Gandhia Makkal Iyakkam

Gandhia Makkal Iyakkam No 3613 0021 0004 2822
Punjab National Bank, Periamet, Chennai - 600 003
IFSC Code : PUNB0361300

தமிழருவி மணியன், நிறுவன தலைவர் - காந்திய மக்கள் இயக்கம்
Mission
"மதுவற்ற மாநிலம் - ஊழலற்ற நிர்வாகம் "
Description
சிதறிக் கிடக்கும் நல்லவர்கள் எல்லாம் ஓர் அணியில் திரண்டு நிற்க, நமக்காக உதித்திருப்பதுதான் “காந்திய மக்கள் இயக்கம் ”

“நான் மற்றவர்களைப் போன்ற மனிதன் இல்லை ” – மாவீரன் நெப்போலியன்

ஆம், நண்பர்களே ! நம் "காந்திய மக்கள் இயக்கம்" மற்றவற்றைப் போன்ற கட்சி இல்லை. பணம், பதவி, பெருமை , புகழ் எ

ன்று அன்றாடம் அலைபவர்களுக்கு இடையே மக்கள் பணி, பொதுநல நாட்டம், சமூக சேவை, தன்னலமற்ற தியாகம் என்று ("மதுவற்ற மாநிலம் - ஊழற்ற நிர்வாகம்") மாற்று அரசியல் மக்கள் அரசு அமைய புதிய தொண்டர்களின் திருக்கூட்டம் காணப் புறப்படுவோம்!!! வாருங்கள் ……

காந்திய மக்கள் இயக்கத்தில் இணைந்திடுவோம் ....
மாற்று அரசியல் மலரச் செய்வோம் ....

அன்புடன் அழைக்கும்,
தமிழருவி மணியன்.
தலைவர், காந்திய மக்கள் இயக்கம்

வங்கி கணக்கு எண் :
GANDHIYA MAKKAL IYAKKAM , A /c.

20/12/2022
16/09/2022


#காமராஜர்_மக்கள்_கட்சி
#காமராஜர்


30/07/2022
21/07/2022

21 07 22

காமராஜர் மக்கள் இயக்கத்தில் இணைந்திட அழைக்கிறேன் - தமிழருவி மணியன்

அன்புடையீர்!

வணங்கி மகிழ்கிறேன்.

பண அரசியலும், வெறுப்பு அரசியலும்
முற்றுகையிட்டிருக்கும்
தமிழகத்தில் மக்கள் நலன் சார்ந்த ஆரோக்கியமான நல்லரசியலை வளர்த்தெடுப்பது நம் கடமையாகும்.
நேர்மையும், நாணயமும்,
நல்லொழுக்கமும் நிறைந்த, ஊழலின் நிழல் கூடப் படியாத, எல்லா வகையிலும் வெளிப்படைத் தன்மை
கொண்ட, வளர்ச்சிப் பாதையில் மாநிலத்தை முன்னெடுத்துச் சென்ற
பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சியை மீண்டும் நிலை நிறுத்த அர்ப்பணிப்புடன் கூடிய மக்களை ஒன்றுதிரட்ட மிகக் கடுமையாக ஓர் தூய்மையான அரசியல் வேள்வியில் நாம் அனைவரும் ஈடுபட வேண்டும் என்பது
காலத்தின் தவிர்க்க முடியாத கட்டாயமாகும்.

53 ஆண்டுகள் நேர்மை
பிறழாமல், ஒழுக்கம்
தவறாமல், அரசியலைப்
பயன்படுத்தி ஒரு ரூபாயும் அறத்திற்குப் புறம்பாகச் சேர்க்காமல்
காமராஜர் வழியில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவன் நான். என் நெடிய அரசியல் பயணத்தில் இன்றுவரை ஓர் ஊராட்சித் தலைவர் தேர்தலில் கூட நான் நின்றதில்லை. என் இனம் மீண்டும் காமராஜரின் பொற்கால ஆட்சியைத் தரிசிக்க வேண்டும் என்பதற்கு மேல் எந்தக்
கனவும் எனக்கில்லை. நான் எடுத்த ஒவ்வொரு முயற்சியும் வீணாகிப் போனதில் ஏற்பட்ட விரக்தியில் அரசியலை விட்டே விலகி நிற்பது என்று நான் முடிவெடுத்தது இமாலயத் தவறு என்று உணர்கிறேன்.

