Vanikar Sangankalin Peramaippu Kanyakumari Dist

Vanikar Sangankalin Peramaippu Kanyakumari Dist Business

22/07/2026

             #நாகர்கோவில்  #வடசேரி  #கனகமூல சந்தையில் அடிப்படை வசதிகளை செய்ய தவறிய  #மாநகராட்சி
19/07/2026


#நாகர்கோவில் #வடசேரி #கனகமூல சந்தையில் அடிப்படை வசதிகளை செய்ய தவறிய #மாநகராட்சி

16/07/2026

15/07/2026

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகாமையில் உள்ள ஈத்தங்காடு கிராமத்தை சேர்ந்த சபரிவர்மன் என்பவர் புகையிலை பொருள் விற்பனை செய்ததாக கூறி கைது செய்யப்ட்டு நாகர்கோயில் சிறையில் அடைத்த நிலையில் மர்மமான நிலையில் உயிரிழந்தார்.*
நாகர்கோவில் சிறையில் உயிரிழந்ததாக கூறப்படும் சபரிவர்மன் உடலில் 19 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது.
கை, கால்கள், நெஞ்சு பகுதிகளில் காயம்; வலது கையில் முறிவு
கை, கால்களை கட்டிப் போட்டு தாக்கியதற்கான அடையாளம் உள்ளது.
சாத்தான்குளம் சம்பவத்தை போன்றே குமரி மாவட்டத்திலும் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது வணிகர்களிடையே மிக பெரிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

💥 இந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

💥 தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

💥 உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீட்டை அரசு வழங்கி கருனை அடிப்படையில் அன்னாரது மனைவிக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும்

💥 என்ற கோரிக்கைகளை தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பு கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் சார்பாக வலியுறுத்த பட்டுள்ளது.

💥 பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வில்லை என்றால் தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பு, கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் சார்பாக, விரைவில் போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவன்

கே.பாபு
மாவட்ட தலைவர்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம்

நாகர்கோயில் மாநகராட்சியில், மாநகர ஆணையர் ஐஸ்வர்யா அவர்களுடன் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கன்னியாகுமரி கிழக்...
03/07/2026

நாகர்கோயில் மாநகராட்சியில், மாநகர ஆணையர் ஐஸ்வர்யா அவர்களுடன் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், செம்மாங்குடி சாலையில் நடைபெற்று வரும் சாலை சீரமைப்பு பணிகளால் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ஏற்பட்டு வரும் இடையூறுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மாநகர் பகுதியில் நடைபெற்று வரும் நடைபாதை அமைக்கும் பணிகளில், கடைகளின் தரைமட்டத்தை விட நடைபாதை சுமார் ஒரு அடி உயரமாக அமைக்கப்பட்டுள்ளதால், மழைக்காலங்களில் மழைநீர் கடைகளுக்குள் புகும் அபாயம் இருப்பதாக வணிகர்கள் நலன் குறித்து கவலையை எடுத்துரைத்தனர்.

மேலும் வணிகர்கள் எதிர்கொண்டு வரும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் வணிகர் நலன் சார்ந்த கோரிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

வணிகர்களின் கோரிக்கைகளை விரைந்து பரிசீலித்து, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாநகர ஆணையர் அவர்கள் உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கன்னியாகுமரி
கிழக்கு மாவட்ட தலைவர் பாபு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வடசேரி கணகமூலம் சந்தை பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் முயற்சிகள் தொடர்பாக, சந்தை வியாபாரிகளின் நலன்கள் பாதிக்...
25/06/2026

வடசேரி கணகமூலம் சந்தை பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் முயற்சிகள் தொடர்பாக, சந்தை வியாபாரிகளின் நலன்கள் பாதிக்கப்படாத வகையில் திட்டம் அமைய வேண்டும் என்ற நோக்கில், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத் தலைவர் திரு. கே. பாபு அவர்கள் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள், நாகர்கோயில் மாநகராட்சியில் மாநகர ஆணையர் திருமதி ஐஸ்வர்யா IAS அவர்கள், மாநகர தலைமைப் பொறியாளர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் முக்கிய கலந்தாலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

*அன்புடையீர் வணக்கம் 🙏*தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் சார்பில், நாகர்கோவில் *மாநகர மேயர...
25/06/2026

