18/11/2024
வேலூர் மாவட்டம் சார்பாக போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் சார்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை 17.11.2024 மாலை பேர்ணாம்பட் பகுதியில் இரண்டாம் கட்டமாக போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நான்கு கம்பம் பகுதியில் நடைபெற்றது..
மாவட்ட தலைவர் சர்பராஸ் அஹமத் தலைமை உரை நிகழ்த்தினார்.
சமூக ஆர்வலர் மார்க்க அறிஞர் நாட்டாம்கர் அக்பர் அவர்கள் போதை ஒழிப்பு குறித்து போதையால் ஏற்படும் தீமைகள் குறித்து உரையாற்றினார்..
மாவட்ட செயளாலர் ஆலியார் இர்பான் ,நகர நிர்வாகிகள் முன்னிலை : நகர செயளாலர் பைசுர்ரஹ்மான் ,நகர துணை செயளாலர் முஸ்தாக் அஹமத்,நகர பொருளாலர் அர்ஷத் அர்ஷு,நகர துணை செயளாலர் முகாரக் , ரஹமதாபாத் கிளை செயளாலர் இம்தியாஸ்,இர்ஷாத் இந்திய மாணவர் முண்ணனி மாவட்ட செயளாலர் முஜம்மில் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பொது மக்கள் அதிகம் கூடும் பகுதியில் நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் குறித்து சாலையில் போன பலர் நேரில் வந்து பாராட்டு தெரிவித்தனர்.
தொடர்ந்து போதைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தில் உள்ள சகோதரர்களுக்கு இறைவன் அருள் செய்வானாக..
அல்ஹம்துலில்லாஹ்.
* ிரிவு *