தன் பெண்டு, தன் பிள்ளை, சோறு, வீடு என்று சுயநலமாக வாழ என் மனச்சான்று அனுமதிக்கவில்லை.
போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும் என்று முழு அர்ப்பணிப்புடன் காமராஜர் ஆட்சியை மீண்டும் மலரச் செய்ய என்னை நான் முற்றாக அர்ப்பணித்துவிட்டேன்.
காமராஜர் ஆட்சி என்ற ஒற்றை இலக்கை நோக்கி நடக்க நான்
உருவாக்கிய காந்திய மக்கள் இயக்கம், இன்று முதல் ' காமராஜர் மக்கள் இயக்கம் 'என்று பெயர் மாற்றம் பெறுகிறது.

நல்லரசியல் இந்த மண்ணில் செழிக்க வேண்டும், வெறுப்பு அரசியலும், பண அரசியலும் அடியோடு அகற்றப்பட வேண்டும், ஊழல் நடைமுறைகள் களையப்பட வேண்டும்,
இனத்தின் நலன்களையும், மாநில உரிமைகளையும் பறி கொடுக்காமல் தேசிய ஒருமைப்பாட்டை வளர்த்தெடுக்க வேண்டும், சாதிகளுக்கிடையே சமரசமும், மதங்களுக்கிடையே
நல்லிணக்கமும் மேன்மையுற வேண்டும் என்று சிந்திப்பவர்கள்
அனைவரும் காமராஜர் மக்கள் இயக்கத்தில் தங்களை இணைத்துக்
கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.

அரசியல் களம் வன்முறைக் காடாகிவிட்டது என்று
கவலைப்படுபவர்கள்,
சகல தளங்களிலும் சிஸ்டம் சீரழிந்துவிட்டது என்று சிந்திப்பவர்கள், மாற்று அரசியலை நம் வாழ்காலத்தில் காண வேண்டும் என்று
விழைபவர்கள் இனியும்
மௌனப் பார்வையாளர்களாக இல்லாமல் வீட்டுக்கு ஒருவர் காமராஜர் மக்கள் இயக்கத்தில்
இணைந்து செயலாற்ற
அன்புடன் அழைக்கிறேன். அற்புதமான இளைஞர்கள் எனக்குத் தந்த ஊக்கமும், உள்வலியும், உற்சாகமும்தான் மீண்டும் என் அரசியல் பயணத்தைத் தொடங்கச் செய்திருக்கிறது. இதில் சமூக நலனன்றி, எள்ளளவும் சுயநலமில்லை.

அன்புடன்,
தமிழருவி மணியன்

19 07 22 மாணவியின் மரணத்திற்கு காரணம் யார்? தவறு இழைத்தோரைத் தண்டித்திடுக! கள்ளக்குறிச்சி கனியமூர் சக்தி மெட்ரிகுலேஷன் ப...
19/07/2022

19 07 22



மாணவியின் மரணத்திற்கு காரணம் யார்? தவறு இழைத்தோரைத் தண்டித்திடுக!



கள்ளக்குறிச்சி கனியமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவியின் சந்தேகத்திற்குரிய மரணம், பெரும் கலவரத்தில் போய் முடிந்திருக்கிறது. மாணவியின் மரணம் தொடர்பாக பள்ளி நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகள், தந்த தகவல்கள், மாணவியின் பெற்றோருக்குத் திருப்தி அளிக்காத நிலையில் நான்கு நாட்களாக கனன்று கொண்டிருந்த சூழல், கடந்த ஞாயிறு அன்று கொதிநிலையை அடைந்து மாணவர்களின் சான்றிதழ் எரிப்பு, பள்ளிப் பேருந்துகள், இதர வாகனங்கள் எரிப்பு, பள்ளிச் சொத்துகள் சூறையாடல் என்று பல்வேறு இழப்புகள் ஏற்பட்டு, காவல்துறை வானை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய பிறகு கலவரம் கட்டுக்குள் வந்திருக்கிறது.



