மனிதநேய ஜனநாயக கட்சி - பேராவூரணி சட்ட மன்ற தொகுதி

  • Home
  • India
  • Peravurani
  • மனிதநேய ஜனநாயக கட்சி - பேராவூரணி சட்ட மன்ற தொகுதி

மனிதநேய ஜனநாயக கட்சி - பேராவூரணி சட்ட மன்ற தொகுதி சமூக நீதி! சமூக நல்லிணக்கம் !! சமத்துவ ஜனநாயகம் !!!

சிதம்பரத்தில்...மஜக தலைமை செயற்குழு கூடுகிறது!தமிழ்நாடு முழுவதிலும் இருந்து மஜக செயற்குழு உறுப்பினர்கள் வருகை தர உள்ளனர்...
06/07/2026

சிதம்பரத்தில்...

மஜக தலைமை செயற்குழு கூடுகிறது!

தமிழ்நாடு முழுவதிலும் இருந்து மஜக செயற்குழு உறுப்பினர்கள் வருகை தர உள்ளனர்!

#மஜக

27/06/2026

ைமையக_நியமன_அறிவிப்பு...

மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலச் செயலாளராக இதுவரை செயல்பட்டு வந்த கலைக்குயில் இப்ராஹிம் (96775 31101) அவர்கள் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் தலைமையில் செயல்படும் ஆட்சி மன்ற குழுவின் முடிவிற்கேற்ப கட்சியின் துணை பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்படுகிறார்.

மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
M.முஹம்மது நாசர்
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
27.06.2026

27/06/2026

#நல்லெண்ண_சந்திப்பு!!

கடந்த சட்ட பேரவை முடிந்த பிறகு மாண்புமிகு பேரவைத் தலைவர் திரு.JCD பிரபாகர் அவர்களை நல்லெண்ண ரீதியாக சந்தித்தேன்.

கடந்த கால நட்பை பரிமாறி கொண்டோம்

அவரிடம் எனது 'சட்ட சபையில் சமூக நீதி குரல் ' என்ற நூலை பரிசளித்தேன்.

அப்போது பேரவையில் எங்களது இருக்கையில் பிற இருக்கைகளை போலவே 7 பேர் அமரும் வகையில் வசதி செய்து தருமாறும் கேட்டுக் கொண்டேன்.

மேலும் பேரவை உறுப்பினர்கள் தங்கும் விடுதியில், இன்னும் செய்ய வேண்டிய முழுமையான பணிகளை விரைந்து செய்துதருமாறும் கேட்டுக் கொண்டேன்.

திமுக அயலக அணி செயலாளர் மஜக மாநில துணைச் செயலாளர் இல்லம் வருகை...ஜூன்.14மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் ப...
14/06/2026

திமுக அயலக அணி செயலாளர் மஜக மாநில துணைச் செயலாளர் இல்லம் வருகை...

ஜூன்.14

மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் பேராவூரணி. சலாம் அவர்களின் திருமணம் கடந்த ஜூன் 4 ஆம் தேதி அன்று புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் நடைபெற்றது..

அதில் பங்கேற்க முடியாத சூழ்நிலையில் இன்று ஜூன் 14 அன்று பேராவூரணியில் உள்ள அவர்களது இல்லத்திற்கு வருகை தந்த திமுக அயலக அணி செயலாளரும் மேனாள் மாநிலங்களவை உறுப்பினருமான மாண்புமிகு. எம்.எம். அப்துல்லா அவர்கள் நேரில் வந்து புதுமண தம்பதிகளை வாழ்த்தினார் ..

முன்னதாக தனது இல்லம் வந்த திமுக அயலக அணி செயலாளர் m.m. அப்துல்லா அவர்களுக்கு மஜக மாநிலத் துணைச் செயலாளர் பேராவூரணி.சலாம் அவர்கள் பொன்னாடை அணிவித்து மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் சட்டமன்ற உரை தொகுப்பு அடங்கிய சட்டமன்றத்தில் சமூக நீதி குரல் என்ற புத்தகம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது..

