thanjavur Ministry of Railways, Government of India Southern Railway

 #பகுத்தறிவாளர் பட்டுக்கோட்டை டேவிஸ்.பட்டுக்கோட்டை பகுதி பல புரட்சிகர தலைவர்களை சந்தித்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது . ...
28/08/2026

#பகுத்தறிவாளர் பட்டுக்கோட்டை டேவிஸ்.

பட்டுக்கோட்டை பகுதி பல புரட்சிகர தலைவர்களை சந்தித்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது . அந்த வகையில் தந்தை பெரியாரின் போர்ப்படை தளபதியாகவும், அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி அவர்களின் தோழராகவும், மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் ஆசிரியராகவும் திகழ்ந்தவராகவும் தமிழ் , ஆங்கிலம் இரண்டிலும் புலமைமிக்கவராகவும் விளங்கியவர் அய்யா பகுத்தறிவாளர் பட்டுக்கோட்டை டேவிஸ் அவர்கள். இவர் பட்டுக்கோட்டை அருகே உள்ள அணைக்காடு என்ற ஊரைச்சேர்ந்தவர் , அணைக்காட்டினை சேர்ந்த செல்வந்தர் குடும்பத்தை சேர்ந்த டேவிஸ் (B.A.LT, B .O. L) அவர்கள் கிபி 1904 ஆம் ஆண்டு பிறந்து பட்டுக்கோட்டையில் தொடக்க கல்வியை முடித்து உயர்கல்வியை திருச்சி பிஷப் ஹீப்பர் கல்லூரியில் பயின்று அங்கேயே பேராசிரியராக பணிபுரிந்தார், தந்தை பெரியாருடன் நெருங்கிய நட்பு கொண்ட இவர் அவரின் தளபதியாகவும் விளங்கினார், தமிழர்கள் யாரும் கல்வி கற்றுவிட கூடாது என்ற குறிக்கோளுடன் இராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வி திட்டத்தை கடுமையாக எதிர்த்து போராடினார், தன் சொந்த ஊரான அணைக்காட்டில் தந்தை பெரியாரின் தலைமையில் சுயமரியாதை மாநாட்டினை வெற்றிக்கரமாக நடத்தினார், அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று கேட்ட அக்காலத்திலேயே கல்வியறிவு பெற்ற பெண்ணான திருமதி வேதமணி என்பவரை மணந்து கொண்டார், திருமதி வேதமணி டேவிஸ் அவர்கள் பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியாக பணிபுரிந்தார் . டேவிஸ் அவர்கள் தான் மட்டும் போராட்டத்தில் ஈடுபடாமல் தனது மனைவி மற்றும் மகன் எடிபர்பேங் அவர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தை பெரியார் , அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் , நடிகவேள் எம் .ஆர் .ராதா,ஈ.வெ.கி சம்பத், மூப்பனார் , தமிழறிஞர் வேங்கட சாமி நாட்டார் இவர்களுடன் நெருங்கி பழகியவர் பட்டுக்கோட்டை டேவிஸ் அவர்கள். தமிழ்த்திரையுலகில் சிறந்த இயக்குநராக போற்றப்படும் உதிரிபூக்கள், முள்ளும் மலரும் இயக்குநர் திரு மகேந்திரன்
டேவிஸ் அய்யாஅவர்களின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. பகுத்தறிவாளர் பட்டுக்கோட்டை டேவிஸ் அய்யா அவர்களைப்பற்றி மேலும் அறிந்துகொள்ள உதவிய அவர்களின் பேரன் Jones Eddy அண்ணன் அவர்களுக்கும் சகோதரி ஹெலன் எட்வர்ட் அவர்களுக்கும் நன்றி.

Copy. Martinsam Nepoleon

புகைப்படங்கள் AI தொழில்நுட்பத்தில் புதுமை செய்யப்பட்டுள்ளது.

26/08/2026

திருவாரூர் மாவட்டம், ​திருத்துறைப்பூண்டியில் மாபெரும் தேசிய நெல் திருவிழா!

​ | | #பட்டுக்கோட்டை #நம்ம_பட்டுக்கோட்டை.
Namma_pattukottai.

திருவாரூர் மாவட்டம், ​திருத்துறைப்பூண்டியில் மாபெரும் தேசிய நெல் திருவிழா!​  |   |  #பட்டுக்கோட்டை  #நம்ம_பட்டுக்கோட்டை....
26/08/2026

திருவாரூர் மாவட்டம், ​திருத்துறைப்பூண்டியில் மாபெரும் தேசிய நெல் திருவிழா!

​ | | #பட்டுக்கோட்டை #நம்ம_பட்டுக்கோட்டை.
Namma_pattukottai.

இந்தியா முழுவதும் 103 பாரம்பரிய ரயில் நிலையங்களில் ரயில் நிலைய திருவிழா( ரயில் மகோத்சவம்)  கொண்டாடப்படவுள்ளது.தமிழகத்தில...
26/08/2026

இந்தியா முழுவதும் 103 பாரம்பரிய ரயில் நிலையங்களில் ரயில் நிலைய திருவிழா( ரயில் மகோத்சவம்) கொண்டாடப்படவுள்ளது.