300க்கும் மேற்பட்டோர் கைது, பல்வேறு பிரிவுகளில் வழக்கு, மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல்துறைத் தலைவர் மாறுதல்கள், சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பு என்று அடுத்தடுத்து நடவடிக்கைகள் தொடர்கின்றன. மாவட்ட ஆட்சி நிர்வாகமும், காவல் நிர்வாகமும், நுண்ணறிவுப் பிரிவும் இன்னும் சற்று விழிப்புணர்வுடன் இருந்திருந்தால், நிலைமை கை மீறிப் போகாமல் தடுத்திருக்கலாமோ என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.



ஆயினும், தற்போது வேகமாக முடுக்கி விடப்பட்டிருக்கும் அரசு இயந்திரம், உண்மையான காரணத்தையும், குற்றவாளிகளையும் கண்டறிந்து, சட்டத்திற்கு முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத் தரும் என்று நம்புகின்ற அதே வேளையில், வன்முறையில் இறங்கி பள்ளி சொத்துகளை சேதப்படுத்தியவர்கள், மாணவர்களின் சான்றிதழ்களை எரித்தவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்தக் கலவரங்களின் பின்னணியையும் புலன் விசாரணை செய்ய வேண்டும் என்றும் காந்திய மக்கள் இயக்கம் கேட்டுக் கொள்கிறது.



பா குமரய்யா,

மாநில பொதுச் செயலாளர்,

காந்திய மக்கள் இயக்கம்.

தொடர்புக்கு: 98410 20258

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்
04/07/2022

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்

26 06 22 மதுவுக்கு எதிரான காந்திய வழி, அறப் போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பது ஏன்? இன்றைக்கு (260622), உலகளாவிய போதை ஒழிப...
26/06/2022

26 06 22



மதுவுக்கு எதிரான காந்திய வழி, அறப் போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பது ஏன்?



இன்றைக்கு (260622), உலகளாவிய போதை ஒழிப்பு தினம். இதனை ஒட்டி சிவகங்கை மாவட்ட காந்திய மக்கள் இயக்கம் சார்பாக, காரைக்குடி நகரம், காந்திபுரம் வ உ சி சாலையில் உள்ள மதுக்கடைக்கு (டாஸ்மாக்) வரும் குடிகாரர்களிடம், பல குற்றங்களுக்கு ஊற்றுக் கண்ணாக விளங்கும், மதுபோதைப் பழக்கத்திலிருந்து விடுபட, மதுவை அருந்துவதால் அவர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் ஏற்படும் தீமைகளை விளக்கி, குடிகாரர்களை மது அருந்தக் கூடாது என்று வேண்டிக் கொள்ளும் நிகழ்வுக்கு அனுமதி கோரப்பட்டு இருந்தது.



முதலில் அனுமதி தருவதாக உறுதி அளித்து இருந்த காவல்துறை, இன்றைக்கு நிகழ்ச்சி நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை என்று எழுத்து பூர்வமாக அறிவிப்பு தந்துள்ளது. காந்திய வழியில் எவருக்கும் இடையூறின்றி இந்த நிகழ்வு நடத்தப்படும் என்று உறுதி அளித்திருந்தும், சட்டம் - ஒழுங்கு சீர்கெடும், நிகழ்ச்சியில் பங்கேற்கும் காந்திய மக்கள் இயக்கத் தொண்டர்களுக்கு தங்களால் பாதுகாப்பு அளிக்க இயலாது என்று பொருள்படும் வகையில் காவல்துறை அறிக்கை தந்துள்ளது. நம்மைப் பாதுகாப்பதில் காவல்துறைக்கு இருக்கும் அர்ப்பணிப்பு உணர்வினை, நாம் தலை வணங்கிப் பாராட்டுகிறோம். ஆயினும், தமிழக அரசின் கொள்கைகளில் ஒன்றான மதுவிலக்குப் பிரச்சாரத்தை முன்னெடுக்க, காவல்துறையே தடையாக இருப்பது விந்தையாக இருக்கிறது.