உடன். திமுக பொறுப்பாளர் தென்னங்குடி ராஜா , திமுக செயலக அணி தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ஷாஜகான் உள்ளிட்டோர் வருகை...

தகவல்..

மஜக _ தகவல் தொழில்நுட்ப அணி
பேராவூரணி சட்டமன்ற தொகுதி

14/06/2026
03/06/2026
 #உடையநாட்டில்_பட்டமளிப்பு_விழா!! #பண்பாட்டை_பேணும்_பிள்ளைகளாக_வளர_வேண்டும்!! ைவர்_மு_தமிமுன்_அன்சாரி_பேச்சு!!ஜுன் :2தஞ்...
02/06/2026

#உடையநாட்டில்_பட்டமளிப்பு_விழா!!

#பண்பாட்டை_பேணும்_பிள்ளைகளாக_வளர_வேண்டும்!!

ைவர்_மு_தமிமுன்_அன்சாரி_பேச்சு!!

ஜுன் :2

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உடைய நாடு கிராமத்தில் கடந்த பத்தாண்டுகளாக இயங்கி வரும் சுபைதா அம்மாள் பெண்கள் கல்லூரியின் பட்டமளிப்பு விழா இன்று சிறப்புடன் நடைபெற்றது.

8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளி படிப்புடன், மதரசா கல்வியும் இணைந்து வழங்கப்படுகிறது.

மேலும் 3 ஆண்டு கால தொலைதூர டிகிரி பட்டப்படிப்பும் வழங்கப்படுகிறது.

விடுதி வசதியுடன் கூடிய ஒருங்கிணைந்த இந்த கல்வித் திட்டத்தில், உணவு உள்ளிட்ட அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது.

மலேசிய தொழில் அதிபரும், சுபைதா குழுமங்களின் தலைவருமான டத்தோ அப்துல் அஜீஸ் அவர்கள் நடத்தி வரும் இந்த கல்வி நிறுவனம், அப்பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) முதன்மையான பெண் கல்வி மையமாக திகழ்ந்து வருகிறது.

இன்று இதன் பத்தாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்.

அவரது உரையிலிருந்து முக்கிய கருத்துகள் பின்வருமாறு ...

2016 ஆம் ஆண்டு இந்த கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டபோது, அப்போது நான் சட்டமன்ற உறுப்பினராக வருகை தந்து தொடக்க விழாவில் கலந்து கொண்டேன்.

தற்போது பத்தாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவிலும் சட்டமன்ற உறுப்பினராகவே கலந்து கொண்டுள்ளேன்.

முன் கூட்டியே இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கும் பொழுது, நீங்கள் சட்டமன்ற உறுப்பினராக எங்கள் சுபைதா அம்மாள் அரபி கல்லூரிக்கு வருவீர்கள்... என்று அண்ணன் டத்தோ அப்துல் அஜிஸ் அவர்கள் கூறினார்.

பொதுக்கல்வியும், மார்க்க கல்வியும் கூடிய ஒருங்கிணைந்த கல்வியை, எந்த எதிர்பார்ப்பும் இன்றி இலவசமாக இங்கு தருகிறார்கள்.

இங்கு பயில்பவர்கள் டீ , காபி குடிப்பதற்கு கூட, பாக்கெட் பாலை வாங்கி கொடுக்காமல்; கறவை மாடுகளை பராமரித்து அதன் மூலம் தூய பசும்பாலை கொடுத்து மகிழ்கிறார்கள்.

உணவுக்கு கூட நாட்டுக் கோழிகளை வளர்த்து கொடுக்கிறார்கள்.

இங்கு வரும் பிள்ளைகளை தங்கள் பிள்ளைகளைப் போல இவர்கள் கொண்டாடுகிறார்கள்.