தமிழகத்தில் ,திருச்சி, திருவண்ணாமலை, சிதம்பரம் , பட்டுக்கோட்டை உட்பட நாடு முழுவதும் 103 பாரம்பரிய ரயில் நிலையங்களில் நிலைய திருவிழாவை நடத்த ரயில்வே வாரியம் பரிந்துரைத்துள்ளது.

இந்த ரயில் நிலையங்களில் அவை தொடங்கப்பட்ட நாளை அடிப்படையாகக் கொண்டு நிலைய மகோத்சவம் நடத்தப்பட உள்ளது. திருச்சி ரயில் சந்திப்பு 1862 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது சிதம்பரம் ரயில் நிலையம் 1878 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது திருவண்ணாமலை ரயில் நிலையம் 1890 ஆம் ஆண்டிலும் பட்டுக்கோட்டை 1902 ஆம் ஆண்டிலும் திருவனந்தபுரம் 1931 ஆம் ஆண்டிலும் தொடங்கப்பட்டது.

தெற்கு ரயில்வே மண்டலத்தில் திருச்சி ,சிதம்பரம், திருவண்ணாமலை பட்டுக்கோட்டை, திருவனந்தபுரம், மேட்டுப்பாளையம், கல்லார் , ஹில் குரோவ் , குன்னூர், வெல்லிங்டன், அரவங்காடு ,கெட்டி லவ் டேல் மற்றும் உதகமண்டல ரயில் நிலையங்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

ரயில் மகோத்சவ விழாவில் வரலாற்று சிறப்புமிக்க புகைப்பட கண்காட்சி, ரயில் நிலையங்களில் கொடிஅணிவகுப்பு, பாரம்பரிய ரயில் நிலையம் குறித்த குறும்படம், பழமையான பொருட்களின் கண்காட்சி ,கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள், லேசர் நிகழ்ச்சிகள், போன்ற ரயில் சம்பந்தமான பாரம்பரிய வரலாற்று நிகழ்ச்சிகள் இடம் பெறும்

மயிலாடுதுறை முத்துப்பேட்டை மீட்டர் கேஜ் ரயில் பாதை 02.04.1894 ல் தொடங்கப்பட்டது அதனைதொடர்ந்து முத்துப்பேட்டை பட்டுக்கோட்டை ரயில் பாதை 20 .10. 1902 , பட்டுக்கோட்டை அறந்தாங்கி பாதை 31 12 1903, அறந்தாங்கி காரைக்குடி ரயில் பாதை29.03. 1952 இல் துவங்கப்பட்டன.

பட்டுக்கோட்டை ரயில் உபயோகிப்போர் சங்கத்தின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 20ஆம் தேதியை பட்டுக்கோட்டை ரயில் தினமாக கொண்டாடி வருகின்றனர்.

பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தை பாரம்பரிய ரயில் நிலையமாக தேர்வு செய்து , நிலைய நாள் நிகழ்ச்சி (மகோத்சவம் ) கொண்டாட நடவடிக்கை எடுத்த பாரதப்பிரதமர் நரேந்திர மோடி, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வே வாரிய தலைவர் சதீஸ்குமார், தெற்கு ரயில்வே பொது மேலாளர் யூ.சுப்பாராவ் , திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் பாலக் ராம் நேகி மற்றும் அதிகாரிகளுக்கு பட்டுக்கோட்டை ரயில் உபயோகிப்போர் சங்கத்தின் தலைவர் வ.விவேகானந்தம், செயலாளர் கு. முகேஷ் ,பொருளாளர் ஈகா. வைத்தியநாதன் துணைத் தலைவர் வே ராமலிங்கம் துணை செயலாளர் ப.ஆத்மநாதன் மற்றும் உறுப்பினர்கள் ரயில் ஆர்வலர்கள் நன்றி தெரிவித்தனர்.

#பட்டுக்கோட்டை #நம்ம_பட்டுக்கோட்டை.
.

கேட்ட வரங்களை அள்ளித்தரும் பட்டுக்கோட்டை அருள்மிகு ஸ்ரீ நாடியம்மன். #பட்டுக்கோட்டை  #நம்ம_பட்டுக்கோட்டை.    .
26/08/2026

கேட்ட வரங்களை அள்ளித்தரும் பட்டுக்கோட்டை அருள்மிகு ஸ்ரீ நாடியம்மன்.

#பட்டுக்கோட்டை #நம்ம_பட்டுக்கோட்டை.
.

 #தில்லைநாயகி. பட்டுக்கோட்டை to புதுக்கோட்டை. #பட்டுக்கோட்டை  #நம்ம_பட்டுக்கோட்டை.    .
21/08/2026

#தில்லைநாயகி.

பட்டுக்கோட்டை to புதுக்கோட்டை.

#பட்டுக்கோட்டை #நம்ம_பட்டுக்கோட்டை.
.

21/08/2026

திருவாரூர் மாவட்டம், ​திருத்துறைப்பூண்டியில் மாபெரும் தேசிய நெல் திருவிழா!

​ | | #பட்டுக்கோட்டை #நம்ம_பட்டுக்கோட்டை.
.

Address

Pattukkottai
614601

Telephone

+919786533175

Website

Alerts

Be the first to know and let us send you an email when நம்ம பட்டுக்கோட்டை - Namma Pattukkottai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to நம்ம பட்டுக்கோட்டை - Namma Pattukkottai:

Shortcuts

Share

Category