*அன்புடையீர் வணக்கம் 🙏*

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் சார்பில், நாகர்கோவில் *மாநகர மேயர்* திருமதி *மேரி பிரின்சி லதா* அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

அப்போது, வடசேரி பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகள் மற்றும் கணகமூலம் சந்தை தொடர்பான விவகாரங்கள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. மேலும், வணிகர்களின் நலன் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வணிகர் நலன் சார்ந்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

*நன்றி.*

*இவன்,*
PAS சபீக் மீரான்
*செய்தித் தொடர்பாளர்*
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம்

அன்புடையீர், வணக்கம்.நாகர்கோவில் மாநகராட்சியின் புதிய ஆணையர் திருமதி *ஐஸ்வர்யா, IAS* அவர்களை *தமிழ்நாடு வணிகர் சங்க பேரம...
24/06/2026

அன்புடையீர், வணக்கம்.

நாகர்கோவில் மாநகராட்சியின் புதிய ஆணையர் திருமதி *ஐஸ்வர்யா, IAS* அவர்களை *தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகள்* மரியாதை நிமித்தமாக சந்தித்து, பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இச்சந்திப்பின் போது, வணிகர்களின் நலன் மற்றும் வணிக வளர்ச்சி தொடர்பான பல்வேறு கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. மேலும், புதிய பொறுப்பை ஏற்றுள்ள ஆணையர் அவர்களுக்கு மாவட்ட நிர்வாகிகள் தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

*நன்றி.*

*அன்புடையீர் வணக்கம் 🙏*வடசேரி கணகமூலம் சந்தை பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் முயற்சிகள்  தொடர்பாக, சந்தை வியா...
24/06/2026

*அன்புடையீர் வணக்கம் 🙏*

வடசேரி கணகமூலம் சந்தை பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் முயற்சிகள் தொடர்பாக, சந்தை வியாபாரிகளின் நலன்கள் பாதிக்கப்படாத வகையில் புதிய பஸ் நிலையத்தின் திட்டம் அமைய வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு பேச்சுவார்த்தைகள் அரசு அதிகாரிகளுடன் நடைபெற்று வருகின்றது.

அதன் தொடர்ச்சியாக, *தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின்* கன்னியாகுமரி *கிழக்கு மாவட்டம்* சார்பில், *நாகர்கோயில் மாநகராட்சியில்* வைத்து
*மாநகர மேயர்* (பொ)
திருமதி மேரி பிரின்சி லதா அவர்கள், *மாநகர ஆணையர்*
திரு நிஷாந்த் கிருஷ்ணா IAS,
மாநகர தலைமைப் பொறியாளர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் முக்கிய கலந்தாலோசனைக் கூட்டம், கன்னியாகுமரி *கிழக்கு மாவட்டத் தலைவர்* திரு. *கே. பாபு* அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வடசேரி கணகமூலம் சந்தை வியாபாரிகளுடன் முன்னதாக நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகளை இக்கூட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகளுடன் விரிவாக எடுத்துரைக்க விவாதிக்கப்பட்டன.

மேலும் அடுத்தகட்ட முக்கிய முடிவுகளை எடுக்கும் வகையில், கணகமூலம் சந்தையின் அனைத்து வியாபாரிகளையும் உள்ளடக்கிய அடுத்தகட்ட ஆலோசனைக் கூட்டம் கனகமூல சந்தையில் வைத்து விரைவில் நடத்தப்பட உள்ளது. இதன் அடிப்படையாக தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளுடன் மீண்டும் கலந்தாலோசனை மேற்கொண்டு வியாபாரிகளின் நலன்களுக்கு ஏற்ற நல்ல முடிவுகள் விரைவாக எட்டப்படும் என்று பேரமைப்பு சார்பாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பேரமைப்பின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பொருளார்
திரு *A ஆதி சிவன்* அவர்கள், கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் திரு.
*S. பைசல் நிசார்* அவர்கள் மற்றும் இளைஞரணி மாநகர அமைப்பாளர்
*Dr. B. பபிஷன் ஜெரீஷ்*
மாவட்ட செய்தி தொடர்பாளர் சபீக் மீரான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நன்றி

Address

Veerapandi Gowmari Amman Temple, Theni District, Tamil Nadu
Periyakulam
625531

Alerts

Be the first to know and let us send you an email when Vanikar Sangankalin Peramaippu Kanyakumari Dist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category