நீங்கள் எல்லாம் இவர்களின் குடும்பத்தினருக்காகவும், இந்த கல்வி நிறுவனத்தின் எதிர்காலத்திற்காகவும் அதிகமாக பிரார்த்திக்க வேண்டும்.

இங்கு பட்டம் பெற்று செல்லும் நீங்கள் பாட புத்தகங்களை தாண்டியும் அறிவு இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு புத்தகங்களை தேடி வாசியுங்கள்.

நீங்கள் கற்றதை உங்கள் வீடுகளுக்கு சென்று உங்கள் பெற்றோர்களுக்கும், மற்றவர்களுக்கும் எடுத்துக் கூறுங்கள்.

கல்வி என்பது சுயநலத்துடன் சுருங்கி விடக்கூடாது.

நீங்கள் கற்ற கல்வி பிறருக்கும் பயன்பட வேண்டும் .

நீங்கள் கலாச்சாரங்களையும், பண்பாடுகளையும் பேணக் கூடியவர்களாக வளர வேண்டும்.

எல்லா துறைகளிலும் நீங்கள் சாதிக்க வேண்டும் என்ற மனநிலையை உருவாக்குங்கள்.

சவால்களை எதிர்கொள்ள பழகுங்கள்.

தோல்விகளை சகித்துக் கொள்ள தயாராகுங்கள்.

வெற்றியும், தோல்வியும் கலந்தது தான் வாழ்க்கை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

IAS, IPS போன்ற எல்லா துறைகளுக்கும் பெண்கள் வர வேண்டும்.

எங்கு சென்றாலும் உங்களின் தனித்தன்மையை இழக்காமல், உங்களின் கண்ணியத்திற்கு பாதிப்பு வராமல் பணியாற்றுங்கள்.

அரசியலில் தெளிவு பெறுங்கள். நல்ல அரசியலை ஏற்று நீங்கள் விரும்பக்கூடிய கட்சிகளில் பணியாற்றலாம். ஆனால் கவர்ச்சி அரசியலுக்கு பலியாகி விடக்கூடாது.

இங்கு ஆசிரியைகளாக ஆலிமாக்கள் மட்டுமின்றி, இந்து, கிறிஸ்தவ சமூக ஆசிரியைகளும் பணியாற்றுகிறார்கள் என்பது மகிழ்ச்சியாக உள்ளது.

உங்களுக்குள் இருக்கும் நல்ல கலாச்சார பண்பாடுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அது புரிதலுக்கும், ஒற்றுமைக்கும் வழி வகுக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில் மார்க்க அறிஞர்களும், சான்றோர்களும் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.

அரங்கிற்கு வெளியே பட்டம் பெரும் மாணவிகளின் பெற்றோர்களும், உறவினர்களும் திரளாக வருகை தந்திருந்தனர்.

உடைய நாடு செல்லும் வழியில் அதிராம்பட்டினம் மற்றும் மல்லிப்பட்டினத்தில் மஜகவினர் சார்பில் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முன்னதாக 15க்கும் மேற்பட்ட கார்களில் மஜகவினர், தலைவர் அவர்களுடன் இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதில் மஜக துணைப் பொதுச் செயலாளர் ராவுத்தர்ஷா, மாநில துணைச் செயலாளர் பேரா அப்துல் சலாம், பேராவூரணி தொகுதி பொறுப்பாளர் உடையநாடு சஃபிகான் , பேராவூரணி நகர பொறுப்பாளர்கள் அசாருதீன், அப்துல்லா, அருண்குமார், சித்திக், அன்வர் நகர நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

தகவல் :

்_தொழில்நுட்ப_அணி

#பேராவூரணி_சட்டமன்ற_தொகுதி.
02.06.2026.

மே 1உழைப்பாளிகள் தின வாழ்த்துக்கள்!........................இந்த உலகம் உழைக்கும் கரங்களால் நாள்தோறும் முன்னேறிக் கொண்டிரு...
30/04/2026

மே 1
உழைப்பாளிகள் தின வாழ்த்துக்கள்!........................