கள்ளச் சாராயம் காய்ச்சுவோர், விற்போர் மறுவாழ்வு, மதுவிலக்குப் பிரச்சாரத்திற்கு 9 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக, இந்தத் துறையின் அமைச்சர் பெருமகனார், மாண்புமிகு திரு செந்தில் பாலாஜி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இந்தத் தொகை, எந்த வகையில் செலவு செய்யப்படுகிறது என்பதை அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்; காந்திய மக்கள் இயக்கம் முன்னெடுக்கும் மதுவுக்கு எதிரான காந்திய வழி அறப் போராட்டங்களுக்கு அனுமதி வழங்கிட, மாவட்ட, வட்டார, ஊரக, நகர காவல் தலைமைகளுக்கு, தமிழக அரசின் காவல்துறைத் தலைவர் திரு சைலேந்திரபாபு அவர்கள் அறிவுறுத்த வேண்டும் என்றும் காந்திய மக்கள் இயக்கம் கேட்டுக் கொள்கிறது



பா குமரய்யா,

மாநில பொதுச் செயலாளர்,

காந்திய மக்கள் இயக்கம்.

தொடர்புக்கு: 98410 20258

21 06 22அக்னிபத் திட்டம் - மாநில அரசுடன் இணைந்து செயல்படுத்துக...காந்திய மக்கள் இயக்கம் கோரிக்கைஅக்னிபத் திட்டம், இந்திய...
21/06/2022

21 06 22

அக்னிபத் திட்டம் - மாநில அரசுடன் இணைந்து செயல்படுத்துக...காந்திய மக்கள் இயக்கம் கோரிக்கை

அக்னிபத் திட்டம், இந்திய இராணுவத்தின் முப்படைகளிலும், 4 ஆண்டு காலத்திற்கு குறுகிய கால வீரராக இளைஞர்கள், இளம்பெண்களை சேர்க்கும் திட்டம் ஆகும். 17.5 வயது முதல் 21 வயதிலான ஆண், பெண் இருபாலரும் இத்திட்டத்தில் இணையலாம். 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அவர்கள் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம் ஆகும். உடற்தகுதியை பொறுத்தவரை இராணுவத்தில் சேருவதற்கு இப்போது நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் உடற்தகுதிகளே அக்னிபத் திட்டத்தில் சேருபவர்களுக்கும் பொருந்தும்.



அக்னிபத் திட்டத்தின் கீழ் தேர்வாகும் வீரர்களுக்கு முதலாம் ஆண்டில் மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளமும், கடைசி, அதாவது 4-வது ஆண்டில் மாதம் ரூ.40 ஆயிரம் சம்பளமும் வழங்கப்படும். ஆனால் இந்த சம்பளம் முழுமையாக வழங்கப்படாது. இந்த சம்பளத்தில் 30% பிடித்தம் செய்யப்பட்டு, சேவா நிதியாக மத்திய அரசின் பங்களிப்புடன் (அதே 30% அளவிலான தொகை) பணி நிறைவின் போது ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ. 11.7 லட்சம் வரிப்பிடித்தமின்றி வழங்கப்படும்.



மொத்தம் 45 ஆயிரம் பேர் இந்தத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்க்கப்படவுள்ளனர். பணிக்காலம் முடிவடைந்ததும் தேர்வு செய்யப்பட்டவர்களில் 25 சதவீதம் பேர் நிரந்தர இராணுவப் பணிக்கு சேர்த்துக் கொள்ளப்படுவர். மீதமுள்ள 75 சதவீதம் பேர் இராணுவத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். பணிக்காலத்தில் வீர மரணம் அடையும் அக்னிபத் வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடியும், அவர்கள் பணிபுரிந்திருக்க வேண்டிய காலத்துக்கான ஊதியமும் வழங்கப்படும்.



