These kind of highway leads to dwindling populations of Peacock, Poaching and contamination. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், சின்னபாபுசமுத்திரம் மதுரா, பண்ணைகுப்பம் கிராமத்தின் மேற்கு திசையில் அமைந்துள்ள ஏரி சற்றேறக்குறைய 250 ஏக்கரும் ,பெரியபாபுசமுத்திரம் கிராம எல்லையில் 300 ஏக்கர் ஆக மொத்தம் சுமாராக 600 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டது.இந்த ஏரிக்கு மதகடிப்பட்டு.திருபுவனை,திருவாண்டார்கோயில
் ஆகிய ஊர்களின் ஏரிகளின் வழிியாக இந்த ஏரிக்கு கடைசியாக மழை நீர் வந்தடையும்..இந்த ஏரியை வாழ்வாதறமாக நம்பி சுமார் பத்து ஊர் விவசாயிகள் விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறார்கள். மேற்படி ஊரில் அமையப்பெற்ற இந்த ஏரியில் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக நம் நாட்டினுடைய தேசிய பறவையான மயில் சுமார் 300 என்ற எண்ணிக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
இதுமட்டுமல்லாமல் இந்த ஏரியில் பல அரியவகை உயிரினங்கள் (மான், முள்ளம்பன்றி மற்றும் பல) வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இது ஒரு அடர்ந்த மரங்கள் கொண்ட பகுதி, அதுமட்டுமல்லாமல் விழுப்புரம் மாவட்டத்தில் குறிப்பாக புதுவைக்கு அருகாமையில் அமைந்திருக்கின்ற ஒரே பெரிய ஏரி இதுதான். இந்த ஏரியில் நம் தேசிய பறவையான மயில் மிக இயற்கையான சூழலில் தன்னுடைய வாழ்விட தகவமைப்பு மாறாமல் பாதுகாப்போடு வாழ்ந்து கொண்டிருக்கின்றன.மேலும் இந்த ஏரியில் நாட்டுப்பறவைவைகளான காடை, கௌதாரி போன்ற பல விதமான நாட்டுப்பறவைகள் நூற்றுக்கணக்கில் இந்த ஏரியின் இயற்க்கை சூழலில் வாழ்ந்து வருகின்றன .
இந்த ஏரியில் பல விதமான மூலிகை செடிகள் உள்ளன. இவற்றை பரித்து அருகில் உள்ள புதுவை மாநிலத்தில் விற்று தங்களின் வாழ்வியல் தேவைகளை பூர்த்தி செய்து வாழ்ந்து வரும் ஏழை மக்களுக்கான புகலிடமாக இந்த ஏரி திகழ்கிறது, மேலும் இம்முலிகைகள் இப்பகுதி மக்களுக்கு நாட்டுமருந்தாக பயன்படுகிறது, இந்த பகுதி மக்கள் பெரும்பாலும் ஏழை விவசாயிகள். இவர்களின் வாழ்வாதறமாக உள்ளது நாட்டப்பசுக்களின் பால். ஒவ்வொரு விவசாயியின் வீட்டிலும் குறைந்தது ஐந்து பசுமாடுகள் உள்ளன. இந்த மாடுகள் இந்த ஏரியையே நம்பியுள்ளன இந்த மூலிகைகளை மேய்ந்து இதன் மூலம் கிடைக்கின்ற பால் பல வகையான நோய்களை தீர்ப்பதால். இங்கு கிடைக்கக் கூடியபால் மூலிகைத்தன்மை வாய்ந்த பால் என்பதால் இதை மகளிர் சுய உதவிக்குழு மூலம் விநியோகம் செய்யப்படுகிறது,இதனால் நோயற்ற வாழ்வை மக்கள் வாழ்ந்து வருவதோடு அவர்களின் வாழ்வாதாரமும் காப்பாற்றப்படுகிறது.
இந்த ஏரியில் PWD இன் கட்டுப்பாட்டில் உள்ள நீர்பிடிப்பு பகுதி உள்ளது , இத்த நீர்ப்பிடிப்பு பகுதியில் ,புதுவை பகுதியில் உள்ள உஸ்டேரியைப் போல, பலவகை நீர்ப்பறவைகள் வந்து தங்கி இனப்பெருக்கம் செய்து வாழ்ந்து வருகின்றன. மேற்படி உயிரினங்கள் குறிப்பாக தேசிய பறவையின் வாழ்விடத்தை மற்றும் ஏனைய வன உயிரினங்களின் வாழ்வியல் இருப்பிடத்தையும் அரிய வகை மூலிகைகளையும் ஏழை விவசாயிகளின் அடிப்படை வாழ்வாதாரத்தையும் அழிக்கின்ற வகையிலே மாமல்லபுரம் புதுவை தேசிய நெடுஞ் சாலை அமைய சற்றேறக்குறைய 15 ஏக்கருக்கு மேல் பண்ணகுப்பம் பகுதியில் அமைந்துள்ள ஏரியில் இருந்து கையகப்படுத்த தேசிய நெடுஞ்சாலை 332 ஏ என்ற சாலை அபிவிருத்திக்கு நிலம் கையகப்படுத்த தமிழ்நாடு அரசு எத்தனித்தள்ளது .
அவ்வாறு இந்த பகுதியில் அமைந்துள்ள வன் உயிரினங்கள் , குறிப்பாக தேசியப்பறவையான மயில்கள் வாழம் பரப்பின் மீது சாலை அமைக்கப்பட்டால் மேற்படி குறிப்பிட்டுள்ள வன உயிரினங்கள் அழியும் சூழ்நிலை ஏற்படும். ஏரியில் வாழும் பறவை இனங்கள் வாகனங்களின் பேரிரைச்சல், வெப்பக்காற்று ஆகியவற்றால் உண்டாகும் காற்றுமாசுபாடு, ஒலிமாசுபாடு, நீலமாசுபாடு, நீர்மாசுபாடு ஆகியவற்றின் காரணமாக தங்கள் வாழ்விடத்தை இழந்து அழியும் நிலை ஏற்ப்படும். மேலும் வன உயிரினங்களின் பாதுகாப்பு சட்டம் 1972 இன் படி வன உயிரினங்களை அழிக்கின்ற வகையிவ் சாலை அமைப்பது தவறு, இதை இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கவில்லை .