15/03/2026
கோவை மாவட்ட ஆட்சியர் உயர்திரு. பவன்குமார் ஜி. கிரியப்பனவர், இ.ஆ.ப. அவர்களை இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளையின் சார்பில் மரியாதை நிமித்தமாக சந்தித்தோம்.
கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் பறவைகளின் நலனில் அக்கறை கொண்டு, “பறவைகளுக்கு கொஞ்சம் தண்ணீர் வைப்போம்” என்ற திட்டத்தை இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளை முன்னெடுத்து வருகிறது.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக அறக்கட்டளையின் உறுப்பினர்களால் தயாரிக்கப்பட்ட தண்ணீர் தொட்டிகளை நகரப் பகுதிகளில் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று கோவை மாவட்ட ஆட்சியர் உயர்திரு. பவன்குமார் ஜி. கிரியப்பனவர், இ.ஆ.ப. அவர்களிடம் தண்ணீர் தொட்டி வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கோவை மாவட்ட வன அலுவலர் உயர்திரு. வெங்கடேஷ் பிரபு, இ.வ.ப., அவர்கள் முன்னிலையில் தண்ணீர் தொட்டி வழங்கப்பட்டது.
கோடைகாலத்தில் தாகத்தால் அவதிப்படும் பறவைகளின் நலனை கருத்தில் கொண்டு பொதுமக்களும் தங்கள் வீடு, அலுவலகம் மற்றும் சுற்றுப்புறங்களில் சிறிய பாத்திரங்களில் தண்ணீர் வைத்து பறவைகளை பாதுகாக்க வேண்டும் என்று இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. 🌳🐦
#பறவைகளுக்குதண்ணீர்
#இயற்கையைநேசி
#பறவைகளைபாதுகாப்போம்
#வனம்காப்போம்
.