பணியின் போது அக்னிபத் வீரர்கள் உடல் ஊனமுற்றால் அவர்களுக்கு வட்டியுடன் கூடிய முழு சேவை நிதியும், அவர்கள் பணிபுரிந்திருக்க வேண்டிய காலத்துக்கான ஊதியமும் வழங்கப்படும். இதுதவிர, ஊனத்தின் தீவிரத்தை பொறுத்து அவருக்கு ரூ.46 லட்சம் வரை வழங்கப்படும். இத்திட்டத்தில் இருந்து 4 ஆண்டுகள் நிறைவு செய்து வெளியேறும் அக்னி வீரர்களுக்கு மத்திய பாதுகாப்புத்துறை, உள்துறையில் 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரு துணை ராணுவப் படைகளில் சேரும் அக்னிபத் வீரர்களுக்கு வயது வரம்பு சலுகையும் அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இருந்து 4 ஆண்டுகள் நிறைவு செய்து வெளியேறும் திறமை மிக்க அக்னி வீரர்களுக்கு விமான போக்குவரத்துத் துறையிலும் பணி முன்னுரிமை வழங்கப்படும் என விமான போக்குவரத்து அமைச்சகம் உறுதி அளித்துள்ளது.

இத்திட்டம் வெளித்தோற்றத்துக்கு சிறப்பானதாகவே தெரிகிறது. இதில் நான்காண்டுகளுக்கப் பிறகு வேலைவாய்ப்பு என்பதுதான் விவாதப் பொருளாக உள்ளது. எனவே, ஒவ்வொரு ஆண்டும் இத்திட்டத்தின் மூலம் இராணுவத்திலிருந்து வருபவர்களை ஒவ்வொரு மாநிலமும், தங்கள் மாநிலம் சார்ந்த பாதுகாப்புப் பணியில் (காவல்துறை உள்ளிட்ட துறைகளில்) நியமிக்கலாம். இராணுவத்தில் அடிப்படைப் பயிற்சிகளைப் பெற்று வரும் இவர்களை, ஏன் மாநில அரசுகள் பயன்படுத்தக் கூடாது? நான்கு ஆண்டுகள், இராணுவத்தில் பணியில் இருக்கும் போது, இவர்கள் கல்வித் தகுதியை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தித் தரலாம். இத்திட்டம் தேச பாதுகாப்புக் குறித்தானது. எனவே மாநில அரசுகளையும் இணைத்துக் கொண்டு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் ஆற்றல்மிக்க இராணுவம் உருவாகும் என்பது காந்திய மக்கள் இயக்கத்தின் கருத்தாகும்.



பா குமரய்யா,

மாநில பொதுச் செயலாளர்,

காந்திய மக்கள் இயக்கம்.

தொடர்புக்கு: 98410 20258

https://www.hindutamil.in/news/tamilnadu/813285-private-police-unit-to-inquire-into-police-station-deaths-gandhian-peopl...
14/06/2022

https://www.hindutamil.in/news/tamilnadu/813285-private-police-unit-to-inquire-into-police-station-deaths-gandhian-people-movement-demand.htmlhttps://www.hindutamil.in/news/tamilnadu/813285-private-police-unit-to-inquire-into-police-station-deaths-gandhian-people-movement-demand.html காவல் நிலைய மரணங்களை விசாரிக்க தனி காவல் பிரிவு தேவை: காந்திய மக்கள் இயக்கம்

செய்திப்பிரிவு 13 Jun, 2022 12:40 PM

சென்னை: காவல் நிலைய மரணங்கள் குறித்து விசாரிக்க தனிக் காவல் பிரிவு அமைத்திட வேண்டும் என்று தமிழருவி மணியனை தலைவராகக் கொண்டு இயங்கிவரும் காந்திய மக்கள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து இவ்வியக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பா.குமரய்யா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

''தமிழகக் காவல் துறையின் தலைவர் சைலேந்திரபாபு, கடந்த மே மாதம் திருச்சியில் நடந்த காவல்துறை அதிகாரிகள் பயிற்சி முகாமில், "காவல் நிலைய மரணங்கள், இனி இல்லை" என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார். அது வெறும் பேச்சளவிலேயே உள்ளது.

