15/08/2026
🇮🇳 ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம்! சுதந்திரத்தைக் காப்போம்!
இந்திய திருநாட்டின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஒற்றுமை, சமத்துவம், நீதி மற்றும் ஜனநாயகத்தின் உயரிய விழுமியங்களை பாதுகாத்து, வலிமையான இந்தியாவை உருவாக்க உறுதியேற்போம்.
இன்று 15-08-2026 - சனிக்கிழமை SDPI கட்சியின் சார்பாக கொடியேற்றும் நிகழ்ச்சி நகரத் துணை தலைவர் இஸ்மாயில் அவர்கள் தலைமையில் பெரியகுளத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.
1. SDPI கட்சியின் அலுவலகம் முன்பாக மெளலவி மு.அஹமது பெளஜுத்தீன் யூஸுஃபி, பெரியகுளம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் அவர்கள் தேசியக் கொடியேற்றினார்.
2. தென்கரை கிளை தலைவர் இம்ரான்கான் வரவேற்புரை நிகழ்த்தினார்.
தென்கரை கிளையின் முகமது சாகிப் அவர்கள் கொடியேற்றினார்.
நகரப் பொருளாளர் அபுதாஹிர் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.
3. வாகம்புளி கிளையில் கிளை தலைவர் சிராஜ் தீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாருக் அவர்கள் கொடியேற்றி சிறப்பித்தார்.
4. SBI காலணியில் SDTU கிளை தலைவர் காசிம் அவர்கள் கொடியேற்றி சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாருக், நகர பொருளாளர் அபுதாஹிர், நகர இணைச் செயலாளர் ஜாகிர் உசேன், நகர செயற்குழு உறுப்பினர்கள் தமீமுல் அன்சாரி மற்றும் ஜாபர், IT Wing தொகுதி செயலாளர் சபீக், நகர பொறுப்பாளர் இம்ரான்கான் மற்றும் கிளை நிர்வாகிகள், செயல் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.