இந்த உலகம் உழைக்கும் கரங்களால் நாள்தோறும் முன்னேறிக் கொண்டிருக்கிறது!

உழைப்பாளிகள்தான் இந்த உலகத்தை அழகு படுத்துகிறார்கள்!

உழைப்பாளர்களின் வியர்வைதான் நாள்தோறும் எரிபொருளாக மாறி இவ்வுலகை இயக்குகிறது!

ஆலைகளிலும், வயல்வெளிகளிலும், வெயிலிலும், வீதிகளிலும் உழைக்கும் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.
....... ... .... .................
மு.தமிமுன் அன்சாரி
தலைவர்
மனிதநேய ஜனநாயக கட்சி


#மே_தினம்
https://www.instagram.com/p/DXwhH5Vj0JR/?igsh=YnBkdjZqdWFlbm92

16/04/2026

கறுப்பு சட்டையுடன் பரப்புரை...!

ஏப்.16,

இன்று நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்படும் தொகுதி மறுவரைக்கு எதிராக மாண்புமிகு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி கண்டனத்தை வெளிப்படுத்துமாறு தெரிவித்துள்ளார்.

மக்கள் தொகையை கட்டுப்படுத்தி, இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவியதற்கு, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் தொகுதி மறுவரையில் வஞ்சிக்கப்படுவது அநியாயமாகும்.

ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தை என நமது மக்கள், தங்களின் வாழ்வியலை மாற்றிக் கொண்டதற்கு பரிசுகள் அல்லவா தந்து இருக்க வேண்டும்..?

ஆனால் அரசியல் ரீதியாக தண்டிக்கிறார்கள்.

இதனை கண்டித்து; முதல்வரின் வேண்டுகோளை ஏற்று; இன்று கருப்பு சட்டை அணிந்து தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடுகிறேன்.

#கருப்புக்கொடி_நாள்_16

DMK ITWing Pari Balan MRKP Kathiravan MRK.Panneerselvam Team Udhayanidhi Stalin M. K. Stalin DMK - Dravida Munnetra Kazhagam

 #மதசார்பற்ற_முற்போக்கு_கூட்டணியின்_பேராவூரணி சட்டமன்ற_தொகுதியின்_வேட்பாளர்_அறிமுக கூட்டம்_மற்றும் செயல் வீரர்கள் கூட்டம...
04/04/2026

#மதசார்பற்ற_முற்போக்கு_கூட்டணியின்_பேராவூரணி சட்டமன்ற_தொகுதியின்_வேட்பாளர்_அறிமுக கூட்டம்_மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் ினர்_பங்கேற்பு...!

ஏப்.04

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஆதரவு பெற்ற பேராவூரணி சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் என். அசோக் குமார் அவர்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி மற்றும் தொகுதி செயல் வீரர் கூட்டம் நடைபெற்றது..

மஜக தலைவர் தமிமுன் அன்சாரி அவர்களுடைய உத்தரவின் பெயரில் மாநில துணைச் செயலாளர் பேராவூரணி சலாம் வழிகாட்டலில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பேராவூரணி சட்டமன்ற தொகுதியின் பொறுப்பாளர் உடைய நாடு சபீக் கான் பங்கேற்று உரையாற்றினார்..

இந்நிகழ்வில் பேராவூரணி ஒன்றிய செயலாளர் அசாருதீன் நகரச் செயலாளர் அருண்குமார் பேராவூரணி நிர்வாகிகள் அப்துல்லா யூனுஸ் ரியாஸ் உள்ளிட்ட கலர் கலந்து கொண்டனர்..

தகவல்..

தகவல் தொழில் நுட்ப அணி
#பேராவூரணி_சட்டமன்ற_தொகுதி

#மனிதநேய_ஜனநாயக_கட்சி

Address

Peravurani
614804

Website

Alerts

Be the first to know and let us send you an email when மனிதநேய ஜனநாயக கட்சி - பேராவூரணி சட்ட மன்ற தொகுதி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share