நேற்று சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி இராஜசேகர் என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். மாஜிஸ்திரேட் விசாரணைக்கும், சிபிசிஐடி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்தச் சம்பவத்திற்கு முன்னதாக, சென்னை, தலைமைச் செயலக காவல் நிலையத்தில், வினோத் என்ற குதிரை ஓட்டுநர் மரணம் அடைந்தார். வினோத் உடலில் 13 காயங்கள் இருந்ததாக, உடற்கூறு ஆய்வு அறிக்கை குறிப்பிட்டதை அடுத்து, அது கொலைக் குற்ற வழக்காக எடுத்துக் கொள்ளப்பட்டு, காவல்துறையைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். குறைந்தது 10 ஆண்டுகள் விசாரணை நடக்கலாம்; இறுதியில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று காவலர்கள் விடுவிக்கப்படுவது கூட நடக்கலாம். அதே போன்று
திருவண்ணாமலை மாவட்டம் தண்டரனை கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி என்ற மலைக்குறவர் சமூகத்தை சார்ந்த நபர் கள்ளச்சாராயம் காய்ச்சினார் என்று குற்றம் சுமத்தப்பட்டு, விசாரணையின் போது காவல் நிலையத்தில் உயிரிழந்துள்ளார். இது முதல்வர் உள்ளத்தை உருக்கிய ' ஜெய் பீம்' போன்று இன்னொரு நிகழ்வு.

1980களில் வால்டர் தேவாரம் தலைமையில் சுமார் இருபது நக்சலைட்டுகள் கொல்லப்பட்டார்கள். மோதல் என்ற பெயரில் படுகொலைகளை நடத்துவது தமிழகத்திலும் கடந்த சுமார் 40 ஆண்டுகளாக நடந்து வருகிறது. நெருக்கடி நிலைக் காலத்தில் ஆந்திராவில் மட்டும் 300க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் இவ்வாறு கொல்லப்பட்டனர்.
இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதையொட்டி மீண்டும் மோதல் கொலைகள் தொடர்ந்தன. 96-ல் மத்தியப் புலனாய்வுக் குழு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கை ஒன்றின்படி 1984-95 காலகட்டத்தில் அமிர்தசரசில் மட்டும் 2,097 உடல்கள் சட்ட விரோதமாக எரிக்கப்பட்டது தெரிய வந்தது. பிற பஞ்சாப் நகரங்களிலும் இதே நிலைதான். காணாமல் போனதாகச் சொல்லப்பட்டவர்களில் 60 விழுக்காட்டினர் கொல்லப்பட்டார்கள் என்பது இப்போது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை. கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் (85-96) ஆந்திர மாநிலத்தில் 1,049 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.

தமிழகத்தில் மோதல் கொலைகள் செய்வதில் திமுக, அதிமுக, இரண்டுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. அதிமுக ஆட்சி என்றாலே அது போலீஸ் ஆட்சிதான். அதிமுக ஆட்சியைக் காட்டிலும் சட்டம் ஒழுங்கை நிறைவேற்றுவதில் நான் ஒன்றும் குறைந்தவன் இல்லை எனக் காட்டிக் கொள்ளும் நிர்ப்பந்தம் திமுகவுக்கு உள்ளது.

இராஜசேகர் மரணத்திற்கும், வழக்கம் போல் சட்டத்தின் பிடியில் இருந்து ஒரு போதும் தப்ப முடியாது என்று, உள்துறைக்கும் பொறுப்பு வகிக்கும் முதல்வர் ஸ்டாலின் அறிக்கை கொடுப்பார். எதிர்க்கட்சித்
தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்று குரல் எழுப்புவார். ஆளும் கூட்டணியினர், கூட்டணி தர்மம் காக்க, கடிதோச்சி மெல்லப் பேசுவர்.

கடந்த அதிமுக ஆட்சியில், சாத்தான்குளத்தில் நிகழ்ந்த மரணத்தில் உயிர் இழந்தோர், வணிகப் பெருமக்கள் ஆக இருந்ததால் அமைப்பு ரீதியாக அழுத்தம் கொடுக்க முடிந்தது. இருப்பினும் இறுதித் தீர்ப்பு எப்படி வருகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். இந்த ஓராண்டில், திமுக ஆட்சியில், சென்னை எம்ஜிஆர் நகர், சேலம் ஆத்தூர், கோவை கருமத்தம்பட்டி, தஞ்சை நகரம், நாமக்கல் பரமத்தி வேலூர், ராமநாதபுரம் கீழக்கரை, நாமக்கல் கிளைச் சிறை, நெல்லை தாலுகா என்று காவல்நிலைய மரணங்கள் சம்பவித்து உள்ளன.

நீதிமன்றங்கள், அவ்வப்போது சில வழக்குகளில் போலி மோதல்களைக் கண்டிக்காமல் இல்லை. மதுசூதனன் ராவ் போலி மோதலில் கொல்லப் பட்டபோது, புகழ்பெற்ற வழக்கறிஞர் கே.ஜி.கண்ணபிரான் ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதிகள் பி.எஸ். மிஸ்ரா, சி.வி.என். சாஸ்திரி ஆகியோர் அளித்த தீர்ப்பு முக்கியமானது. அவர்கள் "காவல்துறைக் கொலைக்கும் சாதாரணக் கொலைக்கும் தனித்தனிச் சட்டங்கள் இருக்க முடியாது" என்றனர். மோதலில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகளை அனைத்துக் கிரிமினல் குற்றவாளிகளைப் போலவே புலன் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் கூறினர். புகழ்பெற்ற டி.கே.பாசு-எதிர்-மேற்குவங்க அரசு வழக்கில் நீதியரசர்கள் குல்தீப்சிங், ஏ.எஸ்.ஆனந்த் ஆகியோர் வழங்கிய தீர்ப்பும், பி.யு.சி.எல்-எதிர்-இந்திய அரசு வழக்கில் நீதியரசர்கள் ஜீவன் ரெட்டி, சுகவ் சென் ஆகியோர் வழங்கிய தீர்ப்பும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை.

காவல் நிலையங்களில், நீதிமன்ற உத்தரவின்படி சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, முறையாக இயங்கி இருந்தால் உண்மையில் நடந்தது என்ன என்பதை எளிதில் தெரிந்து கொள்ள முடியும். தெருக்களில் உள்ள சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து, பல குற்றவாளிகளைப் பிடித்து உள்ள காவல்துறை, தனது காவல் நிலையங்களில் சிசிடிவி பொருத்தத் தயக்கம் காட்டுவது ஏன்? இன்னும் ஒரு காவல் நிலையம் மரணம்
நிகழும் முன்பு, சம்பிரதாய அறிக்கைகள் கொடுப்பதற்குப் பதிலாக, சம்பிரதாய நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக, முதல்வர் அவர்கள் காவல் நிலையங்களில் சிசிடிவி பொருத்திட, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
மேலும் காவல் நிலைய மரணங்கள் குறித்து நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகளை 'பின்பற்றும் நடைமுறைகளாக' அரசு அறிவிக்க வேண்டும். போலி மோதல் சாவுகள், காவல் நிலைய மரணங்கள் குறித்து விசாரிக்க காவல்துறையிலேயே நேர்மையான அதிகாரிகள் கொண்ட தனிப்பிரிவினை அரசு அமைக்க வேண்டும் என்றும் காந்திய மக்கள் இயக்கம் கேட்டுக் கொள்கிறது.'' என்று பா.குமரய்யா தெரிவித்துள்ளார்.

காவல் நிலைய மரணங்கள் குறித்து விசாரிக்க தனிக் காவல் பிரிவு அமைத்திட வேண்டும் என்று தமிழருவி மணியனை தலைவராகக் ....

தேவைகளை அவசியமில்லாமல் பெருக்கிக் கொள்ளுதல் பாவகரமான செயலாகும் - காந்தியடிகள்
14/06/2022

தேவைகளை அவசியமில்லாமல் பெருக்கிக் கொள்ளுதல் பாவகரமான செயலாகும் - காந்தியடிகள்

Address

# 32 Thiruvengadam Street First Floor, Periyamet, Near Golden Tower, Periyar E V R High Road Chennai
Periamet
600003

Opening Hours

Monday 10am - 7pm
Tuesday 10am - 7pm
Wednesday 10am - 7pm
Thursday 10am - 7pm
Friday 10am - 7pm
Saturday 10am - 7pm

Alerts

Be the first to know and let us send you an email when Gandhia Makkal Iyakkam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Gandhia Makkal Iyakkam:

Share